ஆசனம் 21. யோகமுத்ராசனம்
மச்சாசனத்துக்கு மாற்று ஆசனம் இந்த யோகமுத்ராசனம். மச்சாசனம் செய்தவுடன் செய்யப்பட வேண்டும் அல்லது இந்த ஆசனம் செய்தவுடன், யோகமுத்ராசனம் செய்தாக வேண்டும்.

பயணிகள் கவனிக்கவும்
தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசனுக்கு, சென்னையில் ஒரு விளம்பர நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஆபீஸர் பணி. நல்ல சம்பளம். தனி பைக். நிறைய பாக்கெட் மணி.
தஞ்சாவூரில் ஒரு லெண்டிங் லைப்ரரி வைத்துக்கொண்டிருந்தவன், சென்னையில் கிடைத்த வேலையை விட மனமில்லை. வாழ்க்கையில் நாமும் சென்னையில் வாழ்ந்தோம் என்று மார்தட்டிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. அத்துடன், எத்தனை எத்தனையோ சாதனையாளர்களைத் தந்த நகரம், எத்தனை எத்தனையோ அரசியல் தலைவர்களைத் தந்த நகரம், எத்தனை எத்தனையோ நடிகர் நடிகைகளை, இசையமைப்பாளர்களை, கவிஞர்களை, பாடகர்களைத் தந்த பெருநகரம். அவர்கள் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமை நமக்குப் போதாதா? என்று தீர்மானித்துக்கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினான்.
ரயில் டிக்கெட் பதிவு செய்யும்போது, அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் எல்லோரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.
சென்னைக்கு போனா கெட்டு நாசமாத்தான் போகணும் - அப்பா வைத்தியலிங்கம்.
அப்பா, பட்டணத்துக்குப் போற எல்லாருமே கெட்டுப்போறதில்லை. தப்பான நோக்கத்துல கால்வெக்கிறவங்கதான் கெட்டுப்போறாங்க. நல்லவங்க ஒருநாளும் கெட்டுப்போகமாட்டாங்க. எத்தனை எத்தனையோ சாதனையாளர்கள் அங்க இருக்காங்களே. அவங்கள பாருங்க. அவங்கள்லாம் கெட்டாபோயிட்டாங்க என்று திருப்பிக் கேட்டான்.
சென்னை வந்து சேர்ந்தது ரயில். திருவல்லிக்கேணி. சென்னைக்கு ஆயிரமாயிரம் கனவுகளோடு வருபவர்கள் ஏதோ ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு தங்குவதற்கு ஏதோ ஒரு நல்ல மேன்ஷன் கிடைத்தால் போதும் என்று அங்கு வந்து கூடிவிடுவார்கள். அந்தப் பகுதி மேன்ஷன்கள் ‘பிரசித்தம்’. அரசித்திபெற்ற அப்படி ஒரு மேன்ஷனில் தங்கினான் சீனிவாசன்.
ஆறு மாதம். ஊர்ப்பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு வேலை வேலை வேலை. நாயைப்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பசிக்கும்போது சாப்பிட முடியாது. அதுதான் சென்னையின் சாகதம். சீனிவாசன் மட்டும் விதிவிலக்கா?
ஒருநாள் இரவு –
அந்த மேன்ஷன் அதிர்ந்தது சீனிவாசனின் குரலில். சீனிவாசன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு, தரையில் உருண்டுகொண்டிருந்தான். ஐயோ வயிறு வலிக்குதே. உயிரு போற மாதிரி எரியுதே. ஐயோ தாங்கமுடியலையே என்று கத்தியபடி உருண்டுகொண்டிருந்தான்.
பக்கத்து ரூம்மேட்கள் ஓடி வந்து எட்டிப் பார்த்தார்கள். சீனிவாசனைக் கொண்டுபோய் மருத்துவ மனையில் சேர்க்கும் தைரியம் யாருக்கும் இல்லை. அறைக்குள் அங்கப்பிரதட்சணம் செய்யும் சீனிவாசனைக் கண்டு கைகளைப் பிசைந்துகொண்டிருந்தார்கள்.
ஆனாலும், ஓரிருவர் முன்வந்து சீனிவாசனை ஆட்டோ பிடித்து 24 மணி நேர மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள்.
பரிசோதித்த டாக்டர், வயிற்றில் அல்சர் ஏற்பட்டு குடலில் ஓட்டை விழுந்திருப்பதாகவும், உடனே வெட்டித் தையல் போட வேண்டும் என்று சொன்னார்.
ஊருக்குத் தகவல் போனது. பெற்றோர் வந்தனர். அறுவைச் சிகிச்சையும் முடிந்தது.
ஹோட்டல் சாப்பாடு இனி கூடாது. வீட்டுச் சாப்பாடுதான் ஒரே வழி என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
நான் இப்பவே நம்ம ஊருக்கு வந்துடறேன். நீங்க சொன்னப்ப நான் கேக்கல. இந்த பட்டணத்துக்கு வந்து பட்ட பாடு போதும்ப்பா.
வேளா வேளைக்குச் சரியான தரமான உணவைத் தேட வேண்டும். ஆசை வயப்பட்டு, கண்ட கண்ட ஹோட்டல்களில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே பிரத்யாகாரம்.

ஆசனம்
யோகமுத்ராசனம்
மச்சாசனத்துக்கு மாற்று ஆசனம் இந்த யோகமுத்ராசனம். மச்சாசனம் செய்தவுடன் செய்யப்பட வேண்டும் அல்லது இந்த ஆசனம் செய்தவுடன், யோகமுத்ராசனம் செய்தாக வேண்டும்.
பெயர்க் காரணம்
முத்திரை என்றால் முதன்மை வாய்ந்தது; முக்கியத்துவம் வாய்ந்தது என்று பொருள். அதி சிறப்பானவற்றை முத்திரை என்று குறிப்பிடுவர். யோகாசனக் கலையில் மிகவும் சிறப்பான ஆசனம் என்பதால், இதற்கு யோகமுத்ராசனம் என்று பெயர் வந்தது.

செய்முறை
விரிப்பின் மீது நேராக அமர்ந்துகொள்ளவும்.
கால்களை மடக்கி பத்மாசனத்தில் அமரவும்.
பின்னர் கைகள் இரண்டையும் விரல்களை மூடியவாறு வைக்கவும். கட்டை விரலை உள்ளங்கையில் மடக்கிவைத்து, அதன் மீது நான்கு விரல்களையும் மூடிவைத்து அப்படியே அடிவயிற்றுக்குக் கொண்டுசென்று, தொடைகளின் சந்திப்புகளில் திணித்து வைக்கவும்.
பின்னர் சுவாசத்தை வெளியிட்டவாறு, குனிந்துகொண்டே விரிப்புக்கு அருகே முகத்தை வைக்கவும். மூக்கு, விரிப்பைத் தொட்டுக்கொண்டிருக்கலாம்.
முழங்கைகள் இரண்டும் உடலை ஒட்டியவாறு இருத்தல் நல்லது.
அதே நிலையில் நீண்ட சுவாசங்கள் எடுக்கவும்.
அப்போது வயிற்றுத் தசைகள் கைகளில் அழுந்திப் பிசையப்படும்.
பின்னர் சுவாசத்தை உள்ளிழுத்தவாறு நிமிர்ந்து அமரவும்.
சற்றே இளைப்பாறிவிட்டு, மீண்டும் இவ்வாசனத்தைச் செய்யவும்.
சுமார் மூன்றிலிருந்து ஐந்து தடவை செய்யலாம்.

பலன்கள்

வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால் சிறுகுடல், பெருங்குடல் பகுதிகளும் அழுத்தப்படுகின்றன. இதனால், செரிமான சக்தி கூடும். மலச்சிக்கல் தீரும்.

கல்லீரல், மண்ணீரல் அழுத்தப்படுவதால், சர்க்கரை நோய் உடனுக்குடன் குணமாகும். மீண்டும் தலைகாட்டாது.

நுரையீரலும் இதயமும் படுக்கைநிலையில் இருப்பதால், நுரையீரல்களின் காற்றறைகள் முழுமையாக அழுத்தப்பட்டு, அசுத்தக் காற்று விரைந்து வெளியேறும். இதயத்துடிப்பும் சீராகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...