ஆசனம் 9. சலபாசனம்
இன்று உலகப் புகழ்பெற்ற தொழில் நிறுவனமாகத் திகழ்கிறது அவர்களது நிறுவனம்.

சங்கரராமனும் கல்யாணியும் திருநெல்வேலிக்காரர்கள். திருமணத்துக்குப் பிறகு சென்னைக்குப் பிழைக்க வந்து, கடுமையான உழைப்பாலும், நேர்மையாலும், ஒரு தொழில் நிறுவனத்தை ஸ்தாபித்து உயர்ந்தவர்கள்.
இன்று உலகப் புகழ்பெற்ற தொழில் நிறுவனமாகத் திகழ்கிறது அவர்களது நிறுவனம். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள், அமெரிக்காவில் போய் உட்கார்ந்துகொண்டார்கள். சங்கரராமனும் கல்யாணியும் மட்டும் நிறுவனத்தை நடத்திக்கொண்டு வருகின்றனர்.
சங்கரராமன் - கல்யாணி தம்பதியின் அறுபதாம் ஆண்டு திருமண நாள் நெருங்கிக்கொண்டிருந்தது.
இரண்டு மகன்கள், ஒரு மகள். மூவருமே வெளிநாடுகளில் நல்ல உத்தியோகங்களில் இருக்கிறார்கள்.
அவர்கள் அமெரிக்காவில் பெரிய பெரிய உத்தியோகங்களில் இருப்பதால், பெரிய பெரிய வருவாய்களில் கொழித்துக்கொண்டிருந்தார்கள். பெற்றோரைக் கண்களைப்போல் அங்கிருந்தே பார்த்துக்கொண்டார்கள். ஒவ்வொன்றுக்கும் வேலைக்கு ஆள். அப்பாவும் அம்மாவும் குனிய வேண்டாம். நிமிரவும் வேண்டாம். அவர்களுக்குப் பதில் குனியவும் நிமிரவும் கூடவே பணியாட்கள் சுற்றிக்கொண்டிருப்பார்கள்! அத்தனை பேருக்கும் நல்ல சம்பளம்.
தங்களை அரும்பாடுபட்டு வளர்த்து ஆளாக்கி அமெரிக்கா வரை சென்று குடியேறவைத்த பெற்றோரின் அறுபதாம் கல்யாணத்தை தடபுடலாகத் நடத்த வேண்டும் என்று பிள்ளைகள் மூவரும் கூடிப் பேசியிருந்தார்கள். கல்யாணத்தை அதிக வாடகையுள்ள பெரிய திருமண மண்டபத்தில் நடத்த முடிவு எடுத்து, அறுபதாம் கல்யாணம் என்பதால் அறுபது வகை பதார்த்தங்களுக்கும் ஆர்டர் கொடுக்கச் சொல்லிவிட்டார்கள்.
நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு, அப்பா அம்மாவின் வங்கிக் கணக்குகளில் அங்கிருந்தபடியே பணத்தைக் கொட்டிக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டாம் என்றால், பிள்ளைகள் கேட்பதாக இல்லை. எங்க அப்பா அம்மாவுக்காக நாங்கள் செலவழிக்கிறோம். அதைத் தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று திமிரோடு அவர்களிடமே சொல்லிவிட்டார்கள்.
சொன்னதைச் செய்யுங்கள் என்று ஆணை பிறப்பித்த பிள்ளைகளை மீற முடியாமல் தவித்தனர் சங்கரராமனும் கல்யாணியும்.
மூன்று தினங்களுக்கு முன்னதாகவே அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து இறங்கிவிட்டனர் பிள்ளைகள். கல்யாண மண்டபத்தில் காலை பதினொரு மணிக்கு அறுபதாம் கல்யாணம் நடந்தேறியது.
கூட்டம், டைனிங் ஹாலுக்குள் பாய்ந்தது. உணவுப் பதார்த்தங்களைப் பார்வையிடுவதற்கே பிள்ளைகள் மூவரும் முண்டியடித்துக்கொண்டு ஹாலுக்குப் பாய்ந்தார்கள். ஆனால், அங்கே பரிமாறப்பட்ட உணவு வகைகளைப் பார்த்ததுமே டென்ஷனாகிப்போனார்கள்!
என்ன சமையல் இது? என்று ‘ஹெட் குக்’கிடம் விசாரித்தார்கள். உங்கள் அப்பா அம்மா ஆர்டர் கொடுத்ததைத்தான் செஞ்சோம். அவங்ககிட்ட போய் கேளுங்க சார் என்று கை விரித்தார்கள்.
மூன்று பேரும் வரிந்துகட்டிக்கொண்டு, மூச்சிறைக்க பெற்றோரின் ஓய்வறைக்குப் போய் காரணத்தைக் கேட்டார்கள்.
நாங்கதானப்பா செய்யச் சொன்னோம். பாருங்கப்பா, ஒரே சமயத்துல அறுபது பதார்த்தங்களை இலையில வைச்சா யாரால சாப்பிட முடியும், நீங்களே சொல்லுங்க. சும்மா தொட்டுத் தொட்டுப் பார்த்துட்டு, அப்படியே வெச்சிட்டு எழுந்து போயிடுவாங்க. அந்த இலை அப்படியே குப்பைத் தொட்டிக்குத்தான் போகும். இப்படி வீணாக்கறதுக்கா நீங்க சம்பாதிக்கறீங்க?
பணத்தைச் சிக்கனப்படுத்தறதுக்காக இப்படி செஞ்சீங்களா. நாங்கதான் நல்லா சம்பாதிக்கறோமே. எங்க முடிவுல நீங்க ஏம்ப்பா தலையிடறீங்க என்று உரிமையோடு கத்தினாள் மகள் நித்யா.
நீங்க அப்படிக் கேப்பீங்கன்னு தெரியும். அதனாலதான் உங்க பட்ஜெட்டுக்கு குறையாம, மொத்தமா கூட்டாஞ்சோறு பண்ணச் சொல்லிட்டோம் என்றார் சங்கரராமன்.
ஐயோ அவ்வளவு சோற்றையும் யார் தலைல கொட்டறது? என்று எகிறினான் மூத்தவன்.
முழுசா கேளுடா என்று விளக்கினாள் கல்யாணி.
சென்னைல இருக்கற முக்கியமான ஆதரவற்றோர், குழந்தைகள், முதியோர் இல்லங்களுக்கு கூட்டாஞ்சோறை அனுப்பி வெச்சிட்டோம். நீங்க அறுபது பதார்த்தங்களுக்குக் கணக்கு பண்ணி அனுப்பின பணத்துக்கு கூட்டாஞ்சோறே பண்ணியாச்சு. புள்ளி விவரமா, பில்லோட கணக்கு இருக்கு. இரு எடுத்துட்டு வரேன்.
எழுந்த அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தான் மூத்தவன்.
நாங்க கணக்கு கேக்கலை. அறுபதாம் கல்யாணத்தை அறுபது வகை பதார்த்தங்களோ ரிச்சா நடத்தனுன்னு பெரிய பெரிய கனவுகளோட வந்தோம். ஆனா இப்படி பண்ணி, ஒரு ஏழை வீட்டுக் கல்யாணத்தைவிடக் கேவலமாக்கீட்டீங்களே…
அடப்போங்கப்பா. நீங்க வளர்ந்தே ஏழையாத்தானே. இன்னிக்குத்தானே உங்க காசும் பணமும். நீங்க வளர்ந்து ஆளானதே, அந்த கூட்டாஞ்சோறு சாப்பிட்டுத்தான், அதை மறந்துடாதீங்க. கூட்டாஞ்சோறுன்னு சாதாரணமா நெனைக்காதீங்க. ஏழெட்டு காய்கள ஒண்ணா போட்டுப் பொங்கி, குடும்பத்துல எல்லாரும் ஒண்ணா உட்காந்து சாப்பிட்ட பாரம்பரியச் சோறு அது. எல்லாருமே ஒத்துமையா வாழணுங்கறதை வலியுறுத்துற சோறுதான் கூட்டாஞ்சோறு.
எங்களை மன்னிச்சுடுங்க. நீங்க அடிக்கடி கூட்டாஞ்சோறைப் பத்திச் சொல்லியிருக்கீங்க. கிராமத்துல சின்ன வயசுல சாப்பிட்டதும் நினைவிருக்கு. எப்படியோ உங்க மனசு நெறையணும், அதுதான் எங்களுக்குத் திருப்தி என்றனர் மூவரும்.
அதற்குள், சாப்பிட்டு முடித்த கூட்டம், அவர்களை மொய்த்துக்கொண்டது.
எப்படி இப்படி ஒரு ஐடியா பண்னீங்க? பெருமைக்காக இலை நிறைய அயிட்டங்களை, முகத்துல அடிக்கிற மாதிரி பரப்பி வெக்காம, கச்சிதமா கூட்டாஞ்சோறு போட்டு அசத்தீட்டீங்களே. சூப்பரான அயிட்டம். இந்த மாதிரி எந்தக் கல்யாணத்துலயும் சாப்பிட்டதே இல்லை. ரொம்பத் திருப்தியா போறோம் என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டிருந்தனர்.
பார்த்தீங்களா என்று சங்கரராமனும் கல்யாணியும் கண்களால் கேட்க, பிள்ளைகள் வாய்மூடி புன்னகைத்தனர்.
ஆசைகளை ஒருமுகப்படுத்துவதே பிரத்யாகாரம்.

ஆசனம் 9 – சலபாசனம்

(வெட்டுக்கிளி ஆசனம்)

பெயர்க் காரணம்

சம்ஸ்கிருத மொழியில் சலபம் என்றால் வெட்டுக்கிளி. இலைகளையே உணவாகத் தின்னும் பூச்சியினம் வெட்டுக்கிளி. வெட்டுக்கிளிகளின் கால்கள் மேல் நோக்கி உயர்ந்திருக்கும். அதுபோன்று நமது உடலை குப்புறக்கிடத்திய நிலையில், கால்களை மட்டும் உயர்த்தி செய்யக்கூடிய ஆசனம் என்பதால், இதை சலபாசனம் அல்லது வெட்டுக்கிளி ஆசனம் என்று சொல்வார்கள்.

பொதுவாக, ஆசனங்கள் ஒன்றுக்கொன்று மாற்று ஆசனங்களாகவே முறைப்படுத்தப்பட்டுள்ளன. முன்பக்கம் வளைந்தால் அடுத்ததாகப் பின்பக்கவளைவு ஆசனம் வரும். இடப் பக்கவாட்டு வளைவு இருந்தால், அடுத்ததாக வலப் பக்கவாட்டு வளைவு வரும்.

அந்த வகையில், சலபாசனம் என்ற இந்த ஆசனம், புஜங்காசனம், ஊர்த்துவமுக புஜங்காசனத்துக்கு மாற்று ஆசனம் ஆகும்.

செய்முறை

முதலில், விரிப்பின் மீது குப்புறப்படுத்துக்கொள்ளவும்.

தாடையை விரிப்பின் மீது ஊன்றிக்கொள்ளவும்.

இரண்டு கைகளையும் வயிற்றுக்கு அடியில் ஒட்டினால்போல் வைத்துக்கொள்ளவும்.

கண்களை மூடவும்.

முதலில், சுவாசத்தை உள்ளிழுத்தவாறு வலது காலை மட்டும் மெதுவாக மேலே உயர்த்தவும். முழங்கால்கள் மடங்கக்கூடாது. விரைப்புடன் நீட்டி வைத்திருக்க வேண்டும்.

ஆழ்ந்த சுவாசங்கள் ஐந்து முறை எடுக்கவும்.

பின்னர் சுவாசத்தை வெளியிட்டவாறு மெதுவாக வலது காலைக் கீழே வைத்துவிடவும்.

சற்று இளைப்பாறிவிட்டு, அதேபோல் இடது காலை மட்டும் சுவாசத்தை உள்ளிழுத்தவாறு மேலே உயர்த்தவும்.

ஆழ்ந்த சுவாசங்கள் ஐந்து முறை எடுக்கவும்.

பிறகு சுவாசத்தை வெளியிட்டவாறு இடது காலை விரிப்பின் மீது மெதுவாக வைத்து ஓய்வெடுக்கவும்.

மீண்டும் மீண்டும் இதுபோல் மூன்று முறை செய்யவும்.

பின்னர், சுவாசத்தை உள்ளிழுத்தவாறு இரண்டு கால்களையும் சேர்த்தாற்போல் மேலே உயர்த்தி நிறுத்தி, ஆழ்ந்து சுவாசிக்கவும். பிறகு, சுவாசத்தை வெளியிட்டவாறு கால்களை கீழே வைக்கவும்.

பலன்கள்

இந்த ஆசனத்தால், ரத்தம் கால் பகுதியிலிருந்து சரிந்த நிலையில் முகப் பகுதிக்குச் செல்கிறது.

தொண்டை பகுதியிலிருக்கும் தைராய்டு சுரப்பிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால், தைராக்ஸின் என்ற ஹார்மோன் நன்றாகச் சுரந்து, உடல் எடை சரியாக நிர்வகிக்கப்படுகிறது.

முகத்தில் ரத்த ஓட்டம் தங்கி ஓடுவதால், முகத் தசைகளின் சுருக்கம் நீங்கி, முகத்துக்குப் பொலிவும் ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...