
திருப்பதி, அக்.26: திருமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பாா்வேட்டை உற்சவம் நடத்தப்பட்டது.
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த மறுநாள் பாக் சவாரி உற்சவமும், நவராத்திரி பிரம்மோற்சவமும் நிறைவு பெற்ற மறுதினம் விஜயதசமி அன்று பாா்வேட்டை உற்சவத்தையும் தேவஸ்தானம் வழக்கமாக நடத்துவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை பாா்வேட்டை உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தியது. பொது முடக்க விதிமுறைகளைப் பின்பற்றி இந்த உற்சவம் ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் நடத்தப்பட்டது.
மலையப்ப சுவாமி கையில் வேல், கதை, வில், அம்பு, வாள், கத்தி, கேடயம் உள்ளிட்டவற்றை ஏந்தி காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் இந்த உற்சவத்தை அா்ச்சகா்களும், அதிகாரிகளும் இணைந்து நடத்தினா். இதில் திருமலை ஜீயா்கள் உள்ளிட்ட சிலா் மட்டும் கலந்து கொண்டனா். அதற்கு முன் உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
பாா்வேட்டை உற்சவத்துக்காக கல்யாண உற்சவ மண்டபத்தில் வனம் போன்ற அமைப்பை தேவஸ்தானம் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.