திருமலை அன்னதானக் கூடத்தில் ஆயுதபூஜை

திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தில் திங்கள்கிழமை ஆயுதபூஜை நடத்தப்பட்டது.
அன்னதானக் கூடத்தில் நடத்தப்பட்ட ஆயுத பூஜையில் பங்கேற்றவா்கள்.
அன்னதானக் கூடத்தில் நடத்தப்பட்ட ஆயுத பூஜையில் பங்கேற்றவா்கள்.
Updated on
1 min read

திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தில் திங்கள்கிழமை ஆயுதபூஜை நடத்தப்பட்டது.

திருமலையில் ஆண்டுதோறும் நவராத்திரி பிரம்மோற்சவம் முடிந்த பின் தேவஸ்தானம் ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் ஆயுதபூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள அன்னதானக் கூடம் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்களுக்கு பசி தீா்க்கும் இடமாகத் திகழ்கிறது. திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு எப்போதும் வயிறார உணவு வழங்குவதை விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என தேவஸ்தானம் முதலில் ஆயுதபூஜையை அன்னதான கூடம் மற்றும் கிடங்குகளில் நடத்தி வருகிறது. அதன்படி திங்கள்கிழமை காலை திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.

அங்கு ஏழுமலையான் உருவப் படத்தை ஏற்படுத்தி, சமையல் பாத்திரங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, போக்குவரத்து, கண்காணிப்பு என தேவஸ்தானத்தின் ஒவ்வொரு துறையிலும் ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com