ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணுக்கான பயன்பாட்டுக் காலம் நீட்டிப்பு

வெளிநாடு சென்று மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வில் பெறும்  மதிப்பெண்ணுக்கான பயன்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2019, 9:35 am


புது தில்லி: வெளிநாடு சென்று மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வில் பெறும்  மதிப்பெண்ணுக்கான பயன்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்ணின் பயன்பாட்டுக் காலம் ஓராண்டாக மட்டுமே இருந்த நிலையில், தற்போது 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில் வைத்த பரிந்துரைக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை  அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நீட் தேர்வை எழுதிய ஆண்டிலேயே ஏதோ ஒரு காரணத்தால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்களுக்கு மத்திய அரசின் இந்த சலுகை பெரிய அளவுக்கு உதவும். 

இந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி இந்தியாவில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.