டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கூவம் நதி பிரச்னை தீருமா?

சுமார் 125 ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்னை சென்னையிலுள்ள கூவம் நதி பிரச்னை. இந்தப் பிரச்னையை எளிதில் தீர்த்துவிட முடியாது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் மனது வைத்தால் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:27 am

தங்க. சங்கரபாண்டியன்

சுமார் 125 ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்னை சென்னையிலுள்ள கூவம் நதி பிரச்னை. இந்தப் பிரச்னையை எளிதில் தீர்த்துவிட முடியாது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் மனது வைத்தால் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.

சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட சுனாமி வந்தபோது கூவம் நதியும், மெரினா கடற்கரையும் இருந்ததனால் சென்னை பிழைத்தது. இல்லையெனில், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி பகுதிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டனவோ அதைவிட மோசமான பாதிப்பை சென்னை சந்தித்திருக்கும். இயற்கையை மதிப்பதற்கும் அதை பாதுகாக்கவும் இதைவிட ஒரு சிறந்த உதாரணத்தை குறிப்பிட முடியாது.

சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் என்னும் ஓர் ஏரியின் வெள்ளக் கால்வாயாக ஆரம்பித்து சென்னை பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள நேப்பியர் பாலத்தின் கீழ் கூவம் நதி கடலில் கலக்கிறது. இந்தக் கூவம் நதியின் மொத்த நீளம் 65 கி.மீ. சென்னை மாநகரில் மட்டும் 16 கி.மீ. தொலைவுக்கு கூவம் நதி ஓடுகிறது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து திருமங்கலம் அண்ணா நகருக்குச் செல்கின்ற சாலையில் கூவம் ஆற்றின் மீது போடப்பட்டிருக்கும் முதல் பாலம் உள்ளது. அடுத்தடுத்துப் பல பாலங்கள் இருந்தாலும் சேத்துப்பட்டுப் பாலம் ஒரு முக்கியப் பாலமாகும்.

கூவம் ஆறு சென்னை மற்றும் சுற்றுப்புற இடங்களில் ஓடும் குசஸ்தலை, அடையாறு போன்ற ஆறுகளுடன் இணைந்த ஒன்றாகும். ஒரு காலத்தில் குசஸ்தலை ஆற்றில் வெள்ளம் வந்தால் அதை கூவம் ஆற்றுக்கு கேசாவரம் என்னும் இடத்தில் மாற்ற முடியும். அதுபோல கூவத்தில் மிகுதியான நீர் சென்றால் அதை

ஜமீன் கொரட்டூர் என்னும் இடத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மாற்றி அதன் மூலமாக அடையாறு நதிக்கு மாற்ற முடியும்.

மதுரவாயல் பகுதியில் இந்த ஆற்றில் தினமும் 7,000 கிலோ குப்பைகள் கொட்டப்படுவதால் இந்த நதி மாசுபடுகிறது. சென்னை நகரத்தின் மையப் பகுதிகளின் வழியாகச் செல்லும் இந்த நதியின் கரைகளில் சுமார் 3,500 குடிசைகள் இருக்கின்றன. "கூவம் ஆற்றைச் சீரமைக்க சுமார் 3,830 கோடி ரூபாய் செலவாகும் என அரசு கணக்கிட்டுள்ளது.

இதில் ஆற்றங்கரையில் வாழும் மக்களை குடிபெயர்ந்து புது வீடுகளை கட்டித் தருவதற்கு கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி செலவாகும். எவ்வளவு ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் எனக் கூறப்படவில்லை. ஆனால், நடப்பு ஆண்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூவம் ஆறு மாசு படிந்து கழிவுநீர் நதியாக உள்ளதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று ஏற்கெனவே குறிப்பிட்டவாறு அது சென்னை நகரத்தின் பரம ஏழைகளுக்குப் புகலிடமாக உள்ளது. ஆற்றின் புனரமைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு பல ஆயிரக் கணக்கில் வாழும் இந்த மக்களின் நலனை மனதில் கொள்ள வேண்டும்.

பெரிய தொழிற்சாலைகள் வணிகக் கட்டடங்களின் மூலம் ஏற்படும் கழிவுநீரைக் கணக்கில் கொண்டால் இவர்கள் மூலம் ஆற்றுக்கு ஏற்படும் மாசு, ஒன்றுமே இல்லை. முதலில் கை வைக்க வேண்டியது தொழிற்சாலைகளின் மீதும் வணிகக் கட்டடங்களின் மீதும்தான். ஆனால், அரசின் கவனம் எப்பொழுதும் குடிசைவாழ் மக்களின் மீதே உள்ளது.

இரண்டாவது, இயற்கையாகச் செயல்படும் மணல் சேகரிப்பு. கூவம் ஆறு கடலில் சேருகின்ற இடத்தில் இந்த மணல் சேகரிப்பு நடைபெறுகின்றது. இதைத் தடுக்கவே முடியாது. கட்டுப்படுத்தலாம். இன்னும் சொல்லப்போனால் சேகரிப்பை சிறிது முறைப்படுத்தலாம். ஆங்கிலத்தில் 'நஹய்க் ஈங்ல்ர்ள்ண்ற்ண்ர்ய்' என்று இந்தப் பிரச்னையைக் கூறுவார்கள். இதைப் பற்றி 100 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷ், இந்திய மற்றும் பன்னாட்டு நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆண்டு முழுவதும் மணலை அள்ளிக் கொட்டுவதைத் தவிர வேறு எந்தப் பதிலும் பயனுள்ளதாக தெரியவில்லை. இந்த முறைதான் கையாளுவோம் மற்றும் அதற்கான செலவை ஏற்கத் தயாராக உள்ளோம் என்ற முடிவை அரசு வெளிப்படுத்திட வேண்டும்.

மணலை அள்ளிக் கொட்டுவது என்பது சுலபமாகத் தெரிந்தாலும் ஆண்டு முழுவதும் செய்வது என்பது அதிக செலவை ஏற்படுத்தும் செயலாகும். மணல் சேகரிப்புப் பிரச்னையை சரியாகக் கையாளாத காரணத்தால்தான், இதற்கு முந்தைய கூவம் புனரமைப்புத் திட்டங்கள் வெற்றி பெறவில்லை.

கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் ஏற்படும் மணல் சேகரிப்பை கட்டுப்படுத்தும்பொழுது, ஆற்றிலுள்ள மாசு படிந்த நீர் கடலில் போய்விடும். அதேபோல கடல்நீர் ஆற்றிற்குள் வரும். இதுவும் இயற்கையாக நடக்கக்கூடிய ஒன்றாகும். குறிப்பாக, மழைக்காலங்களில் இப்பொழுதும் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். அதற்குத் தடையாக இருப்பது மணல்.

மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. கங்கை ஆற்றைப் புனரமைக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளது. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபொழுது சபர்மதி ஆற்றை அழகுபடுத்தம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார். அதைப்போலவே கூவத்தையும் நிச்சயமாக மாற்ற முடியும்.

சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ள ஜமீன் கொரட்டூர் என்னும் இடத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ஒரு அணைக்கட்டு உள்ளது. இந்த இடத்தை சென்னை - திருவள்ளூர் சாலையில் சென்றால் காணலாம்.

இந்த அணைக்கட்டை ஒரு சிறிய நீர்த்தேக்கமாக மாற்றி அவ்வப்பொழுது இதிலிருந்து நீரைத் திறந்துவிட்டால் கூவம் ஆற்றிலுள்ள மாசுபடிந்த நீரை கடலில் சேர்க்க முடியும். முகத்துவாரத்தில் அமைந்துள்ள மணல் திட்டை உடைக்கலாம். ஏற்கெனவே ஜமீன் கொரட்டூர் அணைக்கட்டு உள்ள கூவம் ஆற்றுப் படுகை ஆற்று மணல் அதிகமாக எடுத்த காரணத்தால் பள்ளமாகத்தான் உள்ளது. அதை முறைப்படுத்தி நீர்த்தேக்கமாக மாற்றலாம். தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.