தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

23.சிக்கல்களில் பெரும்சிக்கல் மலச்சிக்கல்!

மனித உடலின் பரிணாம வளர்ச்சியில் மிகப் பழமையானது ஜீரண மண்டலம். உணர்ச்சிகளை வெளிக்காட்ட

News image
Updated On :31 ஆகஸ்ட் 2016, 9:32 am

டாக்டர் வெங்கடாசலம்

மனித உடலின் பரிணாம வளர்ச்சியில் மிகப் பழமையானது ஜீரண மண்டலம். உணர்ச்சிகளை வெளிக்காட்ட வழிமுறைகள் இல்லாமல் போனால் அவை இப்பழமையான ஜீரண மண்டலம் மூலமாக வெளிப்படக் கூடும். சிலருக்கு தேர்வுக்கோ, இண்டர்வியூவிற்கோ செல்லும் முன் குமட்டல், வாந்தி, பசியின்மை, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு விடுகிறது. வியாபார பாதிப்பு, பண நஷ்டம் ஏற்படும் போது சிலருக்கு ஜீரணக் கோளாறுகளும், வயிற்றுப் வலியும், நெஞ்சு எரிச்சலும் ஏற்படுகிறது.

உணவை ஏற்று, செரித்து உரிய நேரம் அடக்கி வைத்திருந்து பின்னர் கழிவுகளாக ஜீரண உறுப்புகள் வெளியேற்றுகின்றன. அன்பு, பாசம், நட்பு போன்ற உணர்ச்சிகளை அனுபவித்து ஏற்று, பேராசை, பொறாமை போன்ற உணர்வுகளை அடக்கி, கோபம், எரிச்சல் போன்றவற்றை மனித மனம் வெளிப்படுத்துகிறது. இந்த அடிப்படைச் செயல்கள் மன அளவில் நிறைவேறாத நிலையில் ஜீரண மண்டலம் வாயிலாக அவற்றை நிறைவேற்ற மனம் விரும்புகிறது. இதன் காரணமாகவும் பல ஜீரணக் கோளாறுகள் உருவாகின்றன. மன உளைச்சல், உணர்ச்சிவசப்படுதல் காரணமாக குடலியக்கம் பாதிக்கப்படுகிறது. மலம் கழித்தலைக் காலைக் கடன்களில் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறோம். கடன் சேர்ந்தால் சுமையும், தொந்தரவுகளும் சேரும். சில மேல்நாடுகளில் வாரத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே மலம் கழிக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறையும், உணவு பழக்கமும் தான் அதற்குக் காரணம். அவர்களது உணவில் சத்துகள் அதிகம். உணவுகள் அதிகளவு ஜீரணிக்கப்பட்டு குறைந்தளவு கழிவுகளே வெளியேற்றப்படுகிறது. நம் நாட்டில் – தென்னிந்தியாவில் அரிசி முக்கிய உணவாக உள்ளது. இதில் கழிவுப் பொருள் அதிகம். எனவே தினமும் ஒருமுறை அல்லது இரண்டு முறை மலம் கழிக்க வேண்டியுள்ளது. நார்ச்சத்துள்ள உணவுப் பொருள் குறைவாக உண்பதால், கடுமையான வெப்பத்துக்கு அதிகளவு வியர்வைக்கு ஏற்ப போதுமானவளவு நீர் அருந்தாமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. மேலும் கழிவறை வசதிகள் நம்நாட்டில் குறைவு.

ஆப்பிரிகா போன்ற நாடுகளில் நார்ச்சத்துள்ள பொருட்கள் அதிகம் உண்ணப்படுவதால் அங்கு தினமும் மூன்று, நான்கு முறை மலம் கழிக்கும் பழக்கம் உள்ளது. மலக்கழிவுகள் அதிக நேரம் குடலில் தங்குவதில்லை. சில மேல்நாடுகளில் மாவுப்பொருட்களையும், இனிப்புப் பண்டங்களையும் அதிகக் கழிவு ஏற்படாத உணவுகளையும் உண்ணப் பழகியுள்ளனர். பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்கின்றனர். இதனால் கழிவு அளவு குறைந்து விடுகிறது. மேலும் பெருங்குடலிலிருந்து மலக்குடலுக்கு கழிவுகள் மெதுவாகத்தான் செல்லும்.

மேல் நாடுகளில் காலைத் தொங்கப்போட்டு ஸ்டூலில் உட்காருவது போல மலம் கழிக்கும் அறையில் ஏற்பாடு செய்துள்ளனர். நம் நாட்டில் முழுங்கால் மடக்கி உட்காருவதால் உடல் தசைகளும், நரம்புகளும் மலம் கழிப்பதற்உ இயற்கையான முறையில் உதவுகின்றன. மூட்டு வீக்கம், மூட்டு வலிகள் உள்ள வயதானவர்களுக்கு மட்டுமே மேல்நாட்டு முறை ஓரளவு உதவக்கூடும்.

மலச்சிக்கல்களுக்கு மிக முக்கிய காரணம் குடல் இயக்கத்தில் ஏற்படும் சிக்கல். குறிப்பாக உந்துசக்தி குறைதல் (deficiency in the Peristalstic action of the large intestine), குடல் சுரப்புகள் குறைதல் (deficiency of intestinal secretions) போன்ற காரணங்களும் அஜீரணம், போதுமான நீர் அருந்தாமை, கல்லீரல் பாதிப்புகள், மலமிளக்கிகள் அதிகம் பயன்படுத்துதல், டீ, காபி, அதிகம் அருந்துதல் போன்ற காரணங்களும் மலச்சிக்கலுக்கு அடிப்படைகளாக அமைகின்றன.

பொதுவாக காலையில் விழித்து எழுந்து நடமாடத் துவங்கிய நேரத்தில் சிறிது நேரத்தில் மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டு கழிவு வெளியேறுகிறது. சிலருக்கு சாப்பிட்ட பின்புதான் இவ்வுணர்வு ஏற்படும். சிலருக்கு காபி, டீ குடித்த பின் அல்லது புகைபிடித்த பின் இவ்வுணர்வு உண்டாகும். குடல் அசைவு இயக்கம் குறைவாக உள்ளவர்கள் ஒருவிதத் தூண்டுதல் உணர்வுக்காக இப்பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மலத்தில் நீர் 75-80 சதவிகித அளவும், திடப்பொருள் 20-25 சதவிகித அளவும் உள்ளது. இந்த திடப்பொருளின் ஜீரணமாகாத உணவின் எச்சங்கள் (30 சத நார்ப்பொருட்கள்) இறந்துவிட்ட அலல்து உயிருடனுள்ள பாக்டீரியாக்கள் 30 சதம், கிரகிக்கப்படாத கொழுப்பு 10-20 ஜீரண நீர்கள், பித்தநீர், உமிழ் நீர், இரைப்பை நீர், சுணையநீர், சிறுகுடல் ஜீரணநீர் ஆகியன உள்ளன. பித்தநீரிலுள்ள நிறமிகள் மலத்திற்கு நிறம் கொடுக்கிறது. மலம் மஞ்சளாக அல்லது பழுப்பு நிறம் கலந்த மஞ்சளாக இருக்கவேண்டும். கீரைகளும், பீட்ரூட்டும் சாப்பிட்டால் அவற்றின் நிறம் மலத்தில் படியும். மலம் வெளிறி இருந்தால் பித்தநீர் நிறமிகள் (Bile Pigments) இல்லை என்றும், கல்லீரலில் பித்தப்பையில் கோளாறு என்றும் அறியலாம்.

மலங்கழிக்கும் அளவும் தடவைகளும் ஓர் ஒழுங்கிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். மலமிளக்கிகளை (Laxative) அடிக்கடி பயன்படுத்துவது அடிக்கடி எனிமா கொடுப்பது பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக முடியும். இவற்றால் மலக்குடல் இயக்கம் முற்றிலும் பாதித்து நிரந்தரமான மலச்சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இரண்டாம் உலகப்போர் மூலம் பல நாடுகளைத் தாக்கி பல லட்சம் உயிர்களைப் பலிகொண்ட சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் தீராத மலச்சிக்கல் பேர்வழி என்று சரித்திரம் கூறுகிறது. மலச்சிக்கலும் மனச்சிக்கலும் தண்டவாளங்கள் போல் இணைபிரியாதவை.

மலச்சிக்கல் காரணமாக தலைவலி, கிறுகிறுப்பு, சோர்வு, வயிற்றூக் கோளாறுகள், குடல்வால் நோய்கள், மூலம், பவுந்திரம் போன்ற ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. பெருங்குடலில் மலம் நகர்ந்து செல்லாமல் சேர்ந்து கிடப்பதால் உப்புசம் ஏற்படுகிறது. அடி வயிறு வலிக்கக் கூடும். பசியின்மை, மந்தம், தூக்கக்குறைவு, நாக்கில் மாசு ஏற்படக்கூடும்.

மலச்சிக்கல் ஏற்படாமலிருக்க அன்றாட நடைமுறைகளிலும் உணவுப்பழக்கங்களிலும் சில மாற்றங்களை கடைபிடிக்க வேண்டும். அதிகளவு காய்கறிகள், கனிகள், இயற்கை உணவுகள் சாப்பிடப் பழக வேண்டும். தினமும் நடைப்பயிற்சி, உடற்பயற்சி, ஆசனம் போன்றவை மேற்கொள்ள வேண்டும். கால் தசைகளும், வயிற்றுத் தசைகளும் போதியளவு இயக்கம் பெறக் கூடிய வகையில் பயிற்சிகள் அமைய வேண்டும். குறைந்தளவு நீரில் சமைத்து உண்ண வேண்டும். மிளகாய், கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்த வாசனை உணவுகளையும் எண்ணெயில் வறுத்த பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். சாதாரணமாக மலக்குடல் எப்போதும் காலியாக இருக்கும் மலம் மலக்குடலுக்கு வரும்போது மலம் கழிக்க வேண்டுமென்ற உணர்வு ஏற்படும். அப்போது அடக்கிக் கொண்டால் பழக்கமாகிவிடும். இரவோ, பகலோ, உணவுக்கு முன்போ, பின்போ மலம் கழிக்கும் உந்துதல் எப்போது ஏற்பட்டாலும் அடக்கி விடக்கூடாது.

குறுகிய கால மலச்சிக்கல் என்றாலும், நாள்பட்ட பிடிவாதமான மலச்சிக்கல் என்றாலும் ஹோமியோபதி சிகிச்சை மூலம் நிரந்தரமாகக் குணப்படுத்த முடியும். மலச்சிக்கலைத் தீர்க்கும் சில முக்கிய ஹோமியோபதி மருந்துகள்…

சல்பர், நக்ஸ்வாமிகா, பிரையோனியா, அலுமினா, அலுமென், சிலிகா, ஓபியம், ஹைட்ராஸ்டிஸ், அல்மோனியம், மூர், மெக்னீஷியம், மூர், பாஸ்பரஸ், தூஜா, அஸ்குலஸ், செபியா, காலின் சோனியா, மெடோரியம், காஸ்டிகம், அம்ப்ராகிரீஸா, பிளாட்டினா, கிராபைடீஸ், சானிகுலா.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டு ஹோமியோபதி மருந்துகளால் குணமடைந்த இருவர் பற்றி பார்ப்போம்.

முப்பது வயது ஆண் சிறிய ஓட்டல் நடத்துகிறார். அவருக்கு கடுமையான, பிடிவாதமான நீடித்த மலச்சிக்கல். மலம் சற்று கருநிறமாய், கடினமாய் ஆட்டுப்புழுக்கை போல் வெளியேறும். விரைகளும் ஆசனவாயும் மேல் நோக்கி இழுத்து இறுக்கமும் வலியும் ஏற்படும். அடிவயிற்றிலும் இடையிடையே இழுத்துப் பிடித்து வலி உண்டாகும். சிறுநீர் குறைவான அளவில் மெதுவாகவும் சொட்டு சொட்டாகவும் பிரியும். குறிகள் அடிப்படையில் அவருக்கு பிளம்பம் 30 வீரியத்தில் முதல் மாதமும் பிளம்பம் 200 வீரியத்தில் இரண்டாம் மாதமும் சிகிச்சையளித்தோம். சில வேளை மருந்திலேயே அவரது மலச்சிக்கல் தீர்ந்ததோடு மற்ற தொந்திரவுகளும் குறைந்து மறைந்தன.

**

இரண்டு வயது பெண் குழந்தை பிறந்த நாள் முதல் மலச்சிக்கல். அவளது பெற்றோர் தொலைபேசி மூலமே விவரங்களைக் கூறி மருந்து அனுப்புமாறு கேட்டனர். சுமார் 250 கி.மீ தூரத்திலிருந்து அவர்கள் பேசினர். (நேரில் துயரரை ஆய்வு செய்யக்கூடிய வாய்ப்பு ஒரு சில சமயங்களில் அமையாமல் போய்விடுகிறது) ஆங்கில மருத்துவர்கள் அளித்த சக்திமிக்க பேதி மருந்துகள் பயன் தரவில்லை. குழந்தை மலம் கழிக்க உட்கார்ந்தால் கதறுவாள் – துடிப்பாள். ஆனால் மலம் வராது. ஆங்கில மருத்துவர்களின் பரிந்துரைப்படி சோப்பை ஆசனவாயில் திணிப்பார்கள். அப்போதும் மலம் வராது. ஆனால் சில நாட்களுக்கு ஒரு முறை நின்றுகொண்டா மிகவும் முயன்று ஒரு கட்டை போல மலம் கழித்துவிடுவாள்.

அவளுக்கு காஸ்டிகம் அனுப்பப்பட்டது. சிக்கல் தீர்ந்துவிடவில்லை. எப்போதேனும் நின்று கொண்டு மலம் கழிப்பது மாறி உட்கார்ந்து சிரமப்பட்டு கதறியழுது மலம் கழிக்கும் நிலை ஏற்பட்டது. மலம் பெரியதாக கடினமாக, வறட்சியாக இருப்பதால் ஆசனவாயில் கீறல் ஏற்பட்டு ரத்தமும் வருவதுண்டு. குழந்தையால் தாங்க முடியாதளவு ஆசனவாய் வலி ஏற்படும். ஆசனவாயில் சோப்புகளைத் திணித்துத் திணித்து அலுத்துப் போனார்கள் பெற்றோர்கள். இக்குழந்தைக்கு லேக்டெப்ளரேட்டல் 30 மற்றும் 20ம் வீரியங்களில் ஒரு மாத காலம் கொடுத்த பின் மலச்சிக்கல் தீர்ந்தது. மலம் கழிக்கும் போது வீட்டையே அதிரச் செய்து பெற்றோரைப் புண்படுத்திய குழந்தையின் கதறலும் நின்றது.

••••

Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் - 9443145700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.