
விதிமுறைகளை மீறியதாக ஷேர்ஸ் பஜார் மீது ரூ.20 லட்சம் அபராதம் விதிப்பு: செபி
விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஷேர்ஸ் பஜார் மீது அபராதம் விதித்த செபி.

Shares Bazaar
புதுதில்லி: உறுதியான வருமானத்தை வழங்கும் முதலீட்டுத் திட்டம் தொடர்பாக, விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில், 'ஷேர்ஸ் பஜார்' நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட ஐந்து அமைப்பினர் மீது செபி ரூ. 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
செபி உத்தரவின்படி, 'ஷேர்ஸ் பஜார்'-க்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நிறுவனத்தின் இயக்குநர் பூபால் நனவத் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி திருமலா லட்சுமி வெங்கட ரமேஷ் ஆகியோருக்கு அபராதமாக தலா ரூ. 3 லட்சம் விதிக்கப்பட்டது. மற்றொரு இயக்குநரான பிரசன்னா லட்சுமி அட்லூருக்கும் ரூ. 3 லட்சம் அபராதமும், தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி நரேஷ் மிட்டாவுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜூலை 2022 ல் தேசிய பங்குச் சந்தையிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், எழுந்த முதற்கட்டக் குற்றச்சாட்டின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
'மேக்கிங் மில்லியன்ஸ் ஃபைனான்சியலி ஃப்ரீ' என்ற திட்டத்தை 'ஷேர்ஸ் பஜார் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் வழங்கியதை செபி கண்டறிந்தது. இந்த திட்டம் ஆண்டுக்கு 18 முதல் 48 சதவீதம் வரை உறுதியான வருமானத்தை அளிப்பதாக உறுதியளித்ததுடன், முதலீட்டாளர்களின் பணத்தை பத்திரச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதாக நம்பவைத்தது.
இத்திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட பணம் பத்திரச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணம், குழுமத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான 'கிசான் பரிவார் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாக செபி தெரிவித்தது.
Summary
Sebi has imposed a fine of Rs 20 lakh on five entities, including Shares Bazaar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







