இன்றைய இசைக் கலைஞர்களில் ஆரவாரம் இல்லாமல் இலக்கண சுத்தமான நல்ல சங்கீதத்தை வழங்குபவர்களின் பட்டியலில் "கலைமாமணி' காயத்ரி கிரீஷுக்கு சிறப்பான இடம் உண்டு. சங்கீதத்தில் புதிது புதிதாக ஏதாவது ஆராய்ச்சியில் ஈடுபடுவதிலும் தீமேடிக் கான்செப்ட்டுகளை நிகழ்த்துவதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். வைகல் ஞானஸ்கந்தனின் தயாரிப்பான காயத்ரி கிரீஷ், கடந்த சில வருடங்களாக டி.என். சேஷகோபாலனால் பட்டை தீட்டப்படுகிறார். சமீப காலமாக இவரது சங்கீதத்தில் முன் எப்போதும் இல்லாத புதிய பரிமாணம் காணப்படுவதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம் என்று கருத இடமிருக்கிறது.
÷கடந்த மாதம் 24ஆம் தேதி பார்த்தசாரதி சுவாமி சபாவில் மாலை 4 மணி கச்சேரி. மைசூர் ஸ்ரீகாந்த் வயலின், பூங்குளம் சுப்பிரமணியம் மிருதங்கம், சுந்தர் குமார் கஞ்சிரா. காயத்ரி கிரீஷின் கச்சேரிகளை தொடர்ந்து கேட்பவர்கள் ஒரு விஷயத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள். எப்போதுமே அவர் தனது முதல் உருப்படி விறுவிறுப்பாகவும் ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகமானதாகவும் இருக்கும்படி அமைத்துக் கொள்வார். அதன்மூலம் எடுத்த எடுப்பிலேயே ரசிகர்களை தன்வயப்படுத்திக்கொண்டு விடுவார். அன்றும் அப்படித்தான். பந்துவராளியில் அமைந்த சுவாமி நின்னே என்கிற பிரபலமான வர்ணம். கச்சேரி களைகட்டிவிட்டது.
அத்துடன் விடவில்லை அவர். அடுத்தாற்போல, பரிமாறியது தர்பார். கேட்கவா வேண்டும் விறுவிறுப்புக்கு? "மீனலோசனி அம்பா வேகநன்னு ப்ரோவவே' என்கிற சியாமா சாஸ்த்ரியின் தோடி ராக சாகித்யம். அதில் "மானினி மரகதாங்கி மாணிக்க விலாசினி' என்கிற இடத்தில் கல்பனா ஸ்வரம். சொல்ல மறந்துவிட்டனே, தோடி ஆலாபனை தூள்! கல்பனா ஸ்வரம்? அசாத்திய விறுவிறுப்பு!
தொடர்ந்தது இன்னொரு ஆலாபனை. இந்த முறை கையாண்ட ராகம் ஹரிகாம்போதி. எடுத்துக் கொண்ட சாகித்யம் "தினமணிவம்ச'. இதிலும் நிரவல், கல்பனா ஸ்வரம் எல்லாம் பாடினார். இரண்டு மேஜர் ராக ஆலாபனைக்குப் பிறகு சற்று ரிலீஃப் இருக்கட்டும் என்று "ஜம்புபதே' என்கிற தீட்சிதரின் யமுனா கல்யாணி ராக சாகித்யமும் ஹிந்தோளத்தில் பாபநாசம் சிவனின் "நம்பிக்கெட்டவர் எவரய்யா' என்கிற சாகித்யமும் இசைத்தபோதே அடுத்தாற்போல, விஸ்தாரமாக ராகம், தானம், பல்லவி பாட இருக்கிறார் என்பதை தெரிந்தது.
ராகம், தானம், பல்லவிக்கு எடுத்துக்கொண்ட ராகம் மதுகெüன்ஸ். அதிகமாக கையாளப்படாத ஒரு ராகம். கவனமாக இல்லாமல் போனால் ஹிந்தோளம் கேட்டுவிடும். "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' என்று கண்ட திரிபுட தாளத்தில் பல்லவி அமைத்துக் கொண்டு மிஸ்ர நடையும் சதுஸ்ர நடையும் மாற்றி மாற்றி வருமாறு காயத்ரி கிரீஷ் பாடியபோது, டி.என். சேஷகோபாலனின் சிஷ்யை என்பது பளீச்சென்று தெரிந்தது. இப்படிப்பட்ட கணக்கு விவகாரங்களை அவரிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, பல்லவியில் திரிகாலம் பண்ணி, திஸ்ரம் பண்ணி கல்பனா ஸ்வரமும் பாடி தனியாவர்த்தனத்துக்கு விட்டபோது நிஜமாகவே சங்கீத உலா போய் வந்த பிரமிப்பு.
சேந்தனை கந்தனை என்கிற விருத்தத்தை தொடர்ந்து பிருந்தாவனியில் அமைந்த பெரியசாமி தூரனின் கலியுக வரதன் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
தீட்சிதர், சியாமா சாஸ்த்ரி, தியாகய்யர், பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன் என்று தனது பட்டியலில் பல்வேறு வாக்கேயகாரர்களுக்கும் இடமளித்திருந்தது காயத்ரி கிரீஷின் திட்டமிடல் நேர்த்தியை எடுத்துக்காட்டியது. மனநிறைவை தந்த கச்சேரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


