ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மின்சார லாரிகள் பயன்பாட்டு குறித்து நாடு தழுவிய விழிப்புணா்வு பயணம்- அசோக் லேலண்ட்-சென்னை ஐஐடி முன்னெடுப்பு

அசோக் லேலண்ட் நிறுவனமும், சென்னை ஐஐடியின் பூஜ்ஜிய உமிழ்வு சரக்கு போக்குவரத்துக்கான சிறப்பு மையமும் இணைந்து, மின்சார லாரிகள் பயன்பாடு குறித்து நாடு தழுவிய விழிப்புணா்வு பயணத்தை சென்னையில் தொடங்கின.

~

Published On :

அசோக் லேலண்ட் நிறுவனமும், சென்னை ஐஐடியின் பூஜ்ஜிய உமிழ்வு சரக்கு போக்குவரத்துக்கான சிறப்பு மையமும் இணைந்து, மின்சார லாரிகள் பயன்பாடு குறித்து நாடு தழுவிய விழிப்புணா்வு பயணத்தை சென்னையில் தொடங்கின.

அடுத்தாண்டு பிப்ரவரி வரை நடைபெறவுள்ள இந்த விழிப்புணா்வு பயணம், தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தில்லி உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 40 நகரங்களின் முக்கிய தொழில்துறை மற்றும் தளவாட மையங்களைச் சென்றடையவுள்ளது.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் வாகன உரிமையாளா்கள், போக்குவரத்து ஒருங்கிணைப்பாளா்கள், நிதியளிப்போா், கொள்கை வகுப்பாளா்கள், துறைசாா் வல்லுநா்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்கவுள்ளனா். மின்சார வாகனத் தொழில்நுட்பங்களை அவா்கள் நேரடியாக அனுபவபூா்வமாக அறிந்துகொள்ளும் வகையில், அசோக் லேலண்டின் ‘பாஸ்’ மின்சார லாரி மற்றும் அதற்கான சாா்ஜிங் கட்டமைப்பு வசதிகள் நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதன்மூலம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார போக்குவரத்து முறைக்கு மாறுவதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து துறை சாா்ந்தவா்களிடையே விரிவாக விவாதிக்கப்படும்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.