தேவையான பொருட்கள்:
பச்சரிசி (அ) பாசுமதி அரிசி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
நாட்டு தக்காளி - 2
குடமிளாகாய் - 2
புதினா - 1 கட்டு (சிறியது)
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 2 பல்லு
தாளிக்க தேவையானவை
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 6
கிராம்பு - 6
ஏலக்காய் - 4 (தட்டிக் கொள்ளவும்)
சோம்பு பொடி - 1 தேக்கரண்டி
அன்னாசி பூ - 2 இதழ்
மராட்டி மொக்கு - 3
பிரியாணி இலை - 1
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
செய்முறை: அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி கழுவி கொள்ளவும். புதினாவை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீள வாக்கிலும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறிக் கொள்ளவும். குடமிளகாயை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரியாணி இலை போட்டு
தாளிக்கவும். பின்னர், அரைக்க கொடுத்துள்ள பொருள்களை அரைத்து, இதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சோம்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய பெரிய
வெங்காயம், புதினா தழை சேர்த்து வதக்கவும். அடுத்து பச்சைமிளகாய், தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்பு நறுக்கிய குடமிளகாயையும் அதனுடன்
சேர்க்கவும். அதனுடன் மஞ்சள்தூள், பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
அடுத்து ஊறவைத்து வடிக்கட்டிய அரிசியைப் போட்டு (அரிசி 1 பங்கு ; தண்ணீர் 2 பங்கு) லேசாக கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிய பின் குக்கரை மூடி
2 விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும் கொத்தமல்லித்தழை சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


