‘அடடா, நான் மருந்து ஒன்னும் எடுத்துவரலியே’ என்று முதலில் சொன்ன மருத்துவர், கொஞ்ச நேரம் கழித்து, ‘சரி, ஒரு அற்புதமான வெளிநாட்டு மாத்திரை ஒன்னு இருக்கு. அது ரொம்ப காஸ்ட்லி. கண்ண மூடு, வாயைத் திற, மாத்திரையை நாக்கில் வைக்கிறேன். இருபது விநாடிகள் வைத்திரு. வயித்து வலி போயிடும். அப்புறமா மாத்திரையை நா எடுத்துடுவேன். அதக்கழுவிட்டு மறுபடி நான்கூட பயன்படுத்திக்கலாம். சரியா?’ என்று சொல்லிவிட்டு, அவர் நாக்கில் சட்டென ஒரு மாத்திரையை வைத்து அழுத்தினார். சரியாக இருபது விநாடிகள். என்ன அற்புதம்! வயிற்று வலி போயே விட்டது!