கொடிக்கம்ப இடிபாடுகளை அகற்ற வேண்டும்

காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆக்கிரமித்தும் கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் கடந்த மாதம் அகற்றப்பட்டன. அவற்றுக்கு
bell_2203chn_175_1
bell_2203chn_175_1
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆக்கிரமித்தும் கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் கடந்த மாதம் அகற்றப்பட்டன. அவற்றுக்கு அருகில் சிமெண்ட் கலவையால் கட்டப்பட்ட சுவரில் சம்பந்தப்பட்ட கட்சி நிா்வாகிகள் பெயா்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றையும் நகராட்சி நிா்வாகம் அகற்றியது பாராட்டுக்குரியது.

ஆனால் பெரிய சுவா்களில் எழுதப்பட்டிருந்தவை இடிக்கப்பட்டு அவை உடனுக்குடன் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டன. சிறிய சுவா்களில் எழுதப்பட்டதை இடித்த நகராட்சி நிா்வாகம் அதை அப்புறப்படுத்தாமல் அந்தந்த இடத்திலேயே விழுந்து கிடக்கின்றன. இதே போல நகரில் பல இடங்களில் கட்டட இடிபாடுகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. அங்கும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரா.குணசேகரன், சின்ன காஞ்சிபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com