பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!

ஆசனம் 29. விபரீதகரணி

விபரீதம் என்றால் அதிமிகுதியான என்று பொருள். மற்ற ஆசனங்களைவிட உடலுக்கு அதிகமான பலன்களைத் தரும் ஆசனம் என்பதால், இதற்கு விபரீதகரணி என்று பெயர்.

News image
Updated On :7 ஏப்ரல் 2016, 8:55 am

கே.எஸ். இளமதி

அஷ்டாங்க யோகம்

தியானம்

தேடி வந்த காதல்

பெண்கள் கல்லூரி.

சாலினி, என்னடி ஆச்சு உனக்கு? என்ன திடீர்னு சைலட்டாயிட்ட…

இவளுக்கு என்ன ஆச்சு? சாலினிய பார்த்தாலே சந்தோஷம் தானா வந்துடும். எல்லாரையும் நொடியில குஷிப்படுத்திடுவா. ஆனா திடீர்னு ஆளே மாறிட்டாளே. எதாவது லவ் கிவ்னு...

சீச்சீ, அவ அப்படிப்பட்டவ இல்லடீ. ரொம்பவும் உஷார் பார்ட்டி. அவளுக்கு இந்த “லவ் கிவ்”வெல்லாம் கொஞ்சமும் பிடிக்காதுடி.

அப்போ வேற என்னவா இருக்கும்டீ?

குடும்பத்துல எதாச்சும் பிரச்னையா இருக்கும்.

சாலினி தலையணை சைஸ் புத்தகத்தில் மூழ்கியிருந்தாள். வேகமாக வந்த பானு, அந்தப் புத்தகத்தைப் பிடுங்கினாள்.

கோவத்தில் சாலினி பார்த்த பார்வையில் பானு ஆடிப்போனாள்.

அருகே வந்த கௌரி, பின்ன என்னடி சாலினி. நாங்கள்லாம் ஜாலியா பேசிக்கிட்டிருக்கோம். அதுவும் உன்னைப் பத்தித்தான் பேசறோம். ஆனா, நீ என்னடான்னா எதுவும் தெரியாத மாதிரி இருக்கே. இது நியாயமே இல்லடி…

தன்னைப் பற்றி தோழிகள் அவள் காதில் பட்டுக்கொண்டுதான் இருந்தது. அவர்களை வெறுப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினாள் சாலினி.

படுக்கையில் மல்லார்ந்து படுத்தபடி, கல்லூரியில் தோழிகள் பேசியதை மனக்கண்ணில் காட்சியாக ஓட்டினாள் சாலினி.

காரணம் தெரியாமல் அவர்கள் பேசியதை நினைத்து உள்ளுக்குள் நகைத்துக்கொண்டாள். மணியைப் பார்த்தாள். இரவு 2 மணி.

எதிர்வீட்டு மாடியில் ஒரு தனி அறை. அதில் தங்கியிருப்பவன் சிதம்பரத்தைச் சேர்ந்த சிட்டிபாபு. தனியார் கம்பெனியில் கிளை மேலாளராகப் பணியாற்றுகிறான்.

பேச்சிலர்களுக்கு வாடகைக்குத் தரமாட்டேன் என்று உறுதியாக இருந்த சோமு, சிட்டிபாபுவைப் பார்த்ததுமே சாவியைத் தூக்கிக் கொடுத்துவிட்டார்.

அவ்வளவு யோக்கியன்! அகத்தின் அழகு முகத்தில் தெரியாதா?

அவருக்கும் ஒரு மகள் உண்டு. செல்வச்செழிப்புடன் வளர்ந்தவள். துணி காயப்போடும் சாக்கில், மாடிக்குச் சென்று சிட்டிபாபுவிடம் ‘விழ’ தயாராக இருந்தாள். ஆனால் அவனோ அவளிடம் ‘விழுவதாக’ இல்லை.

காரியவாதியாக இருந்திருந்தால், அவளை அவன் மடக்கியிருப்பான். ஆனால், காதலை நேசிப்பவர்கள் காரியவாதிகளாக இருக்கமாட்டார்கள். காரியவாதிகள் காதலிக்கவே மாட்டார்கள்.

சிட்டிபாபு காலையில் எழுந்ததுமே பல் துலக்குவது, உடற்பயிற்சி செய்வது, குளியலை முடித்துவிட்டு பத்து நிமிடம் சூரிய நமஸ்காரம் செய்வது என சாலினி தினமும் பார்க்கும் காட்சிகள்.

ஆகாயத்தைப் பார்த்தால் அவனுக்குத் தன் சொந்த ஊர் நினைவில் வரும். சூரியனைப் பார்த்தால் சாலினியின் முகம் அவனுக்குத் தெரியும்.

அப்படித்தான் அவர்களுக்குள் உண்மைக் காதல் வந்துவிட்டது. உண்மை, இரண்டு பக்கமும் கூர்மையுள்ள ஆயுதம். காமனின் வில்லும் அப்படிப்பட்டதுதான். காமன் விடும் அம்பு பாய்ந்த அடுத்தக் கணமே ஆணும் பெண்ணும் ‘விழுந்துவிடுவர்’.

ஆண்களை தலைநிமிர்ந்துகூடப் பார்க்காத சாலினி, இப்போது எதிர்வீட்டு மாடி சிட்டிபாபுவை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

சாலினி மிகவும் ஆச்சாரமான குடும்பத்துப் பெண். அவளது மூத்த சகோதரிகள் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொண்டு போனவர்கள்.

அப்பா கண்டிப்பானவர்!

அதனால், காதல் திருமணத்துக்கு வாய்ப்பு இல்லை.

நாட்கள் நகன்றன. இருவரின் காதலும் ஊர் அறிந்த ஒன்றானது. சாலினியின் பெற்றோர் கண்டித்தார்கள்.

இது காதல் இல்லப்பா. ஒரு ஃப்ரண்ட்ஷிப்தான். அவன் ரொம்ப நல்லவன். தப்பானவன் இல்லை. யோக்கியமானவன்.

அவனை பத்தி இவ்வளவு தெரிஞ்சி வெச்சிருக்கே. ஆனா ஃப்ரண்டுங்கறே? என்றார் அப்பா ராமனாதன்.

உங்களுக்குப் புரியாதுப்பா என்று கோபித்துக்கொண்டு கல்லூரிக்குப் போய்விட்டாள் சாலினி.

அப்பாவிடம் கோபித்துக்கொண்டு கல்லூரிக்கு வந்திருந்தபோதுதான், தோழிகள் அப்படி மாறி மாறி அவளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

இன்னிக்கி ஃப்ரண்டுன்னுதான் பேசிப் பழகுவா. நாளைக்கு அதுவே காதலா மாறிடும். அப்பறம் நமக்குதான் தலைவலி. இதை எப்படியாவது தடுத்தாகணும் - மனைவியிடம் புலம்பினார் ராமனாதன்.

மறுநாள். எதிர்வீட்டுக்காரர் நல்லசிவத்திடம் போனார். இருவரும் நல்ல சிநேகிதர்கள்.

சாலினியும் சிட்டிபாபுவும் பழகறவிதம் சரியில்ல என்பதுபோல் நல்லசிவம் காதில் போட்டுவைத்தார் ராமனாதன்.

அடுத்த நாளே சிட்டிபாபு அவுட்! சொல்லிக்கொள்ளாமல் இடத்தைக் காலி செய்துவிட்டான்.

நம்ம காதல் ஹவுஸ்ஓனருக்கு தெரிஞ்சிபோச்சி. அது, எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா பிரச்னை. ஆபீஸ்ல வேற நிறைய பொறுப்பு குடுத்திருக்காங்க. இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை. சூழ்நிலைக் கைதியா வேற வீட்டுக்குப் போறேன். கொஞ்ச நாள் பொறுத்துக்க. நம்ம காதல் உண்மையா இருந்தா, நிச்சயம் ஒரு நல்ல சூழ்நிலைல நாம சந்திப்போம். என்னை நம்பு. மனச விட்டுடாத. தைரியமா இரு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அவன் போனதிலிருந்து சாலினி சரியாகச் சாப்பிடுவதே இல்லை. ஐந்து நாளாயிற்று.

ஏங்க, இப்படியே இன்னும் அஞ்சு நாள் பட்டினி கிடந்தான்னா நம்மள விட்டுப் போயிடுவா... என்றாள் அம்மா கஸ்தூரி.

அப்படின்னா, அவ காதலுக்கு பச்சைக் கொடி காட்டச் சொல்றியா? என்றார்.

வேற வழி இல்லீங்க. செல்லம் குடுத்தாச்சி. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சின்னா என்ன பண்றது. அத நம்மளாலதான் தாங்கிக்க முடியுமா. எங்கியாவது எவனோடவாவது உயிரோட இருந்தா போதும்.

இப்ப என்ன பண்ணச் சொல்ற?

என்ன பண்றதுன்னே எனக்கும் தெரியலீங்க. அவன் எங்க போய்த் தொலைஞ்சான்னுகூட தெரியலியே. சரி, நான் ஒன்னு சொல்லட்டா. நாம இந்த வீட்டுலயே இருந்தா, அவனை நெனச்சிக்கிட்டு இவ இப்படியேதான் இருப்பா. அதனால, நாம வேற வீடு பார்த்து போயிடுவோம்.

ஒரு நல்ல நாள் பார்த்து, தாம்பரம் அருகே ஒரு அப்பார்ட்மென்ட்டில் சாலினி குடும்பம் பால் காய்ச்சிக் குடியேறியது.

கீழ் போர்ஷனில் இருந்த உரிமையாளரும், இரண்டாவது மாடியில் இருந்த குடும்பத்தினரும் பூஜைக்கு வந்தார்கள்.

வந்தவர்களைப் பார்த்து சாலினி அதிர்ச்சி ஆனாள். சிட்டிபாபு…

சிட்டி நீயா. இங்க எதுக்கு வந்தே. ஐயோ அப்பா அம்மா பார்த்தா பிரச்னையாயிடும்…

ஊர்ல இருந்து அப்பா அம்மாவை இங்கயே கூட்டிட்டு வந்துட்டேன். செகன்ட் ஃப்ளோர்லதான் நாங்க இருக்கோம். போன வாரம்தான் குடிவந்தோம். ஆனா, நீங்களும் இங்கேய குடிவருவீங்கன்னு சத்தியமா தெரியாது சாலினி.

சிட்டிபாபுவின் அம்மா இந்திரா, சாலினி அருகே வந்து தலையில் கைவைத்து, மகாலட்சுமி மாதிரி இருக்கே. உன் மனசுக்கு பிடிச்சவன் உனக்கு புருஷனா வருவான் என்று ‘ஆரூடம்’ சொன்னாள்.

சாலினிக்கு இன்னும் அதிர்ச்சி நீங்கவில்லை!

சிட்டிபாபுவைப் பார்த்து சாலினியின் பெற்றோருக்குப் பேரதிர்ச்சி. சிட்டிபாவுவை ஏற இறங்கப் பார்த்தார்கள். அவனது பெற்றோரைப் பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்தது. சாலினியின் சகோதரிகளே, சாமர்த்தியமாக சம்பந்தமும் பேசிவிட்டார்கள்.

விடைபெறும் சாக்கில், எப்படி இந்த அதிசயம் என்று சாலினியின் காதோடு கிசுகிசுத்தான் சிட்டிபாபு.

தினமும் உன்னையேதான்டா தியானம் பண்ணிட்டு இருந்தேன் என்றாள் சாலினி.

நீ மட்டுமே தியானம் பண்ணினா நடந்திருக்குமா என்ன, என்று கண் சிமிட்டியபடியே திருப்பிக் கேட்டான் சிட்டிபாபு.

தியானமும் ஓர் வேண்டுதல்தான். கடவுள் நிச்சயம் செவிசாய்ப்பான்.

ஆசனம்

விபரீதகரணி

பெயர்க் காரணம்

விபரீதம் என்றால் அதிமிகுதியான என்று பொருள். மற்ற ஆசனங்களைவிட உடலுக்கு அதிகமான பலன்களைத் தரும் ஆசனம் என்பதால், இதற்கு விபரீதகரணி என்று பெயர்.

Story image

செய்முறை

விரிப்பின் மீது மல்லார்ந்து படுத்துக்கொள்ளவும்.

இரண்டு கால்களையும் மேலே நீட்டி உயர்த்தி, சர்வாங்காசனத்துக்கு வரவும்.

பின்னர் அதிலிருந்தபடி, கைகள் இரண்டையும் நகத்தியபடி, புட்டத்துக்கு அடியில் கொண்டுவரவும்.

கால்கள் இரண்டையும் உடலுக்கு எதிர் திசையில் சாய்த்துக்கொண்டே, சரிந்த நிலையில் உள்ளங்கைகளில் தாங்கியபடி இருக்கவும்.

இரண்டு கால்களையும் விரைப்பாக நீட்டிவைத்து நன்றாகச் சுவாசிக்கவும்.

பின்னர், நீட்டிய கால்களை, முழங்கால்களை மடக்காமல் நடப்பதுபோன்று அசைக்கவும்.

அடுத்து, இரண்டு கால்களாலும் இரண்டு வட்டங்கள் வரைவது போன்று இடது வலம், வலது இடம் என்று மாற்றி மாற்றிச் சுழற்றவும்.

பின்னர் இரண்டு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து மடக்கி மடக்கி நீட்டவும்.

பலன்கள்

அதிகப்படியான ரத்த ஓட்டம் கிடைப்பதால், முதுகுத் தண்டுவடம் ஆரோக்கியத்தோடு உறுதிப்படுகிறது.

எலும்புகளுக்கு இடையே எண்ணெய்ப் பசை சுரப்பதால் தேய்மானம் குறைகிறது.

பின்பக்கத் தலைக்கு ரத்த ஓட்டம் கிடைப்பதால், பெருமூளை மற்றும் சிறுமூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

நரம்பு மண்டலம் தூண்டப்படுவதால் உற்சாகம் கிடைக்கிறது.

நினைவாற்றல் பெருகுகிறது.

கால்களுக்கு அளிக்கும் பயிற்சியால், சயாடிக்கா (Sciatica) என்ற கடுமையான கால்வலி குணமாகிறது.

நன்றி

வீடியோ: மரியா, ஸ்லோவாக்கியா - ஆசனா ஆண்டியப்பன் யோகா மையம்
புகைப்படம்: கே.எஸ். இளமதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.