புஜ்: குஜராத்தின் புஜ் நகரில் பாஜக எம்எல்ஏ நீமா பென் ஆச்சாரியா சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் அந்த வாகனத்தின் பின்புறக் கண்ணாடி உடைந்தாலும், நீமா பென் காயமின்றித் தப்பினார்.
இதுகுறித்து நீமா பென் கூறியதாவது:
தோரி கிராமத்தில் சில வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துவிட்டு நான் புஜ் நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.
லோரியா என்னும் பகுதியைக் கடந்து வந்துகொண்டிருந்தபோது திடீரென 3 அல்லது 4 நபர்கள் எனது வாகனத்தின் மீது கல்வீசித் தாக்கினர்.
எனினும், நானும் எனது ஒட்டுநரும் இந்தத் தாக்குதலில் காயமின்றித் தப்பினோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.