பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

அத்தியாயம் - 19

சிலர் திருமணத்திற்குப் பிறகு தங்கள் துணையிடம் அதிக எதிர்பார்ப்பை வைத்துவிட்டு அது பூர்த்தியாகாத போது அவர்கள் மீது வெறுப்பை காட்டுவார்கள்.

Updated On :

சிலர் திருமணத்திற்குப் பிறகு தங்கள் துணையிடம் அதிக எதிர்பார்ப்பை வைத்துவிட்டு அது பூர்த்தியாகாத போது அவர்கள் மீது வெறுப்பை காட்டுவார்கள். ’நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’ என்ற பாடல் வரிகள் திருமண உறவுக்கு மிகவும் பொருந்தும்.

திருமண உறவில் ‘நான்’ என்ற அகங்காரத்தில் இருந்து தம்பதியர் விடுபடவேண்டும். நாம் என்று எல்லாவற்றிலும் நினைத்தால் அந்த ஒற்றுமையே அவர்கள் வாழ்க்கையை சிறக்க வைக்கும். அதாவது, உங்களைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடக்காமல் இன்னொருவரை காதலிக்க முடியும். ‘நான்’ என்ற எண்ணம் மறைந்தால்தான், அங்கு நேசம் மலரும். அத்தகைய தம்பதியர் எக்காலத்திலும் பிரிய மாட்டார்கள்.

திருமணம் என்பது தெரியாமல்  உருவாகிவிட்ட உறவல்ல.., விழிப்புணர்வோடு உங்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது அல்லது நீங்களாகவே ஏற்படுத்திக் கொண்டது,  மேம்போக்காக அதை அணுகாமல் உள்ளார்ந்த புரிதலுடன் ஆழமான விழிப்புணர்வுடனும் வாழ்ந்தால் அதில் தோல்வி என்பதே கிடையாது. இன்னொரு உயிருடன் சேர்ந்து ஒரே கூட்டின் கீழ் வாழ்வதன் மகிழ்ச்சியை  உணர வேண்டும் எனில், அந்த உறவில் சுயநலம் இருக்கக் கூடாது. அது எப்போதும் உங்கள் கணவர் பற்றியே இருக்க வேண்டும். அவரும் இப்படி நினைத்தால்உங்கள் திருமணம் வெற்றிப் பாதையில் செல்கிறது என்று அர்த்தம். அதை சமூகத்துக்காக வெளிப்பார்வைக்காக நீங்கள் வாழவில்லை உண்மையில் உங்களுக்காக வாழுகிறீர்கள். 

திருமணம் என்பது ஒரு பந்தம். அது ஒரு அமைப்பாக வெளிப்பார்வைக்குத் தெரிந்தால் அது அப்படி அல்ல. உங்களின் சுயநலத்துக்காக மட்டுமே எதிர்கால வாழ்க்கைக்கான ஒரு இன்ஷுரன்ஸ் போல நினைத்து வாழ ஆரம்பித்தால் எல்லாமே கணக்காக நடந்துவிடும். கால்குலேஷன்களில் அல்ல வாழ்க்கை அது ஒரு அன்பின் உச்சம். நல்ல திருமண உறவு என்பது அர்ப்பணிப்பிலும் அன்பில் கரைந்து உருகுவதிலுமே நிலைத்து இருக்கும்.

தினம் தினம் பிரச்சனை , எதற்கு இந்த திருமண பந்தம் என்று வருத்தப்படும் தம்பதியர் , தன்னந்தனியாக துணையின்றி திருமண ஆசை இருந்தும் அது வாய்க்காமல் தனியாக வாழும் பெண்கள் அல்லது ஆண்களைப் பார்த்தோ, வாழ வேண்டிய வயதில் துணையை இழந்து தனியாய் துன்பப்படுபவர்களோ பார்த்தாலே உங்கள் வருத்தம் அர்த்தமற்றது என்று புரிந்துவிடும். நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற திமிருடன் ஒருவருக்கொருவர் சண்டை கோழ்களாக இருக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அதன் பிறகு அதன் சுகம் புரியும். இந்த நிமிடம் மட்டுமே நிஜம் என்பதை மனதில் வைத்து சகிப்புத்தன்மையோடு வாழுப் பழகினால் அமைதியும் சந்தோஷமும் நிரந்தரமாக அந்த வீட்டில் தங்கிவிடும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு. திருமண உறவை முறித்துக் கொண்டு நீங்கள் வெளி வந்துவிட்டீர்கள் எனில் முதலில் உங்களை சமன் நிலைக்குக் கொண்டு வர நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது தவறு இருக்கலாம் அல்லது துணையின் மீதே முழுத் தவறும் இருக்கலாம். ஆனால் முடிந்துவிட்ட விஷயத்தை மீண்டும் மீண்டும் போஸ்ட்மார்டம் செய்யாமல் உங்களை மீட்டெடுக்க அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு வருடமோ இரண்டு வருடங்களாகவோ கூட இருக்கட்டும். இதுவே மிச்சமுள்ள வாழ்க்கையை பொறுப்புடன் எதிர்நோக்கும் வழி.

’அவர் என்னை ஏமாற்றிவிட்டார்’ என்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் மேல் பழியைப் போட்டுவிட்டாலும் அதில் உங்களுக்கும் சிறிய பங்கு இருக்கும். துணையின் குறைகளைப் பட்டியல் போட்டுக் கொண்டிருப்பதும் அவருடைய நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்திகரமாக இல்லை என்பதும் அவர் உங்கள் எதிர்ப்பார்ப்புக்களுக்கு ஈடு கொடுக்கவில்லை என்பதெல்லாம் உங்கள் திருமண உறவை முறிப்பதற்கு போதிய காரணங்கள் அல்ல. அந்த உறவு உண்மையிலேயே பொறுக்க முடியாத அளவிற்கு துன்பமாய் இருந்தால், அதைவிட்டு வெளிவர அனைவருக்கும் உரிமையுண்டு, ஆனால் சின்ன காரணங்களுக்காக அல்லது மேற்சொன்ன விஷயங்களுக்காக பொறுமையும் பக்குவமும் இன்றி அந்த அழகிய உறவையும் தூக்கி எறியக் கூடாது. அப்படிப்பட்ட துணையை வழிக்குக் கொண்டு வரத் தான் மேரேஜ் கவுன்சிலிங் உள்ளிட்ட பல வழிகள் உள்ளது.

மனதளவில் ஆழமான வலியோடு வாழ்வதை விட அதிலிருந்து வெளியேறி அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாகவும் திடமாகவும் சிந்திக்கத் தெரிந்தவர்கள் துயரத்தில் வீழ்ந்து கிடக்க மாட்டார்கள்.

பேசலாம்…!

தொடர்புக்கு - டாக்டர் அபிலாஷா - 9962044569.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.