15. கணிப்பதும் கவனிப்பதும்
அந்த இளைஞர் பெயர் சி.ப. ஆதித்தனார். அவர் தொடங்கிய நாளிதழ் தினத்தந்தி. அவர் லண்டனில் தினத்தந்தியைப் பார்க்கவில்லை. அவர் பார்த்தது பலதரப்பட்ட



அந்த இளைஞர் பெயர் சி.ப. ஆதித்தனார். அவர் தொடங்கிய நாளிதழ் தினத்தந்தி. அவர் லண்டனில் தினத்தந்தியைப் பார்க்கவில்லை. அவர் பார்த்தது பலதரப்பட்ட மனிதர்களும் வெகு ஆர்வத்துடன் விரும்பிப் படித்துக்கொண்டிருந்த ‘டெய்லி டெலிகிராப்’ என்ற ஆங்கில செய்தித் தாளை. அதன்பின் அந்த செய்தித் தாளின் பல்வேறு பக்கங்களைப் பார்த்திருக்கிறார். அவ்வளவுதான்.
கவனித்த பிற்பாடு அவர் என்ன செய்தார் என்பதுதான் அதே நிகழ்வைப் பார்த்த மற்றவர்களுக்கும் அவருக்கும் இடையே இருந்த வேறுபாடு.
அவர் கண்கள் கவனித்து வாங்கி அனுப்பிய செய்திகள் ஒன்றல்ல, இரண்டு.
முதலாவது பலரும் ஆர்வமுடன் படிக்கிறார்கள் என்பது. இரண்டாவது செய்தி அந்த செய்திதாளில் இன்ன இன்ன விவரங்கள் இப்படி இப்படிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது.
இத்துடன் அவருடைய செயல்பாடு A அற்புதமாக முடிந்தது.
நாமும் இப்படி ஓர் நாளிதழ் தொடங்கலாமே என்ற எண்ணம் வந்தது அல்லவா? அந்த எண்ணம் எங்கிருந்து வந்தது? வெளியில் இருந்தா?
சில நேரங்களில் சிலருக்கு அப்படி வெளியில் இருந்தும் கிடைப்பதுண்டு. “ஏனப்பா நீ இப்படி ஒன்றைச் செய்யலாமே! உன்னால் செய்ய முடியுமே. இது நன்றாக வருமே” என்பது போல நட்போ உறவோ அல்லது வேறு எவருமோ சொல்லலாம். தூண்டலாம்.
அப்படி வெளியில் இருந்து வந்தால், அதை ஒருவர் சரியாக உள்வாங்கிக்கொண்டுவிட்டால் அதுவும் செயல்பாடு A தான். B அல்ல.

அந்த இளைஞருக்கு அந்தக் குறிப்பிட்ட எண்ணம் உள்ளே தோன்றியது. உள்ளிருந்து ஊறியது. விவேகானந்தர் சொன்னதை நினைவுப்படுத்திப் பார்த்தால் தெரியவரும். செய்தித்தாள் ஒன்று நாமும் தொடங்கலாம் என்ற எண்ணம் வந்தது மனதில் இருந்து.
மனதில் இருந்து எப்படி வரும்? அங்கே என்ன இருக்கிறது?
உள்ளே என்ன இல்லை? ஒரு நூற்களஞ்சியமே இருக்கிறது. பரந்துபட்ட ஞானம்.
எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதே இளங்கரிடம் எப்போதுமே இருந்திருக்கிறது. ஆனால் லண்டனில் படிக்கப் போயிருந்த போது மட்டும் அந்த எண்ணம் அந்த இளைங்கருக்குத் தோன்றக் காரணம் என்ன?
பலரும் ஆர்வமுடன் படிப்பதைப் பார்த்தது ஒரு புறத் தூண்டுதல். ஆங்கிலத்தில் சொல்லுவதென்றால் An external trigger.
ஆக, விவேகானந்தர் சொன்னதில் A யும் இருக்கிறது B யும் இருக்கிறது.
விவேகானந்தர் என்ன சொன்னார்?
‘பிரபஞ்சத்தின் எல்லையற்ற நூற்களஞ்சியம் உங்கள் சொந்த மனதிற்குள்ளேயே இருக்கிறது. புறவுலகம் நீங்கள் உங்கள் மனதை ஆராய்வதற்காக அமைந்த வெறும் ஒரு தூண்டுகோல் , வாய்ப்பு மட்டுமே’
முன்பு ரங்கராஜன் என்ற ஒரு நோயாளியை 40 நிமிடங்கள் அமைதியாக ஆராய்ந்துவிட்டு, அவருக்கு வந்திருப்பது கேன்சர் அல்ல. Sarcoidosis என்று தெளிவாகச் சொன்ன அந்த மருத்துவரை நினைவிருக்கலாம்.

அவர் அந்தத் தகவலைப் பெற்றதும் அவருடைய மனதில், சிந்தையில், மூளையில் இருந்துதான். மனதுக்குள் இருக்கும் அவரது லைப்ரரியில் இருந்துதான்.
அவர் அளவே, அல்லது அந்த மருத்துவரைவிட அதிகமாக மருத்துவப்படிப்பு படித்தவர்களின் மனங்களிலும் அப்படிப்பட்ட நூலகங்கள் உண்டு. அப்படிப் பட்ட பல்வேறு மருத்துவர்கலும் முன்பு அதே ரங்கராஜனை ஆரய்ந்தார்கள். அவர்களுடைய மனங்களையும் ரங்கராஜனின் உடல்நிலை மற்றும் பல்வேறு ரிப்போர்ட்டுகள் புறத் தூண்டுதல் செய்திருக்கும்.
ஆனால், அவர்கள் தூண்டப்படவில்லை.
அதவாது அவர்களிடம் முதல் செயல்பாடான சரியாக கவனித்தல் உள்வாங்குதல் A சரியாக நடக்கவில்லை. அதனால் அல்லது அதற்குமேல் அடுத்த சிந்திக்கும் செயல்பாடான B யும் நடக்கவில்லை. அதனால் மேலோட்டமாக, தவறாக ரங்கராஜனுக்கு வந்திருந்தது பல்வேறு வியாதிகள் என்று நாளுக்கு ஒன்று, ஆளுக்கு ஒன்றைச் சொன்னார்கள். ஒரு மருத்துவர் கேன்சர் என்றுகூட கணித்தார்.
கிரிக்கெட்டில் மட்டை பிடிப்பவர் பந்தை கவனித்தல் செயல்பாடு A. அந்த பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ளுவது என்பது யோசித்து முடிவெடுப்பது செயல்பாடு B.
B மனதில் இருந்து வருவது. அந்த முடிவு விளையாட்டரங்கில், மைதானத்தில் கிடைக்காது. மனதில் முடிவாகும், ஏறிப் போய் அடிப்பதா அல்லது மட்டையைத் தூக்கிக்கொண்டு பந்தை அதன் போக்கில் போகவிடுவதா அல்லது தடுத்து ’டிபென்ஸ்’ ஆடுவதா என்று.

‘எனக்கு சின்ன அம்மை வரவே வராது. என் முகத்தில் கோரமான வடுக்கள் நிச்சயம் ஏற்படாது. காரணம், எனக்கு ஏற்கனவே மாட்டம்மை வந்து போய்விட்டது’ என்று ஒரு பால்காரப் பெண் சொன்ன வாக்கியத்தை எட்வெர்ட் ஜென்னர் ‘கவனித்தது’ செயல்பாடு A. அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது செயல்பாடு B. அவர் மனது அலசி ஆராய்ந்தது நொடிப் பொழுதில் இருக்கலாம். ஆனால் அவ்வளவு விரைவாக அவர் யோசித்தது அவர் மனதினுள், நூலகத்துக்குள்.
அது வரை பல கோடி பேரைக் கொன்ற அந்த கொடிய நோய் பற்றி ஜென்னர் தெரிந்துதானே வைத்திருந்தார். அவர்தானே இப்போது இப்படி ஒரு வேக்சினேஷன் முறையைக் கண்டுபிடித்தார். அதை அவர் முன்னரே செய்திருக்கலாமே என்று இனி கேள்வி வராது. காரணம், அவருக்கு ஒரு புறத்தூண்டுதல் வந்தபோதுதான், அவரால் அப்படி ஒரு முடிவிற்கு வர முடிந்திருக்கிறது என்பது இப்போது தெளிவாகியிருக்கும்.

இந்த A,B, C எல்லாம் கொஞ்சம் தியரி போல இருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். அதனால் இப்போது ஒரு பிராக்டிகல் வொர்க். ஒரு ஆக்டிவிட்டி..
என்ன செய்யலாமா?
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முக்கோணத்தில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியத்தை ஒரே ஒரு முறை பாருங்கள். அதன்பின் அதைப் பார்க்கக்கூடாது.
இங்கே சொல்லப்படும் வழிமுறைகளை சரியாக கவனிக்க வேண்டும். அதேபோலத்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் நம்மைப் பற்றி நம்முடைய தற்போதைய நிலை பற்றி நமக்கு சரியான புரிதல் கிடைக்கும்.
சரியாக செய்வதற்கு பரிசெல்லாம் கிடையாது. தவிர, எப்படிச் செய்தோம் என்பதை வேறு எவரும் பார்க்கவும் போவதில்லை. இது ஒரு சுயபரிசோதனை. ஆகவே, சொல்லப்படும் வழிமுறையை நேர்த்தியாக பின்பற்றுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முக்கோணத்தில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியத்தை ஒரே ஒரு முறைதான் பார்க்கவேண்டும்.
.
பார்த்த பின்பு வேறு ஒரு தாளில் – முக்கோணத்தில் எழுதப்பட்டிருக்கும் அந்த வாக்கியத்தை மட்டும் எழுதவேண்டும்.
இதைப் படிக்கும் நேரம், பேப்பர் எடுத்து எழுத வசதியாக இல்லையா? அப்படியென்றால் (மட்டும்) ஒரு முறை பார்த்துவிட்டு, முக்கோணத்தில் எழுதப்பட்டிருக்கும் அந்த வாக்கியத்தை, முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டு, வாய்விட்டு சத்தமாகச் சொல்லுங்கள். எழுத இயன்றவர்கள் எழுதிவிடுங்கள். அதுதான் சிறந்த முறை.
என்ன சரிதானே.
ஓகே. ஆரம்பிக்கலாம்.

.
என்ன எழுதினீர்கள்?
யாரங்கே? அந்தக் குற்றவாளியைக் கொண்டுவாருங்கள் இங்கே என்றா?
அப்படி எழுதியிருந்தாலோ, வாய்விட்டுச் சொல்லும் போது அப்படிச் சொல்லியிருந்தாலோ அது தவறு.
அதில் என்ன தவறு?
முக்கோணத்தில் கொடுக்கப்படிருக்கும் வாக்கியத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள். என்ன எழுதியிருக்கிறது?
’அந்தக் ’ என்ற சொல் இரண்டு முறை- மேல் வரிசையில் ஒரு முறையும் கீழ் வரிசையில் ஒரு முறையும்- கொடுக்கப்பட்டிருக்கிறது இல்லையா?
அதை கவனித்தீர்களா? அப்படியே எழுதினீர்களா? அப்படியே எழுதியிருந்தால்..
உங்கள் செயல்பாடு A நன்றாக இருக்கிறது. அந்தக் என்ற சொல்லை ஒருமுறை மட்டும் எழுதியிருந்தால் உங்கள் கவனிப்பில் கொஞ்சம் வேகம் இருக்கிறது.
இருப்பதை 'கவனிப்பது’ வேறு. இப்படித்தான் இருக்கும் என்று ’கணிப்பது’ வேறு.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...