தேர்தல் ஸ்பெஷல்-5 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகைகள் எவ்வளவு?

ஓர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நேர்வில் ரூ.25,000 அல்லது வேட்பாளர் பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடி இனத்தை சார்ந்தவராக இருக்கிறவிடத்து ரூ.12,500; மற்றும்
தேர்தல் ஸ்பெஷல்-5 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகைகள் எவ்வளவு?
Published on
Updated on
1 min read

வைப்புத்தொகை என்பது ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட கட்டவேண்டிய முன்பணம். அரசாட்சி முறையில் போதிய ஆர்வமற்றவர்களும், பொழுதுபோக்காக போட்டியிட நினைப்பவர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓரளவு தடுக்கும் நோக்குடன் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஒரு வேட்பாளர் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வாக்குகளைப் பெறத் தவறினால் அவரது வைப்புத் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப்படாது. ஒரு வேட்பாளர் இவ்வாறு வைப்புத் தொகை இழப்பது பெருந்தோல்வியின் அடையாளமாகவும் அவமானகரமானதாகவும் கருதப்படுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act 1951) அறிவுறுத்தும் பாராளுமன்ற மற்றும்  சட்டமன்ற உறுப்பினருக்கான வைப்புத் தொகைகளைப் பார்ப்போம்

பிரிவு 34. வைப்புத் தொகைகள்(Deposits)

1.வேட்பாளர் ஒருவர்,


a) ஓர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நேர்வில் ரூ.25,000 அல்லது வேட்பாளர் பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடி இனத்தை சார்ந்தவராக இருக்கிறவிடத்து ரூ.12,500; மற்றும்
b) ஓர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நேர்வில் ரூ.10,000 அல்லது வேட்பாளர் பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடி இனத்தை சார்ந்தவராக இருக்கிறவிடத்து ரூ.5,000/-

தொகையினை வைப்பீடு செய்திருந்தாலன்றி அல்லது செய்திடச் செய்திருந்தாலன்றி, ஓர் தொகுதிக்கு உரியவாறு நியமனம் செய்யப்பட்டதாக கருதப்படமாட்டார்.

வரம்புரையாக, வேட்பாளர் ஒருவர் அதே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுக்களினால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறவிடத்து , இவ்வுட்பிரிவின் கீழ் அவரிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட வைப்புத்தொகை பெற வேண்டியதில்லை. 

2. உட்பிரிவு (1)  இன் கீழ் வேட்புமனு அளித்திடும் போது, வேட்பாளர் தேர்தல் பொறுப்பு அலுவலரிடம் ரொக்கமாக தொகையினை வைப்பீடு செய்தாலன்றி அல்லது இதன் பொருட்டு ரிசர்வ் வங்கியில் அல்லது அரசு கருவூலகங்களில் வைப்பீடு செய்ததற்கான பற்றுச்சீட்டை வேட்பு மனுவுடன் இணைத்திருந்தாலன்றி, உட்பிரிவு (1) இன் கீழ் வேண்டுறுத்தப்படும் வைப்புத் தொகை வைப்பீடு செய்யப்பட்டதாகக் கருதப்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com