தேவையான பொருள்கள் :
பேபி கார்ன் - 1 பாக்கெட்
வெண்ணெய் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 12 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை: முதலில் பேபி கார்னை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி வதக்கி இறக்கி ஆற வைத்து, பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைத் தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையைச் சேர்க்க வேண்டும். பின்னர், மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி, அதனுடன் நறுக்கி வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து நன்கு கிளறவும். மசாலா பச்சை வாசனை போனவுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து தொக்கு பதம் வந்தவுடன் மல்லி இலை போட்டு இறக்கவும். இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.
***
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


