சரி, மனிதர்கள் வேண்டாம். வெறும் தண்ணீரை எடுத்துக்கொள்வோமே. மண்பானைத் தண்ணீர், மழைத் தண்ணீர், சாக்கடைத் தண்ணீர், கடல் நீர், வியர்வை நீர், குடிநீர், வடிநீர், முனிசிபாலிடி குழாய்த் தண்ணீர், பாழாய்ப்போன உயிரற்ற பிஸ்லரி நீர், ஜம்ஜம் புனித நீர் – இவையெல்லாம் ஒன்றா? புனித கங்கை நீரும் கூவம் நீரும் ஒன்றா? எல்லாமே ‘ஹெச்.ட்டூ.ஓ.’-தான் என்ற வாதம் சரியா? நிச்சயமாக இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரியும். கொல்பவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே என்று கீதையில் கிருஷ்ணன் சொல்வதைப்போல, நாம் இங்கே பேசமுடியாது. அது வேறு, இது வேறு. ஒரு பெண் வாந்தி எடுத்தால் கர்ப்பமாகி இருக்கிறாளோ என்று சந்தேகப்படலாம். ஆனால் ஒரு ஆண் வாந்தி எடுத்தால் அப்படி சந்தேகப்பட முடியாது! அப்படி ஒருவர் சந்தேகப்பட்டால், அவரைப் பற்றி நாம் சந்தேகப்படும்படி ஆகிவிடும்!