சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கிறுக்க வேண்டாமே...

இப்போது தொழில்நுட்பங்கள் பல வளர்ந்து, உலகமே விரல் நுனியில் சுருங்கி விட்ட நிலையில் சிலர் தங்கள் எண்ணங்களையும், அருவருப்பூட்டும் கருத்துகளையும்.....

News image
Updated On :27 ஜனவரி 2014, 7:39 am

இப்போது தொழில்நுட்பங்கள் பல வளர்ந்து, உலகமே விரல் நுனியில் சுருங்கி விட்ட நிலையில் சிலர் தங்கள் எண்ணங்களையும், அருவருப்பூட்டும் கருத்துகளையும், பெயர்களையும், தொலைபேசி எண்களையும், பேருந்துகளின் இருக்கைகளின் பின்புறங்களிலும், பக்கவாட்டிலும், உள்பகுதி சுற்று பகுதிகளிலும் எழுதி கிறுக்கி வைத்து பயணிப்பவர்களின் முகத்தையே சுளிக்க வைக்கின்றனர்.

இதே போன்று ரயில் பெட்டிகளுக்குள்ளும் தரக் குறைவான அவதூறு வார்த்தைகளையும், கைப்பேசி எண்களையும், கவிதை என்ற பெயரில் படிப்போர் மனம் பாழ்படும் வகையில் வார்த்தைகளை கொட்டி ரயில் பெட்டியையே தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்கிறார்கள். மகாமோசமான சுற்றுச்சார்பின் மத்தியில் பயணம். இதனால், உடல்சோர்வுடன் உள்ள சோர்வும் ஏற்படுகின்றன. பூங்காக்களிலும் இதே நிலைமை தான். தீய நெறி என்று தெரிந்தும், பிறர் அவமானப்பட வேண்டும் என்பதற்காக சுவர்களிலோ அல்லது கழிவறைகளிலோ கூட சிலர் தகாத வார்த்தைகளை எழுதி வைக்கிறார்கள். நாகரிகம் என்ற ஊன்று கோலைத் துணைக் கொண்டு மனிதன் மேல்நிலையாகிய தெய்வ நிலைக்குப் போகாமல், தன் நிலையிலிருந்து தாழ்ந்து மிருக நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறான்

நாட்டை ஆட்சி புரிந்த முடியாட்சியில் மன்னர்கள் தங்களின் பேரும், புகழும் எப்போதும் மங்காமல் மறையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் முகத்தையும், பெயரையும் தாங்கள் வெளியிட்ட தோல், வெள்ளி, தங்க நாணயங்களின் மீது பதித்து மக்களிடையே புழங்க விட்டார்கள். அதனால் அவர்கள் புகழ் நாடு முழுவதும் பரவியது. அப்போது வாழ்ந்த மக்கள் பணத்தின் மீது மிகவும் மதிப்பு கொண்டு நாணயமானவர்களாக இருந்தார்கள். இப்போது குடியாட்சியில் அதே முறையை மறக்காமல் சிலர் ரூபாய் நோட்டுகளின் இடது புறத்திலுள்ள வெள்ளைப் பகுதிகளிலும், நீர்கோடுகளின் மீதும் சிலர் தங்கள் பெயரையும், தங்களின் அன்பிற்குரியவர்களின் பெயரையும், தொலைபேசி, கைப்பேசி எண்களையும், கவிதைகளையும், கடவுளர்களின் பெயர்களையும் எழுதி தெய்வமாகப் போற்றப்படும் பணத்தை அவமதிக்கிறார்கள். ரூபாய் நோட்டுகளின் மீது கிறுக்குவதால் அந்த நோட்டுகள் தங்கள் நீடித்த வாழ்வு தன்மையை இழந்து வங்கிக்கு வரும் போது அதன் உரு கெட்டு செல்லாதவைகளாகி அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, ரூபாய் நோட்டுகளின் மீது எக்காரணம் கொண்டு எழுதுவதையோ, கிறுக்குவதையோ, செய்திகள் பரிமாறுவதையோ முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பொருள்களின் பரிவர்த்தனைக்கு ரூபாய் நோட்டுகள் இன்றி எதுவும் நடக்காது. அந்த ரூபாய் நோட்டுகள் ஐந்து ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு இனங்களில் புழக்கத்தில் உள்ளன. அதில் 17 மொழிகளில் அந்த ரூபாய் நோட்டின் மதிப்பு எழுதப்பட்டுள்ளது.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் மரபுப்படி, ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் நீர்கோடு, பாதுகாப்பு இழை, வெள்ளைப் பகுதி ஜன்னலில் மறைந்த உருவம், நுண்ணிய எழுத்துக்கள், ஒளிர்வு, ஒளிவழி மாற்று மை போன்ற தனி தனி பாதுகாப்பு சிறப்பியல்புகள் மறைந்துள்ளன. கிறுக்கப்பட்ட அல்லது எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளின் உண்மைத் தன்மைக் குறித்து ஆராயும் போது இவை தங்களின் தனித் தன்மையை இழந்து விடுகின்றன. அதனால், போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடிப்பது என்பது சிரமாகி விடுகிறது. எனவே, கிறுக்கப்பட்ட அல்லது அதன் மீது எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்தால் அவைகள் மாற்றப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழகத்திற்கு விடப்படுகின்றன. இதனால் ரிசர்வ் வங்கிக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

ரூபாய் நோட்டுகளை மடித்து வடு ஏற்படுத்துவது, எழுதுவது, கிறுக்குவது ஆகியவை அந்த நோட்டில் சிரித்துக் கொண்டிருக்கும் நம் தேசத் தந்தையையே இழிவுப்படுத்தும் செயலாகும். இன்றைய நம் பணம், நாளை மற்றவர்களுக்கு உரியதாகிறது. நாம் என்ன இன்று கொடுக்கிறோமா, அது தான் நாளை நமக்கு வந்து சேரும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.