பகுதி-20 டமால்...டுமீல்...
ஜப்பானில் இரண்டு ரோபோக்களுக்குத் திருமணம் விமரிசையாக நடந்ததாம்.அதில் யார் ரோபோ? யார் ரோபி?


ஜப்பானில் இரண்டு ரோபோக்களுக்குத் திருமணம் விமரிசையாக நடந்ததாம்.
அதில் யார் ரோபோ? யார் ரோபி?
****
ஆட்சியாளர்கள் வரலாற்று நூல்களை எழுதக் கூடாது — அப்துல் கலாம்
அவை உண்மையும் பொய்யும் கூட்டணியாக இணைந்த புனைக்கதையாகிவிடுமே!
குஜராத்தில் கன மழையால் கிர் காடுகளிலிருந்து சிங்கங்கள் இரை தேடி ஊருக்குள் நுழைந்தன.
சிங்கங்களின் காட்டில் மழை பெய்கிறது என்று சொல்ல முடியாது!
மும்பை 5 நட்சத்திர ஓட்டலில் உள்ள முடி திருத்தும் கலைஞர் வேறு ஓட்டலுக்கு மாறியதால் ஜே.ஆர்.டி டாடாவும் ஓட்டலை மாற்றிக் கொண்டாராம்.
முடி அலங்கரிக்கும் கலைஞருக்கு டாடா சூட்டிய மகுடம் இது!
***
ஐடிஐ தேர்வு அனுமதிச் சீட்டில் மாணவரின் படத்துக்குப் பதில் நாயின் படம்.
‘இது நாயமா?’ என்று கேட்டு மாணவர் சீறியிருப்பார்.
சீனப் பெருஞ்சுவரின் மூன்றில் ஒரு பாகம் மறைந்துவிட்டதாம்.
நம்மூரில் இருந்திருந்தால் போஸ்டர் ஒட்டி, சாணி தட்டியே மொத்தமாக சிதைத்து இருப்பார்கள்.

பெங்களூரில் வயதுக்கு வராதவர்கள் வண்டியை ஓட்டினால் பெற்றோர்களுக்குச் சிறைத் தண்டனை.
மகன் தந்தை, தாய்க்கு ஆற்றும் உதவி அவர்களை சிறையில் வாடச் செயலா?
ஏப்ரல்/மே மாத கேஜரிவாலின் வீட்டு மின்சார பில் ரூ. 91,000.
தீப மங்கள ஜோதி ‘நமோ நமோ’ என்று பாடி மகிழ செலவழித்து இருக்க மாட்டார்.
***
செழிப்பான நகை வியாபாரிகள் வரிசையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் டாப்பில் இருக்கிறாராம்.
நகை வியாபாரிகளில் ‘பிரபு’ என்றும் சொல்லலாமே!
அலுவலகங்களில் கோழித் தூக்கம் போடுவதால் திறமை அதிகரிக்குமாம்.
எந்தத் திறமை? குறட்டை விடும் திறமையா?
எஸ்.எம்.எஸ்-சைக் கண்டுபிடித்த மாட்டி மக்கோனான் காலமானார்.
இரங்கல் செய்திகளை ரத்தினச் சுருக்கமாக அனுப்பி மரியாதை செய்தார்களா?
இந்தியாவில் 21 போலி சர்வகலாசாலைகள் இருக்கின்றனவாம்.
கையிலே காசு வாயிலே தோசையாகச் சான்றிதழ்கள் கிடைக்குமா?
கோவளம் கடலில் மிதந்த ரூ. 40 லட்ச மதிப்புள்ள ஆடி கார்.
கப்பல் மாதிரி உள்ள காரா என்று சோதனை செய்யப்பட்டதா?
லிப்-டு-லிப் முத்தக் காட்சிக்கு 36 டேக்குகள் வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.
டூப் போட்டு எடுக்க சம்மதித்திருக்க மாட்டாரே!
பெண் தவளையைக் கவர ஆண் தவளைகள் உரக்கக் கத்துமாம்.
நுணலும் தன் வாயால் கெடாமல் அனுபவிக்கும் போலிருக்கு.

தாய் தர மறுத்தபின் இளம் பெண்ணுக்கு சிறுநீரகம் அளித்த மாமியார்.
சிறந்த ‘மம்மி’ யாரென்று மாமியார் நிரூபித்து விட்டாரா?
சிறப்பான முறையில் குப்பை சேகரிப்பவர்களுக்கு மத்திய அரசு ரூ. 1.5 லட்சம் வழங்க உள்ளது.
குப்பையில் கிடைத்த மாணிக்கமாக இதைக் கருதலாம்.
அமைச்சருக்கு இடமளிக்க விமானப் பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
என்னது? மந்திரி வந்தால் எந்திரியா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...