விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

என்னால் இன்ன பலன் ஏற்படுமென்று நான் யாரிடமும் எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை!

ரஜினிகாந்த் பதில்கள்  

News image
Updated On :6 அக்டோபர் 2016, 6:30 pm

ஜெ .உஷா, திருப்பாதிரிப்புலியூர்

சிவக்குமார், கமல்ஹாசன்  - இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஒருவர் கவுண்டர்; மற்றொருவர் பிராமணர்.

&&&&&

ஜானகி, விருத்தாச்சலம்.

நீங்கள் இந்தியாவின் ஜனாதிபதியானால் என்ன செய்வீர்கள்?

வட  இந்தியா, தென் இந்தியா என்று இந்தியாவை இரண்டாக பிரித்து விடுவதற்கான ஏற்பாடுகளைச்  செய்வேன்,.

&&&&

எஸ்.பி.ராமலிங்கம், பூதப்பாடி.

உங்களைப் போன்ற நடிகர்களால் எங்களுக்கு என்ன பயன்?

என்னால் இன்ன பலன் ஏற்படுமென்று நான் யாரிடமும் எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. ! ஆனால் முடிந்ததை நிச்சயமாகச் செய்வேன். சுய விளம்பரத்திற்காக அல்ல. வாழ வைத்த மக்களுக்காக.

&&&&&&&

வி.விஜயபாஸ்கர். கோவை

நமது சென்சார் போர்டை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஹிப்போக்ராட்ஸ்.

&&&&&

கே.சுப்புலட்சுமி, கோவை-16

ரஜினி சார், சிவாஜிக்கு அடுத்தபடியாக நன்றாக நடிப்பவர் கமல்தான் என்று எம்.ஜி.ஆர் கூறி உள்ளாரே?

அது அவருடைய கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.