தேவையானவை:
பன்னீர் துண்டுகள் - 200 கிராம்
பெரிய தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
சீரகத் தூள் - 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 6
மல்லித் தழை - சிறிது
கஸ்தூரி மேத்தி இலை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - சிறிது
ஏலக்காய் - 2
செய்முறை:
பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய்விட்டு சூடானவுடன் பன்னீர் துண்டுகளைப் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து லேசாக வதக்கி வைக்கவும்.
அதே வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பு, வெங்காயம் மற்றும் தக்காளியைத் தனி தனியாக போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் தனி தனியாக மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளிக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காய விழுதை வதக்கவும். பின், தக்காளியை வதக்கவும். அடுத்து மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறி ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாடை அடங்கியதும் முந்திரி பருப்பு கலவை, கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி இலை சேர்த்துக் கிளறவும். பிறகு பன்னீர் துண்டுகளைச் சேர்த்து கொதிக்க விடவும். இறுதியில் மல்லி இலை சேர்த்து இறக்கி விடவும். சுவையான பன்னீர்
பட்டர் மசாலா ரெடி.
சப்பாத்தி, பரோட்டா, நான் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


