ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

12. குழந்தையைக் குளிப்பாட்டும் முறை - பகுதி 2

குழந்தையின் இடுப்புத் துணி (நாப்கின்) மற்றும் பிறப்பு உறுப்பு பகுதி பராமரிப்பு:

News image
Updated On :7 செப்டம்பர் 2015, 4:39 pm IST

குழந்தையின் இடுப்புத் துணி (நாப்கின்) மற்றும் பிறப்பு உறுப்பு பகுதி பராமரிப்பு:

1. குழந்தையின் இடுப்புத்துணி பருத்தியால் ஆனதாக இருக்க வேண்டும்.

2. இடுப்புத் துணியை (நாப்கின்) அடிக்கடி மாற்ற வேண்டும். சுமார் 2 - 3 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

3. வீட்டிலேயே சுத்தமாக துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

4. கிருமி நாசினிகள் போட்டு அலசக்கூடாது. அப்படி அலசினால், மறுபடி ஒருமுறை வெந்நீரில் அலச வேண்டும்.

5. அலசிய துணியை நல்ல வெயிலில் காயவைக்க வேண்டும்.

6. குழந்தையின் நாப்கின் மற்றும் உடைகள் உள்ள பீரோவில் அந்துருண்டை உபயோகிக்கக்கூடாது.

கிருமி நாசினி மற்றும் அந்துருண்டை, வேதிப்பொருட்கள் கலந்தவை. குழந்தையின் மென்மையான தோலைப் பாதிக்கும்.

குழந்தையின் பிறப்பு உறுப்பு பகுதியை, ஒருநாளைக்கு 2 - 3 முறை வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

1. குழந்தை மலஜலம் கழித்தவுடன், வெந்நீரில் நனைத்த காட்டன் துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.

2. உலர்ந்த துணியால் மட்டுமே சுத்தம் செய்வதுகூடாது.

3. அழுத்தி தேய்க்கக்கூடாது. துணியால் துடைத்துவிடலாம்.

தினமும் குளிக்க வைக்கும்போது, ஒருமுறை தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற எதாவது ஒரு எண்ணெய்யை குடும்பத்தின் கலாசாரத்துக்கு ஏற்ப தடவி, பிறகு சுத்தம் செய்யலாம். மருத்துவரின் அறிவுரைப்படி லோஷனும் பயன்படுத்தலாம்.

குறைமாதக் குழந்தையின் தோல் பராமரிப்பு

குறை மாதத்தில் பிறந்த குழந்தையின் மேல் தோல் (Epidermis), உள்தோல் (Dermis), தோலின் அடிப்பகுதி (Sub cutanious tissue / fat) ஆகியவை, முழு மாதத்தில் பிறந்த குழந்தையைவிட மிகவும் மென்மையாக இருக்கும். தோலின் அடர்த்தியும், சுருங்கி விரியும் தன்மையும் குறைவாக இருக்கும்.  தாயின் கருவில் 28 - 34 வாரங்களில்தான், தோலின் பகுதிகள் படிப்படியாக முதிர்ச்சி அடைகின்றன. போதுமான நோய் எதிர்ப்பு சக்தி, உடலின் வெப்பமும் நீரும் வெளியாவதைத் தடுக்கும் சக்தி ஆகியவை இந்தக் காலகட்டத்தில் ஏற்படுகின்றன. குறைமாதத்தில் பிறந்த குழந்தைக்கு இந்த சக்திகள் குறைவாக இருப்பதால், உடலில் தண்ணீர், சூடு ஆகியவை அதிகமாக வெளியேறிவிடும். மென்மையான தோலின் மூலம் நோய்க் கிருமிகள் எளிதில் தாக்கக்கூடும். இந்தச் சமயத்தில் தோலின் பராமரிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

குறைமாதக் குழந்தையை எப்படி சுத்தம் செய்வது?

1. குழந்தையை சுத்தம் செய்யும் முன், கைகளை சுமார் 1 நிமிடம் எடுத்துக்கொண்டு சோப் போட்டு நிறைய நீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.

2. வாட்ச், மோதிரம், வளையல், ப்ரேஸ்லெட் போன்ற எல்லாவற்றையும் கழற்றிவிட வேண்டும்.

3. கைகளை சுத்தம் செய்ய, ஆல்கஹால் கலந்த சுத்தம் செய்யும் திரவங்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம்.

4. குழந்தை 2.5 கிலோ எடை வரும்வரை, ஸ்பான்ச் (டவல்) குளியல் மட்டும்தான். பிறகு பேசின் குளியல் செய்யலாம்.

5. என்ன சோப்? அதிக கலர், வாசனை இல்லாத அமிலத்தன்மை இல்லாத சோப் நல்லது. கட்டி சோப் அல்லது திரவ சோப் பயன்படுத்தலாம்.

சிறு குழந்தைக்கு ஷாம்பு தேவையா? என்ன ஷாம்பு பயன்படுத்தலாம்?

குழந்தையின் மென்மையான தலைமுடிக்கு சாதாரணமாக ஷாம்பு தேவையில்லை.

குளிக்கப் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தி முடியையும் சுத்தம் செய்யலாம்.

அடர்த்தியான முடி அல்லது தலையில் ஏதாவது நோய்த் தொற்று உள்ள குழந்தையின் முடிக்கு ஷாம்பு போட்டு சுத்தம் செய்யலாம்.

ஷாம்புவில் செயற்கையாக சேர்க்கப்படும் கலர் வாசனை இருக்கக்கூடாது. சல்ஃபேட் வகையான ஆபத்தான பொருட்கள் இருக்கக்கூடாது. ஒவ்வாமை உண்டாக்கும் புரதங்கள், (உ.ம்) சில வகை முட்டை கலந்த ஷாம்பு இருக்கக்கூடாது. தோலின் அமிலத்தன்மையை பாதுகாப்பதாக அவை இருக்க வேண்டும்.

வைட்டமின் A,C,E போன்றவை, புளிப்புச் சுவை பழங்களின் கொட்டையின் சாறு (Citrus seed extract), பினாக்ஸி எத்தனால் (Phenoxy Ethanol) போன்ற ஏதாவது சேர்க்கப்பட்டு இருந்தால், குழந்தையின் தலைமுடிக்கும் தோலுக்கும் நல்லது.

குழந்தையைக் குளிக்க வைக்கும் நீரில், கிருமி நாசினிகளான

1. போவிடோன் அயோடின் (Povidone Iodine)

2. ஹெக்சா குளோரோஃபீன் (Hexa chlorophene)

3. குளோர்ஹெக்ஸிடின் (Chlorhexidine)

போன்றவை சேர்க்கக்கூடாது.

தோலுக்கு மிருதுத்தன்மை / ஈரத்தன்மை தரும் (emollients) எண்ணெய் / லோஷன்கள் தேவையா?

சிறு குழந்தையின் தோல் வெகு சீக்கிரம் உலர்ந்துவிடும். அதில் ஈரத்தன்மை இருப்பது அவசியம். எண்ணெய் / லோஷன்கள், தோலுக்கு ஒரு வழுவழுப்பைத் தந்து உராய்வை குறைக்கும்.

தோல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். உடலிலிருந்து நீர் / வெப்பம் வெளியேறுவதை தடுக்கும். எனவே, குறைமாதக் குழந்தை எடை குறைந்த குழந்தை, கெடு தாண்டி பிறந்த குழந்தைகளுக்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.

முழு மாதத்தில், 2.5 கிலோவுக்கு மேல் உடை எடையுடன் பிறந்த குழந்தைக்கு, நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு, மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தலாம்.

குழந்தையின் தலைமுடியை சுத்தமாகப் பராமரிப்பது எப்படி?

குழந்தையின் தலைமுடிதான் எவ்வளவு மென்மையானது. புசுபுசுவென்று கருமையாக சுருள் சுருளாக கொள்ளை அழகு அல்லவா? சில குழந்தைகள், தலைமுடி குறைவாக கொஞ்சம் வழுக்கையாகக்கூட பிறக்கலாம். ஆனால் அந்தப் பிஞ்சுப் பொதி போன்ற தலைமுடி, 1-2 வயதில் உதிர்ந்து பிறகு ஆரோக்கியமான புது தலைமுடி வளரும்.

குழந்தை பிறந்தவுடன் லேசான சூட்டில் நனைத்துப் பிழிந்த டவலை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்ய வேண்டும். சிறு குழந்தைக்கு மென்மையான உச்சிக் குழி (Anterior Frontenlle) இருக்கும். இது ஒன்றரை வயதில் எலும்பு வளர்ந்து கெட்டிப்படும். அதுவரை, மிகவும் மென்மையாக குழந்தைகளுக்கான தலைமுடி பிரஷ் கொண்டு தினமும் இரண்டு முறை தலை வாரலாம். நாம் பயன்படுத்தும் கூர்மையான பற்கள் கொண்ட சீப்பு கூடாது.

தலை வாருவது நிறைய குழந்தைகளுக்குப் பிடிக்கும். இதனை ரசிக்கும் குழந்தைக்கு, ஒரு நல்ல ஊக்குவிப்பு (Touch and Stimulation) கிடைக்கிறது.

(தொடரும்)

தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.