ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தேங்காய்ப்பால் முறுக்கு

News image
Updated On :10 நவம்பர் 2016, 6:30 pm


தேவையானவை:

வறுத்த உளுத்தம் பருப்பு மாவு - 1 கிண்ணம்
அரிசி மாவு - 4 கிண்ணம்
தேங்காய் - 1
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மிளகு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகு, சீரகம் ஆகியவற்றை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் சலித்த அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் வெண்ணெய்யைச் சேர்த்து மாவை நன்கு கிளறவும். பின்னர், தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி கெட்டியான தேங்காய்ப்பால் எடுக்கவும்.

பிசைந்து வைத்த மாவை 4 அல்லது 5 பகுதியாக பிரித்துக் கொள்ளவும். ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து சிறிது தேங்காய்ப் பால் சேர்த்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.

முறுக்கு அச்சில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொண்டு அதில் பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தேங்காய்ப்பால் முறுக்கு தயார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.