சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 78

மயில் விருத்தத்தின் பத்தாம் பாடலை இன்று பார்க்கிறோம்.  வேல் விருத்தத்தைப் போலில்லாமல் மயில் விருத்தத்துக்கும் சேவல்

Updated On :1 டிசம்பர் 2015, 9:13 am

மயில் விருத்தத்தின் பத்தாம் பாடலை இன்று பார்க்கிறோம்.  வேல் விருத்தத்தைப் போலில்லாமல் மயில் விருத்தத்துக்கும் சேவல் விருத்தத்துக்கும் பலச்ருதியாகப் பதினோராவதாக ஒரு பாடலும் உண்டு.  இந்தப் பாடலில் ‘சலாம்’ என்ற உருது/அரபிச் சொல் பயில்வதைப் பார்க்கலாம்.  திருப்புகழில் ‘சலாம்’ என்ற சொல் பயிலும் இரண்டு பாடல்களில் ஒன்று இது.  முருகனைத் துதிக்கும்போது மற்ற தெய்வங்களையும் சமமாகத் துதித்தைப் போலவே, தன் பாடல்களில் வடமொழியையும் பிறநாட்டு மொழிகளையும் கலந்து பாடுவது குருநாதருக்குச் சம்மதமாகவே இருந்திருக்கிறது.

காப்புச் செய்யுளையும் பலச்ருதியையும் கணக்கில் எடுப்பதில்லை.  ஆகவே, இது மயில் விருத்தத்தின் இறுதிப் பாடல்.  ஆனால் காப்புச் செய்யுளைப் படிக்காமல் தொடங்குவதில்லை, பலச்ருதியைப் படிக்காமல் நிறைவு செய்வதில்லை.  அந்த வகையிலே இன்னும் ஒரு பாடல் மீதமுள்ளது.  இப்போது பத்தாம் பாடலைப் பார்ப்போம்:

நிராசத விராசத வரோதய பராபர
   னிராகுல னிராமய பிரா

னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி
   நிலாவிய உலாசஇ தயன்

குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல்
   குராநிழல் பராவு தணிகைக்

குலாசல சராசரம் எலாமினி துலாவிய
   குலாவிய கலாப மயிலாம்

புராரிகும ராகுரு பராஎனும் வரோதய
   புராதன முராரி மருகன்

புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக
   லாகும் அயி லாயுதனெடுந்

தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல
   சாதனன் விநோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
   ஷடாநநன் நடாவு மயிலே.

</p><p align="justify"> </p><p align="justify"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/235548292&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.