ஒரு படத்தில், நோயாளிக்குப் போட வேண்டிய ஊசியை ஒரு பைத்தியம் டாக்டருக்கே போட்டுவிடும். அந்தப் பைத்தியம் வேறு யாருமல்ல, நாம்தான்! நமக்கு ஏற்பட்ட பிரச்னையை நம்முடைய உடல் படாத பாடுபட்டு தீர்க்க முயற்சி செய்துகொண்டிருக்கும்போது, அம்முயற்சிகளையெல்லாம் தோற்கடிக்கும்விதமாக, நம் உடலின் எதிர்ப்பு சக்தியையெல்லாம் காலி செய்யும்விதமாக, நாம்தான் மாத்திரைகளையும் டானிக்குகளையும் இன்னபிறவையும் உள்ளே செலுத்தி, குணமாகும் காலத்தை தள்ளிப்போடுகிறோம், அல்லது குணமாகாமலே இருக்க ஏற்பாடுகளைச் செய்துகொள்கிறோம்! என்ன, ஆச்சரியமாக உள்ளதா? எல்லோருக்கும் தெரிந்த, தும்மல், இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு இதை நான் இப்போது விளக்க இருக்கிறேன். போகலாமா?