சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம் அருகிலுள்ள தானியங்கி சிக்னல் இயங்காததால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி கட்டுப்பாடின்றி செல்கின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகளும் நேரிடும் அவலம் தொடர்கிறது. எனவே, இந்த சிக்னலை சீரமைத்து போக்குவரத்து காவலரையும் பணியமர்த்த வேண்டும். மேலும், இப்பகுதியிலுள்ள பயணிகள் நிழல்குடை அருகே அனைத்துப் பேருந்துகளை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி. ராஜகுரு, திருவான்மியூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.