கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பகுதி- 23 டமால்... டுமீல்...

கோவில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம்.

News image
Updated On :30 ஜூலை 2015, 8:57 am

தினமணி

கோவில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம்.

காட்சிக்கு எளியவனான கடவுளை வசூல் ராஜாவாக மாற்றக் கூடாது என்றுதானே?

***

உத்தரகாண்ட்டில் குள்ளமானவர்களுக்கு மாதம் ரூ. 800 அரசு நிதி உதவி.

குழந்தைகளுக்கு காம்ப்ளான் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமா?

****

தென்னாப்பிரிக்காவில் முள்ளம் பன்றியைத் தின்ற மலைப் பாம்பு மரணம்.

பாம்பின் உள்ளே போன இரை சிலிர்த்து விஸ்வரூபம் எடுத்திருக்கும்

அமெரிக்காவில், தொழில் நுட்பக் கோளாறுகளைச் சரி செய்ய மந்திரவாதி உதவி.

இயந்திரங்கள் அருகில் மந்திரித்த எந்திரங்களை வைக்கச் சொல்வாரா?

டாக்டர்களின் வெள்ளைக் கோட்டால் கிருமிகள் பரவுவதால் அணியத்தேவை இல்லையாம்.

கருப்புக் கோட்டு என்றால் வக்கீல், வெள்ளைக் கோட்டு என்றால் டாக்டர் என்கிற சினிமாமாத்தன அடையாளம் அடிபடுமே.

Story image

இறந்த பின்னரும் 3000 சுதந்திரத் தியாகிகளுக்கு ஸ்டேட் பாங்க் 16 கோடியைப் பென்ஷனாகக் கொடுத்ததாம்.

சித்திரகுப்தனின் லெட்ஜரும் வங்கியின் கம்ப்யூட்டரும் ‘டாலி’ ஆகியிருக்காது!

கோவையில் 75,000 பூச்சிகளின் அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படுமாம்.

இங்கு எல்லோர் கண்களிலும் பூச்சி பறக்கிற மாதிரி தோன்றலாம்.

சென்னையில் ஒரு கிலோ எடையிலான தங்கக் காதணி அறிமுகம்.

உன் காது இதைச் சுமக்காது என்கிற கணவனின் எச்சரிக்கையை காதில் போட்டுக்கொள்ளவா போகிறார்கள்?

இந்தியாவில் உள்ள வக்கீல்களில் 30 சதவீதம் போலியாம்.

கருப்பு கோட்டு அணிந்த கருப்பு ஆடுகள்.

இந்தியாவில் 5 வருடங்களில் 10 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுவார்களாம்.

ஊழல்கள் பெருகப் பெருக கணக்கர்களின் தேவை பெருகும் என்றுதானே?

ஸ்டிக்கர் வகை தபால் தலைகள் விரைவில் அறிமுகமாகும்.

ஸ்டாம்புகளை ஒட்டக் கூட தண்ணீர் கிடைக்காமல் போகலாம் என்றா?

சிக்மகளூர் பள்ளியில் புகுந்த சிறுத்தையால் பதற்றம்.

கணக்கில் புலியாகும் கனவுடன் சிறுத்தை பள்ளியில் நுழைந்திருக்குமா?

தில்லியில் வீட்டு வேலை செய்யும் மகளிருக்கு அப்பாயின்ட்மென்ட லெட்டர் தரவேண்டுமாம்.

மற்ற வீடுகளைப் பற்றிய ருசிகரமான வம்புகளை சுடச்சுட சொல்ல வேண்டும் என்கிற கண்டிஷனுடனா?

அமெரிக்காவில் ஒரே மரத்தில் 40 வகை பழங்கள் காய்க்கும் அதிசயம்.

இதற்கு ‘ப்ரூட் சாலட் ட்ரீ’ என்று பெயர் சூட்டலாமே

ராபர்ட் கிளைவ் இந்தியிலுள்ள லூட் (கொள்ளை) என்ற சொல்லை ஆங்கில அகராதிக்கு அளித்தார்.

இது ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து அடித்த முதல் கொள்ளை.

Story image

இத்தாலியில் நாய் குரைப்பால் தூக்கம் கெட்டால் நாயை வளர்ப்பவருக்கு அபராதம்.

இத்தாலியில், குரைக்கும் நாய் எஜமானரின் கையைக் கடிக்கும் போலிருக்கு.

அமெரிக்க இளைஞர் விஷப் பாம்புடன் செல்பி எடுக்கும் போது கடி பட்டதால் சிகிச்சைக்கான சிலவு ரூ. 95 லட்சம்.

‘படம் நான்தான் எடுக்கணும். நீ எடுப்பதா?’ என்று சீறி கொத்திவிட்டதா?

மீரட்டில் காதலனுக்காக நடுத்தெருவில் பாய்ந்து பாய்ந்து அடித்துக் கொண்ட இரண்டு இளம் பெண்கள்.

வஞ்சிக் கோட்டை வாலிப வீரப்பா பாணியில் பஞ்ச்சோடு சொல்ல வேண்டும் என்றால், ‘சபாஷ் சரியான போட்டி!’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.