பகுதி-22 டமால்... டுமீல்...
சீனாவில் ஒருவர் அலுவலகத்துக்குக் குதிரையில் போய்வருகிறாராம்,குதிரை ஆபிஸ் போகும்போது, தளர்ந்த நடை போட்டுத் திரும்பும்போது


சீனாவில் ஒருவர் அலுவலகத்துக்குக் குதிரையில் போய்வருகிறாராம்.
குதிரை ஆபிஸ் போகும்போது, தளர்ந்த நடை போட்டுத் திரும்பும்போது நாலு கால் பாய்ச்சலில் வருமா?
***
லண்டன் ரயிலில் செல்போனை சார்ஜ் செய்தவர் மின்சாரம் திருடினார் என்று கைது.
மின்சாரத்தில் ஏசி. டிசி இருக்கலாம். ஆனால் ஓசி கூடாது என்பது போலீஸின் வாதமாக இருக்கும்.
தங்கச் சங்கிலியைப் பறித்த குரங்கின்மீது வழக்குப் பதிவு செய்ய கான்பூர் பெண்மணி, போலீஸுக்குக் கெடுபிடி.
கைது செய்ய வந்த போலீஸிடமிருந்து கைவிலங்கையும் குரங்கு பறித்து மறைந்து விட்டதா?
***
நயினை நாகபூசனி அம்மன் கோவிலில் சாமி புறப்பாடுக்கு மேளம், நாகஸ்வரம் வாசிக்கும் பெண்கள்.
அப்பெண்களுக்கு ஒத்து ஊதுபவர்கள் ஆண்கள்தானே?
உலகத்தின் முதல்முதலான பல் அறுவைசிகிச்சை 14,000 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டதாம்.
அந்தக் காலத்தை கற்காலம் என்பதோடு பற்காலம் என்றும் கூறுலாமே.

பஞ்சாபில் நாய் வளர்க்க ஆண்டொன்றுக்கு ரூ. 250 வரி அறிமுகம்.
குட்டிகள் போட்டால் சர்சார்ஜ் கட்ட வேண்டி வருமா?
81 வயது மூதாட்டிக்குப் பசுமாட்டின் இதயத்திலிருந்து தயாரித்த வால்வைப் பொருத்தி அறுவைசிகிச்சை செய்யப்பட்டது..
கோ மாதா, எங்கள் குல மாதா என்று மறு ‘வால்வு’ கொடுத்த பசுவைப் போற்றிப் பாடினாரா?
‘நம்பியார் மாம்பழம்’ என்கிற புராதானப் பெயரை மாற்றக்கூடாது என்று கேரள நம்பியார்கள் குரல் கொடுக்கிறார்கள்.
அந்த மாம்பழத்தை நம்பி-யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதாலா?
அயல் நாடுகளில் இந்திய வாஸ்து நிபுணர்கள் பிரபலமாகி வருகின்றனர்.
விமான நிலையங்களில் ‘OUT’ கேட் வழியாக உள்ளே நுழையவும் ‘IN’ கேட் வழியாக வெளியே வரவும் மாற்றச் சொன்னார்களா?
***
ராகுல் காந்தி, டயாபரில் இருக்கும் பாப்பா என்று பி.ஜே.பி கிண்டலடிக்கிறது.
அட! தொப்புள் கொடி இணைப்பைத் தாண்டி வந்துவிட்டார் என்றாவது ஒப்புக் கொள்கிறார்களா?
கொடும்பாவியைக் கொளுத்துவது தண்டிக்கவேண்டிய குற்றமில்லையாம்.
‘வெர்ச்சுவல்’ அக்னிப்பிரவேசத்தினால் பாவங்கள் அழிந்து பிரமுகர் புனிதமடைந்துவிடுகிறாரா?
***
அனுமதியின்றி கேரள யானை மீது சவாரி செய்த நடிகைகளுக்குக் கண்டனம்..
அவ்வளவு பருமனாகவா இருந்தாங்க?
திருடர்களுக்குத் தண்டனை வழங்கும் முன் அவர்கள் தரப்பு வாதத்தைச் சொல்ல அனுமதி அளிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்
‘நகைகளைப் பாத்தா கையிலே நமைச்சல் எடுக்குது எஜமான், அதான்’ என்று சொல்வார்கள்.
***
தன் கால்களால் தன் தலையை ஒரு நிமிடத்தில் 134 முறை அடித்து நேபாள வாலிபர் சாதனை.
இதெல்லாம் தேவையா என்று பார்வையாளர்கள் தலையில் அடித்துக் கொண்டார்களா?

இந்திய செஸ் வீராங்கனை டானியா சச்தேவுக்குக் காந்தக் கண்களாம்.
காய்களை ஓரக் கண் பார்வையிலேயே நகர்த்திவிடுவாரா?
1200 அரிசி மூட்டைகளை வட இந்தியாவிலிருந்து கும்பகோணத்துக்குக் கொண்டு வந்த சரக்கு வேகன் ஒரு வருடம் கழித்து வந்து சேர்ந்ததாம்.
புழுங்கல் அரிசியாகக் கிளம்பி புழுத்த அரிசியாக வந்து சேர்ந்து இருக்கும்.
***
தில்லி துப்புரவு ஊழியர்களை சிங்கப்பூர் அல்லது ஷாங்காய்க்குப் பயிற்சி பெற அனுப்பி வைக்கும் திட்டம்.
அவர்களை அழைத்துச் செல்ல அமைச்சர் உள்பட இருபது பேர் அடங்கிய குழுவும் செல்லும் அல்லவா?
புதிய பத்து ரூபாய் நோட்டில் ஹம்பி கல்தேர் படம் இடம்பெறுகிறது.
வெயிட்டான ஆயிரம் ரூபாய் நோட்டில் இடம்பெறுவதுதானே பொருத்தம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...