உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மிகவும் கொடிய நோய்களுக்குள் ஒன்றாக புற்று நோய் விளங்குகிறது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். அறிகுறிகளை அலட்சியப்படுத்தி விட்டு கண்டுகொள்ளாமல் இருந்தால் இந்த நோய் ஆபத்தான நோயாகி விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் மக்கள் புது புது வகையான புற்றுநோய்களால் பாதிக்கப்படுவதாகவும், 2012}ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 6 லட்சத்திலிருந்து 7 லட்சம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்றும் ஓர் ஆய்வு கூறுகிறது.
ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்று நோய்களும், இருபாலருக்கும் பொதுவான புற்று நோய்களும் உள்ளன. உடலில் எந்தப் பகுதியிலும் இந்நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அதற்கென்று தனித் தனி அறிகுறிகள் உள்ளன. புற்று நோய்க்கான 10 அறிகுறிகளாவன, குணமாகாத புண், ரத்த வாந்தி அல்லது ரத்தப் போக்கு, சளியில் ரத்தம் வெளிபடுதல், கட்டி பெரிதாக்கிக் கொண்டே வருதல், மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுத்தல், கழுத்துப் பகுதியில் வலியற்ற வீக்கம், திடீரென்று எடை குறைதல், மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல், உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம், அதிக அளவில் மலச்சிக்கல் ஆகியவை.
நுரையீரல், உதடுகள், பற்களின் ஈறுகள் ஆகியவற்றில் சிறு கட்டிகள் ஏற்பட்டு நாளாவட்டத்தில் அவைகள் புற்று நோயாகி விடுகின்றன. புகைபிடித்தல், புகையிலை மெல்லுதல், பாக்கு, ஜர்தா போன்றவைகளை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை ஆகியவை வாய் புற்று நோய்க்கும், ஆஸ்பெஸ்ட்டாஸ் - சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நுரையீரல் புற்று நோயும், மது அருந்துதல், புகை பிடித்தல், வறுத்த - பொரித்த உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுதல், முறையற்ற உணவு பழக்கம் ஆகியவைகள் வயிற்று புற்று நோய்க்கும், மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று ஆகியவைகள் ஈரல் புற்று நோய்க்கும், குழந்தையில்லாமை, தாய்ப் பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு ஆகியவைகள் மார்பு புற்று நோய்க்கும், நாள்பட்ட ஆறாத புண், சில வகை தோல் நோய்கள் ஆகியவை சரும புற்று நோய்க்கும் காரணமாக அமைகின்றன. முதிர்ச்சி அடையாத ரத்த அணுக்களின் மிக வேகமான வளர்ச்சி, நெரி கட்டுதல் ஆகியவற்றால் ரத்தப் புற்று நோய் ஏற்படுகிறது.
இந்தியாவில் புகையிலை பயன்படுத்தும் 275 மில்லியன் மக்களை புகையிலை தயார் செய்யும் நிறுவனங்கள் தங்கள் கைக்குள் வைத்துள்ளன. இதில் 35 சதவீதம் 14 வயதிற்கு மேற்பட்டவர்கள். 14 சதவீதத்தினர் 13-லிருந்து 14 வயதிற்குள்பட்டவர்கள். புகையிலை உற்பத்தியை இப்போதே மட்டுப்படுத்தினால்தான் இன்னும் 20 ஆண்டுகளில் அதன் தாக்கம் குறையும். புற்று நோய்க்கு மூலக் காரணமாக புகையிலையில் போதையை உருவாக்கும் நிக்கோட்டின் உள்ளது.
பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளாலும், கழுத்தை சுற்றி ஏற்படும் புண்களாலும் புற்று நோய் ஏற்படுகிறது. வாழ்க்கைப் போக்கில் ஏற்படும் மாற்றங்கள் தான் மார்பக நோய்களுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலானா முக அழகு கிரீம்களில் பேரபின் எனும் புற்றுநோயை உருவாக்கும் பொருள் சேர்க்கப்படுவதால், இது தோலை எளிதாக ஊடுருவி, ரத்ததில் கலக்கக் கூடியதாகவும், மார்பகக் கட்டிகளை உருவாக்கக் கூடியதாகவும் உள்ளது. நகர்புறங்களைக் காட்டிலும், கிராமப் புறங்களில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. 2035ஆம் ஆண்டிற்குள் 1.7 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. அதனால் இறப்பு விகிதம் 1.2 மில்லியன் பேர்களாக இருப்பர்.
இந்திய மக்கள் தொகையில் புற்றுநோயால் பாதிக்கப்படும் 10 சதவீதத்தினரை கவனிக்கும் வகையில் மட்டுமே இப்போதைய மருத்துவ வசதிகள் உள்ளன. புற்று நோயால் இறப்பவர்களின் எண்ணிகையை அந்த நோய் வரும் முன் தடுப்பது, ஆரம்ப நிலையிலேயே மேலும் பரவாமல் தடுப்பது, வந்த பின் தீவிர சிகிச்சை மேற்கொள்வது ஆகிய மூன்று முறைகள் மூலம் புற்றுநோயை ஒழிக்க முடியும். தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழலாம். முதல் இரண்டும் நடைமுறை சாத்தியம் என்றாலும், மூன்றாவது முறை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் மூலமும், பல்வேறு சவால்களை எதிர்கொள்வதன் மூலமும் தான் குணப்படுத்த முடியும்.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை செய்யும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ப அதிக அளவில் புற்று நோய் மருத்துவர்கள் இன்னும் உருவாகாதது, இந்த நோய் மேலும் பரவுவதற்கு காரணமாகிறது. புற்று நோயை தீர்ப்பதற்கான மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் கிராமங்களில் மிகவும் குறைவாக இருக்கிறது. மருத்துவ உலகிற்கு புற்றுநோய் ஒரு சவலாக விளங்குவதால், இளம் மருத்துவர்கள் புற்றுநோய் குறித்தான ஆய்வில் ஈடுபட்டு இந்நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் சிகிச்சைப் பெற வழிவகை காண வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சைக்கு என தனிப் பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும். புற்றுநோய் சிகிச்சைக்கான கருவிகளையும், மருந்துகளையும் நல்ல தரத்தில், எளிதில் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன், இந்நோய்க்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கவும் வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவிக்கின்றனா்: ஏசி. சண்முகம்

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


