சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சபாஷிணி!

பல அபூர்வமான கிருதிகளில் தேர்ச்சியுடைய நிர்மலா சுந்தரராஜனின் வாரிசு சுபாஷிணி பார்த்தசாரதி. டி.எம். தியாகராஜனின் பாணி சங்கீதம். சாரீரமானால் எதுவும் பேசக்கூடிய சாரீரம்.

News image
Updated On :28 டிசம்பர் 2013, 11:47 pm

பல அபூர்வமான கிருதிகளில் தேர்ச்சியுடைய நிர்மலா சுந்தரராஜனின் வாரிசு சுபாஷிணி பார்த்தசாரதி. டி.எம். தியாகராஜனின் பாணி சங்கீதம். சாரீரமானால் எதுவும் பேசக்கூடிய சாரீரம். நல்ல சங்கீதம் கேட்க வேண்டும் என்கிற ஆர்வமுள்ள எவரும் தைரியமாக போய் உட்கார்ந்து இரண்டு மணி நேரம் சௌக்கியமாக சாஸ்த்ரிய சங்கீதம் கேட்டு ரசிக்க சுபாஷிணி பார்த்தசாரதி ஒரு நன்ழ்ங் இட்ர்ண்ஸ்ரீங்.

மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சுபாஷிணி பார்த்தசாரதியின் நிகழ்ச்சி. பூங்குளம் சுப்பிரமணியம் வயலின், கே.ஜி. ஞானசுந்தரம் மிருதங்கம், அனிருத் ஆத்ரேயா கஞ்சிரா.

சம்பிராதாயத்திலிருந்து விலகாமல் ஏராநாபை தோடி வர்ணம் பாடி கச்சேரியை ஆரம்பித்தபோதே, இவர் ஐயங்கார்வாள் பாணியில் முறையாக நிகழ்ச்சியை வகுத்துக் கொண்டு பாடப் போகிறார் என்பது தெரிந்தது. நாதசுதா ரசம் (ஆரபி), பரலோக வயமு (மந்தாரி), ராமா இகநன்னு ப்ரோவரா (சஹானா), நளினகாந்தியில் ஒரு பஜன் என்று சமத்காரமாக தனது கச்சேரியை நகர்த்தினார். பரலோக வயமுவில் நிரவல் ஸ்வரம் மட்டும், சஹானா ஆலாபனை மட்டும் என்று தரப்பட்டிருக்கும் நேரத்தில் குறைசொல்ல முடியாமல் சங்கீதத்தின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்க அவரால் முடிந்தது.

அன்றைய ஸ்பெஷல் கரகரப்ரியாவில் கண்ட சாதி திரிபுடை தாளத்தில் அமைந்த ஜெகந்நாத சஹிதே ஹிதே தே நமஸ்தே என்கிற பல்லவியில் ராகம், தானம். வராளி, பிலஹரி, மத்யமாவதி மூன்றையும் ராகமாலிகையில் கையாண்டார். கமாஸ் ராகத்தில் ஒரு ஜாவளி. டி.எம். தியாகராஜன் இயற்றிய ரேவதி ராக தில்லானா என்று கச்சேரியை நிறைவு செய்தார். நிறைவாகவே செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.