பகுதி- 19 டமால்... டுமீல்...
'எலி' படத்தை விமரிசிப்பவர்கள் மனநோயாளிகளாகத்தான் இருக்கவேண்டும் - வடிவேலு சீற்றம்.


'எலி' படத்தை விமரிசிப்பவர்கள் மனநோயாளிகளாகத்தான் இருக்கவேண்டும் - வடிவேலு சீற்றம்.
வைகைப் புயல் இப்படி ஒரு இம்சை அரசனாகவா மாறிப் பேசுவது?
***
டூ வீலரில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் கட்டாய ஹெல்மெட்.
பள்ளியிலும் அணிந்திருந்தால் ஆசிரியர்கள் குட்ட யோசிப்பார்களே!
***
டைட்டானிக் இசை அமைப்பாளர் விமான விபத்தில் பலி.
தண்ணீரில் கண்டம் இல்லாவிட்டாலும் ஆகாயத்தில் கண்டம் போலிருக்கு.
பாடகர் சஞ்சய் சுப்ரமணியன், பெண் வயலின் கலைஞர்களைத் தவிர்க்கிறார்.
பெண்களுக்கு கச்சேரியிலும் ‘இடம்’ கொடுக்கக் கூடாது என்று பாலிஸியா?
டென்னிஸ் ஸ்டெபி கிராப், கேரளாவின் ஆயுர்வேத அம்பாஸடராம்.
ஸ்டெபி சேச்சிக்கு இந்த service வித்தியாசமாக இருக்கும்.

உயர் நீதிமன்ற அறைகளுக்கான வாடகையை 485 வழக்குரைஞர்கள் கட்ட வில்லையாம்.
லாயர்களுக்கே லாயர் நோட்டீஸா?
இறுக்கமான ஜீன்ஸ் பெண்களின் கால்களை செயலிழக்கச் செய்துவிடுமாம்.
இளைஞர்களின் இதயத்தையும் வலுவிழக்கச் செய்துவிடும் அல்லவா?
அப்பள பாக்கெட்டுகளில் உயிருள்ள புழுக்கள் இருந்தனவாம்.
பாக்கெட்டில் உள்ள எக்ஸ்பயரி தேதி அப்பளத்துக்கா? புழுக்களுக்கா?
தமிழ்நாட்டு மலைப் பிரதேச வானிலை மையங்களில் ஆதிவாசிப் பெண்கள் பணி.
மழை வரப்போவதை அறிந்தவுடன் குலவை இடுவார்களா?
யோகா செய்யும் கைதிகளுக்குத் தண்டனைக் காலம் குறைக்கப்படுமாம்.
தீவிர யோகாசனத்தால் இளைத்தால் கம்பிகள் ஊடே வெளியேறி விடலாமே!
பஞ்சாப்பில் ஆசிரியர்கள் மாணவனைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய 150 வார்த்தை ரிப்போர்ட்டுகளில் சுமார் 60 பிழைகள் இருந்தனவாம்.
பிழைகளை மீறியும் ஆங்கிலம் இந்தியாவில் பிழைத்திருப்பது அதிசயம்தான்.
லஞ்சம் வாங்காத ஊழியர்களுக்கு மின் வாரியம் பாராட்டுச் சான்றிதழ்.
இதில் லஞ்ச லாவண்யம் புகுந்து விளையாடுமா?
குளிர் பானத்தில் பாக்கு பாக்கெட். குடித்தவர் மயக்கம்.
டூ இன் ஒன்னாக கூல் டிரிங்க்-கம்-ஜர்தாவா?
ஜப்பான் மிருகக்காட்சி சாலையில் உள்ள கட்டுமஸ்தான கொரில்லாவைக் காண பெண்கள் திரண்டு வருகிறார்களாம்.
பரிமாண வளர்ச்சியைத் தவற விட்ட ஒரு முரட்டு ஆணின் மொத்த உருவமாக காண்கிறார்களா?
தோனி உத்தரவிட்டால் களத்திலேயே உயிரை விடுவேன் என்றார் அஸ்வின்.
ஸ்டேடியத்தில் மண் சோறு சாப்பிடுவேன், அலகு குத்திக் கொள்வேன், காவடி எடுப்பேன் என்று சொல்லவில்லையா?

வைப்பு நிதியிலிருந்து ரூ. 5000 கோடியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடிவு.
கரடியாலும், காளையாலும் நிதி பந்தாடப் படப் போகிறதா?
சென்னை ரஷ்யக் கலாசார மையத்தில் ரஷ்ய உணவகம் திறக்கப்பட உள்ளது.
சமையலறை இரும்புத் திரையால் மறைக்கப்பட்டு இருக்குமா?
ஆக்ராவில் பொது இடங்களில் சிறுநீர் கழித்த 109 பேருக்கு ஒருநாள் சிறை.
பறக்கும் படை சர்ரென்று பாய்ந்து பிடித்ததா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...