தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பகுதி-18 டமால்... டுமீல்...

மாணவியர் கன்னத்தை ஆசிரியர்கள் கிள்ளக்கூடாது என எச்சரிக்கை.இந்த எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமே.

News image
Updated On :25 ஜூன் 2015, 10:04 am

தினமணி

மாணவியர் கன்னத்தை ஆசிரியர்கள் கிள்ளக்கூடாது என எச்சரிக்கை.

இந்த எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமே.

***

குழந்தைகள் உணவான செர்லாக் பாக்கெட்டில் வண்டுகள் இருந்தன.

பூமாதிரி மாவு இருப்பதால் வண்டுகள் விரும்பி வந்திருக்கலாம்!

சுவிங்கத்தின் வயது ஒன்பதாயிரம் ஆண்டுகளாம்.

புதையுண்ட மண்டையோடுகள் இன்றும் சுவிங்கத்தை மென்று கொண்டிருக்கும்.

Story image

அமெரிக்காவில் தங்கத்தில் தோய்த்த சான்ட்விச்சின் விலை ரூ.14,000மாம்,

செய்கூலி, சேதாரம் சேர்த்தா? சேர்க்காமலா?

அமெரிக்க ஆய்வின்படி செவ்வாய்க்கிழமைகளில் 11மணி வாக்கில் விண்ணப்பித்தால் வேலை கட்டாயம் கிடைக்குமாம்.

இம்மாதிரி ஆராய்ச்சி செய்யும் வேலைகள் உட்படத்தானே?

சீனாவில் மலை கிராமங்களுக்கு வானத்தில் ரோப் காரில் செல்லும் நீதிபதிகள்.

வானளாவிய அதிகாரம் உண்டென்று கெத்தாக இருப்பார்களா?

பாபா ராம்தேவ் தயாரிக்கும் நூடுல்ஸ் விரைவில் வர இருக்கிறதாம்.

யோகாசன சிக்கலும் இணைந்து மகா சிக்கலாகத் தோன்றாதா? 

‘சவுகார்பேட்டை’ படத்தில் ஸ்ரீகாந்த்தும் ராய் லட்சுமியும் 50 பேய்களுடன் சுடுகாட்டில் சண்டை போடும் காட்சி படப்பிடிப்பு.

கால்களே இல்லாத பேய்களுக்கு கால்-ஷீட்டா?

Story image

அமெரிக்க டாலர் நோட்டுகளில் முதன் முறையாக பெண்ணின் படம்.

அதை தாராளமாக செலவழிப்பவர்களின் படம் இவ்வளவு காலம் தாழ்த்தியா?

****

டாய்லெட் பேப்பரால் தயாரான உடையை அணிந்து வந்த மாடல்.

ரசனை இவ்வளவு கீழ்த்தரமாகப் போக வேண்டாம்.

கலிபோர்னியாவில் KFC, வறுத்த முழு எலியை வழங்கியதாக புகார்.

‘ஹாப்பி ஹவர்ஸ்’ வேளையில் ஆர்டர் பண்ணி இருந்தால் பெருச்சாளியே வழங்கப்பட்டிருக்கலாம்.

Story image

ஒரு தபால் கார்டில் பிகாஸோ கையெழுத்து இட்டு வரைந்த ஓவியம் ரூ. 1.12 கோடிக்கு விற்பனை.

ஓவியத்தில் முட்டிக்கு மேல் கண்களும் தோள்களில் காதுகளும் வயிற்றில் அனுப்புபவரின் விலாசத்துக்கான வரிகளும் இருந்தனவா?

ஆறு மாதங்களுக்கு ஊடகங்களுடன் பேச மாட்டேன் என பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் அறிவிப்பு.

இந்த அறிவிப்பை ஊடகங்களைக் கூட்டி செய்தாரா?

***  

ஸ்ரீவில்லிபுத்தாரில் 107 வயதிலும் யோகா செய்யும் நெசவுத் தொழிலாளர்.

யோகாவினால் உடல்நலம் தறிகெட்டுப் போகாமல் இருக்கிறதா?

காதலனின் பூனை கடித்ததால் காதலனைக் கடித்துக் குதறிய காதலி.

அது ஒரு பெண் பூனையாகத்தான் இருக்கும்.

அண்ணா நகர் இடுகாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை உபயோகிப்பவர்களுக்கு பேனா பரிசாக அளிக்கப்படுகிறதாம்.

‘பென்’ டாஸ்டிக் ஐடியா!

இந்த வருட சங்கீத கலாநிதி விருது சஞ்சய் சுப்ரமணியனுக்கு என அறிவிப்பு.

விவசாயத்துக்கு நஞ்சை, புஞ்சை போல சங்கீதத்துக்கு ஒரு சஞ்சய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.