ஒரு ரீசார்ஜ் செய்தால் மற்றொன்று இலவசம்! புதிய திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்!
ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் மற்றொரு ரீசார்ஜ் வேலிடிட்டி இலவசமாக வழங்கப்படுவது குறித்து...

ஏர்டெல் - கோப்புப் படம்
ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் மற்றொரு ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு முறை மட்டும் ரீசாஜ் செய்தால், முதலில் வழங்கப்படும் 28 நாள்கள் பிறகு மற்றொரு 28 நாள்களுக்கான வேலிடிட்டியை பெறலாம்.
நாட்டின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரீசார்ஜ் திட்டங்களை மாற்றி வருகிறது. அந்தவகையில், ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், இருமுறை ரீசார்ஜ் செய்ததற்கான பலனை வாடிக்கையாளர்களால் பெற முடியும்.
28 நாள்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 349 மற்றும் ரூ. 399 என இரு தொகைகளுக்கு மட்டும் இந்தச் சலுகையை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, ரூ. 349 மற்றும் ரூ. 399 என இரு தொகைகளில் எதை ரீசார்ஜ் செய்தாலும் அதற்குரிய பலன்கள் 28 நாள்களுக்குப் பிறகு, கூடுதலாக மேலும் 28 நாள்களுக்கு நீட்டிக்கப்படும்.
ரூ. 349 மற்றும் ரூ. 399 ஆகிய இரு பிரீபெய்டு திட்டத்தில் வாய்ஸ் காலிங், தினசரி 2 ஜிபி டேட்டா, நாளொன்றுக்கு 100 குறுஞ்செய்தி ஆகியவற்றைப் பெற முடியும்.
இத்துடன், ரூ. 4,000 மதிப்புள்ள அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஏர்டெல் சேஃப் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் ஆகியவை உள்ளன.
இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்தால், அவற்றை இரு மடங்கு வேலிடிட்டியுடன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Summary
Regarding the offer where a single recharge grants an additional period of validity for free...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


