உங்களுக்குள் கோடிக்கணக்கான தகவல்கள் சேர்ந்திருக்கலாம். ஆனால், அவையெல்லாம் உண்மையாகப்போகின்றனவா, பொய்யாகப்போகின்றனவா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில், அவற்றின் அர்த்தம் நீங்கள்தான். அச்சம், கோபம், பொறாமை, கவலை, குழப்பம் போன்ற உணர்ச்சிகளால் ஆக்கப்பட்ட சிறையைச் செய்தது நீங்கள்தான். நீங்களே செய்த சிறையில், நீங்களே போய் உட்கார்ந்துகொண்டு, உங்களை நீங்களே பூட்டிக்கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் நீங்களே செய்துவிட்டு என் நிகழ்காலம் சரியில்லை, எனக்கு ராசியில்லை, எனக்கு நல்லதே நடக்காது, எனக்கு எதிர்காலமில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டும், நம்பிக்கொண்டும் இருக்கிறீர்கள்! நாம் விரும்பினால், நம்மால் ஆரோக்கியமாக, வெற்றியோடு வாழமுடியும் - ஹெரால்டைப்போல. சிந்தித்துப் பாருங்கள்.