ஆசனம் 28. ஒட்டகாசனம்
சென்னை, அண்ணா சாலை பெட்ரோல் நிலையத்தில், கார்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிந்தான் ரூபேஷ். விலை உயர்ந்த கருப்பு நிற ஜாக்குவார் கார் வந்து நின்றது. டிரைவர் இறங்கிவந்து, டேங்க் ஃபில் பண்ணச் சொன்னார்.

நடிப்பதற்குச் சான்ஸ்
சென்னை, அண்ணா சாலை பெட்ரோல் நிலையத்தில், கார்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிந்தான் ரூபேஷ். விலை உயர்ந்த கருப்பு நிற ஜாக்குவார் கார் வந்து நின்றது. டிரைவர் இறங்கிவந்து, டேங்க் ஃபில் பண்ணச் சொன்னார்.
உணர்வுகள் கலக்கும்போது, இடையில் சேனைப் படை குறுக்கிட்டாலும் சரி, யானைப் படை குறுக்கிட்டாலும் சரி, இமயமலையே குறுக்கிட்டாலும் சரி, தடுக்க முடியாது என்பது உண்மை!
பெட்ரோல் ‘துப்பாக்கி’யை டேங்க்குக்குள் திணித்துவிட்டு, காருக்குள் உருவத்தை உற்றுப் பார்த்தான் ரூபேஷ். படப்பிடிப்புக்குப் போய்க்கொண்டிருந்த ‘சூப்பர் கிங்’ கஜினியையும் அந்த உணர்வு பாதிக்கவே, காருக்குள் இருந்தபடியே ஓரக்கண்ணால் பார்த்தான். பார்த்த மாத்திரத்தில், காரின் கதவைத் திறந்துகொண்டு இறங்க முயற்சித்தான்.
கஜினி இறங்கினால், ரசிகர்கள் வந்து மொய்த்துவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்ட டிரைவர், ‘இறங்காதீங்க சார். கூட்டம் சேர்ந்துடுச்சுன்னா, நாம சரியான நேரத்துக்கு ஷூட்டிங்குக்கு போக முடியாது. என்ன வேணுன்னு சொல்லுங்க, நான் வாங்கிட்டு வரேன், ப்ளீஸ்’ என்றார் டிரைவர்.
‘என்னோட பழைய ரூம்மேட் ரூபேஷ்தான் நம்ம காருக்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு இருக்கான். அவனைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. ரெண்டு வார்த்தை பேசிட்டு வர்றேன். ரெண்டு பேருக்கும் ஆறுதலா இருக்கும்’ என்றான் கஜினி.
இவர்கள் பேச்சின் இடையே, பெட்ரோலுக்காக பில்லை ரூபேஷ் கொண்டு வந்து நீட்டினான்.
கஜினி காருக்குள் இருந்தபடியே, எப்படி இருக்கே ரூபேஷ் என்றான். உற்றுப்பார்த்த ரூபேஷ், ‘ஏய், கஜினி. என்னப்பா எப்படி இருக்கே. ஷூட்டிங் போறியா’ என்றான்.
‘நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?’
‘ஓ, மூணு பசங்க, நீ புத்திசாலி. சினிமால போய் பெரிய நடிகனாயிட்டே. நான்தான் முட்டாள்தனமா… குடும்பத்தை பாக்கனுமே. அதான் இங்க வேலை பாக்கறேன். ம்ஹும், என்ன பண்றது. கடவுளுக்குக் கண் இல்லாதப்ப, என்ன திறமைசாலிங்க தெருவுலதான் நிக்கனும். என்ன கஜினி நான் சொல்றது சரிதானே. இப்பல்லாம் திறமைக்கு மதிப்பே இல்ல. சினிமாவுல வர்றதுக்கு அதிர்ஷ்டம்தான் முக்கியம். நீ அதிர்ஷ்டக்காரன். நான் அதிர்ஷ்டக்கட்டை. அதான் நான் இங்க நிக்கிறேன், நீ கார்ல உட்கார்ந்திருக்கே…’
கஜினிக்கு முகம் வாடிவிட்டது.
‘டேய் ரூபேஷ், என்னடா பேசற. நான் என்னிக்குமே அதிர்ஷ்டத்தை நம்பறவன் இல்லடா. திறமைய நம்பறவன். நீ மட்டும் அன்னிக்கு தலைய ஆட்டியிருந்தா, இன்னிக்கு என்னோட எடத்துல நீ இருந்திருப்ப. நல்லா யோசிச்சிப் பாரு. அன்னிக்கு வந்த வாய்ப்பை நழுவவிட்டது நீ. ஆனா நான், வாய்ப்பு கெடைச்சா போதும்னு திறமையைக் காட்டினேன். அந்தத் திறமையால கிடைச்சதுதான் இந்த வாழ்க்கை. திறமை இல்லாம அதிர்ஷ்டம் மட்டும் ஒர்க்கவுட் ஆகாதுடா’.
அவன் பேசப் பேச, செய்யறதையும் செஞ்சிட்டு, எனக்கு அட்வைஸாடா பண்றே என்று உள்ளுக்குள் பொருமினான் ரூபேஷ்.
இதற்குள், காருக்குள் கஜினி இருப்பது தெரிந்து ரசிகர்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. நிலைமையை உணர்ந்த டிரைவர், காரை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றுவிட்டார்.
காருக்குள், கஜினியின் முகத்தில் தெரிந்த கவலையைப் பார்த்து, ‘என்ன சார் ஆச்சு’ என்றார் டிரைவர்.
கண்கள் பனிக்க, பழைய நினைவுகளை டிரைவரிடன் பகிரத் தொடங்கினான்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் -
சுந்தரமும் (கஜினி) ரூபேஷும் ஒரே அறையில் தங்கிக்கொண்டு, நடிக்க வாய்ப்பு கேட்டு ஸ்டுடியோ ஸ்டுடியோவாக அலைந்தவர்கள்.
ரூபேஷ், ஜிம் பாடியுடன் அழகாக ஹீரோபோல் இருப்பான். பெரிய ஹீரோ கனவில் மிதந்துகொண்டிருந்தான்.
ஆனால் சுந்தரமோ, கருப்பாக ஒல்லியாக பங்கரைபோல இருப்பான். ஆனால், எந்த வேடம் கிடைத்தாலும் நடித்துக்காட்ட வேண்டும் என்ற வெறி அவனுக்குள்.
எவரெஸ்ட் இயக்குநர் அலுவலகத்தில், அடுத்த படத்துக்கான நடிகர்கள் தேர்வு நடந்தது. சுந்தரமும் ரூபேஷும் வாய்ப்புக் கேட்டு அங்கு போனார்கள்.
படத்தில் ஒரு பிச்சைக்காரன் வேடத்துக்கு புதுமுகங்களை நடிக்கவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார் இயக்குநர்.
ரூபேஷை அழைத்தார். புதுமுகங்களை எப்போதுமே டேய் என்று ஒருமையில்தான் அழைப்பார் அந்த இயக்குநர்.
‘ஒரே ஒரு சீன்தான்டா. சிக்னல்ல கார் நிக்கும். காருக்குள்ள இருக்கற பணக்காரன், சிக்கன் லாலிபாப்பை தின்னுட்டு இருப்பான். நீ கார் கிட்ட போய் நின்னு, அவன்கிட்ட வயிறு பசிக்குதுன்னு கையால் சைகை காட்டணும். அவன் முகத்தை திருப்பிக்கிடுவான். நீ பசி மயக்கத்துல அப்படியே தொப்புனு ரோட்டுலயே விழுந்துடுவே. அவ்வளவுதான் சீன். ஓகேவா. வா, வந்து நடிச்சிக் காட்டு’.
‘சார், அந்த காருக்குள்ள இருக்கற பணக்காரன் ரோலை யார் சார் பண்றது?”
‘அது இன்னும் முடிவாகலடா. அதை அப்பறம் பார்த்துக்கலாம். இந்த சீனை இன்னிக்கு எடுத்தாகணும். கார் மட்டும்தான் நிற்கும். காருக்குள்ள யாரும் இருக்கமாட்டாங்க. இருக்கறதா நினைச்சிக்கிட்டு அவன்கிட்ட பிச்சை கேட்கணும், புரியுதா. அப்பறமாதான் நீ மயங்கி விழணும். ரொம்ப நேச்சுரலா விழணுன்டா. காயம் பட்டா நான் பார்த்துக்கறேன். போ, போய் மேக்கப் போட்டுக்கிட்டு வா சீக்கிரம். டைம் ஆகுது…’
ரூபேஷ் யோசித்துக்கொண்டே நின்றான்.
‘என்னடா யோசனை. எதுக்கு வெயிட் பண்ற…’
‘சார் தப்பா எடுத்துக்காதீங்க. என்னோட பர்சனாலிட்டிக்கு பிச்சைக்காரன் ரோல் பொருத்தமா இருக்குமா?’
இயக்குநருக்கு சீறிக்கொண்டு வந்தது கோபம். ரூபைஷை தள்ளிப்போகச் சொல்லிவிட்டு, ஓரமாக நின்றுகொண்டிருந்த சுந்தரத்தை வரச் சொல்லி கை காட்டினார்.
ஓடிவந்து நின்றான் சுந்தரத்திடம், ‘உன் பேரு என்னடா?’
‘சுந்தரம் சார்’ என்று கைகளைக் கட்டி வாயைப் பொத்தி கூனிக் குறுகியபடி நின்றான்.
‘உனக்கு என்ன கஜினி முகம்மதுன்னு நெனைப்பா. சான்ஸ் கேட்டு நீயும் அவனை மாதிரி என்கிட்ட படை எடுக்கறியா? பிச்சைக்காரப் பயலே. அந்த ரோல் இருக்கு, பண்றியா..’
இயக்குநர் கேட்டதும் சுந்தரத்தின் முகம் பிரகாசமானது.
சரி என்று தலையாட்டினான்.
‘சரியான ஆளுடா நீ. உன் பேர மாத்தனுமே. என்ன பேர் வெக்கலாம்’ என்று யோசித்தவர், ‘இனி உன் பேரு கஜினி. போ, போய் மேக்கப் போட்டுட்டு வா’ என்று தனக்கே உரிய சிரிப்புடன் சொன்னார் இயக்குநர்.
அவரது காலைத் தொட்டுவணங்கிவிட்டு, மேக்கப் போட ஓடினான் கஜினி என்கிற சுந்தரம்.
அருகில் நின்றுகொண்டிருந்த ரூபேஷ், ‘சார், அவன் என்னோட ரூம்மேட்தான். அவனுக்குப் பொருத்தமான ரோல்தான் குடுத்திருக்கீங்க’ என்று சுந்தரத்தின் தோற்றத்தை வைத்துப் பரிகாசமாகச் சிரித்தபடி சொன்னான் ரூபேஷ்.
இயக்குநர் மேலும் டென்ஷன் ஆனார்.
‘சரி, உனக்கு என்ன வேணும்?’ என்றார், கைவிரல்களைக் கோபத்தில் பின்னியபடி.
‘சார், கார்ல சிக்கன் லாலிபாப் தின்ற பணக்காரன் சீனையும் இன்னிக்கே எடுத்துட்டா, வேலை முடியும்ல சார். நான் அந்த ரோலை பண்றனே…’
‘அப்படியா, சரி நீ போய் புரொடக்ஷன் மேனேஜரை வரச் சொல்லிட்டு அங்கயே வெயிட் பண்ணு’.
இயக்குநரைப் பார்த்துவிட்டு புரொடக்ஷன் மேனேஜர் வந்தார். ரூபேஷின் தோளில் கைபோட்டபடி, வாசல் வரை அழைத்து வந்தவர், ‘உன் போன் நெம்பர டைரக்டர் வெச்சிருக்காராம். அவரே கூப்பிடறாராம். அப்ப வந்தா போதும்னு சொல்லச் சொன்னார். நடுவுல வந்து அவர பாக்க நினைக்காத, டென்ஷன் ஆயிடுவாரு’ என்றார்.

இங்கே பெட்ரோல் பங்க்கில், சக ஊழியரிடம் ரூபேஷ் பேசிப் புலம்பினான்.
‘ஒரு காலத்துல என்னோட வாய்ப்பை தட்டிப் பறிச்ச பாவி அவன். இன்னிக்கு கார்ல போறான். நல்லதுக்கே காலம் இல்லடா. எனக்கு கெடைச்ச வாய்ப்பை இவனுக்கு விட்டுக்குடுத்தேன்டா. ஆனா இன்னிக்கு, என்னை கண்டுக்காம போறான். இவனை மாதிரி மூஞ்சிக்கு சான்ஸ் குடுக்கற டைரக்டர்களை சொல்லணுன்டா. ச்சே…’
‘அப்படியா. சரி, போவட்டும். காருங்க வருது பாரு. போய் பெட்ரோல் போடு. எவனையும் பத்தி பேசி என்னடா ஆவப்போவுது. நாம வேலை செஞ்சாதான் துட்டு. அதான் நம்மோட கடமை’ என்றான் உடன் வேலை செய்பவன்.
குறிக்கோளே தாரணை!

பெயர்க் காரணம்
ஒட்டகம்போல முதுகுத் தண்டுவடத்தை வளைத்துச் செய்யும் செய்யும் ஆசனம் என்பதால் இது ஒட்டகாசனம் என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை
முதலில் வஜ்ராசனத்தில் மண்டியிட்டு அமர்ந்துகொள்ளவும்.
பின்னர் முழங்கால்களில் நின்றுகொள்ளவும்.
இரண்டு உள்ளங்கைகளையும் முழங்கால்களுக்கு அருகில் வைத்து ஊன்றி, முதுகை நன்றாக மேல்நோக்கி உயர்த்தவும்.
தலையை உட்பக்கமாகக் குனிந்து வைத்துக்கொண்டு சுவாசிக்கவும்.
பின்னர் முழங்கால்களில் நிமிர்ந்து நின்று, சுவாசத்தை உள்ளிழுத்தவாறு, வலது கையை உடலுக்குப் பின்பக்கமாகக் கொண்டுசென்று, வலது குதிகாலில் ஊன்றவும்.
அதேபோல, இடது கையையும் பின்பக்கக் குதிகாலில் ஊன்றவும்.
சில சுவாசங்கள் எடுக்கவும்.
பிறகு சுவாத்தை உள்ளிழுத்தவாறு, ஒவ்வொரு கைகளையும் எடுத்தபடி ஆரம்ப நிலைக்கு வரவும்.
மீண்டும் ஒட்டகாசனத்தில் முன்பக்கம் குனிந்து, பின்னர் பின்பக்கமாக மாற்று ஆசனத்தைச் செய்யவும்.

பலன்கள்

முதுகுத் தண்டுவடம் முன்னும் பின்னும் வளைக்கப்படுவதால், வயிற்றின் உள்உறுப்புகள் அனைத்தும் நன்றாகச் சுருங்கி விரிவடைகின்றன. அதனால் சுரப்பு நீர்கள் (ஹார்மோன்கள்) ஏராளமாகச் சுரந்து ஆரோக்கியத்தைப் பெருக்கி ஆயுளையும் கூட்டுகின்றன.

வீடியோ – புஷ்பா (ஆசனா ஆண்டியப்பன் மையம்)
படங்கள் - மஞ்சுஸ்ரீ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...