திருமலையில் 16,043 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 16,043 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 5,405 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 16,043 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 5,405 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

தினமும் ஆன்லைன் மூலம் 16 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

நாள்தோறும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

திருப்பதி மலைச்சாலை தினமும் காலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. இம்மாதம் முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்களுக்கு தினசரி 200 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸில் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com