பதச் சேதம் | சொற் பொருள் |
நிராசத விராசத வரோதய பராபரன் நிராகுலன் நிராமய பிரான் | நிராஜத: ரஜோ குணம் இல்லாத; விராசத: ரஜோகுணத்தைக் கடந்த, எதிரான, சத்வகுணமுள்ள; வரோதய: வரங்களுக்கு உறைவிடமான; நிர் ஆகுலன்: வருத்தங்களைப் போக்குபவன்; நிர் ஆமய: (ஆமயம்=நோய்) நோயற்ற, நோய்களைக் களையும்; பிரான்: தலைவன் |
நிலாது எழுதலால் அறமிலான் நெறியிலான் நெறி நிலாவிய உலாச இதயன் | (அன்வயம்) அறமிலான் நெறியிலா;ன நிலாது எழுதலால். அறமற்றவரும், நெறியற்றவரும் தம்மைச் சாராமல், அவர்பால் நில்லாமல் எழுகின்ற காரணத்தால், நன்னெறியில் நிலாவுபவன், மகிழ்ச்சி பொங்கும் இதயங்கொண்டவன். |
குராமலி விராவு உமிழ் பராரை அமரா நிழல் | குராமலி: குரா மரத்தில் நிறைந்து; விராவு: கலந்து; உமிழ்: வெளிப்பட்டு; பராரை: பருத்த அடிப்பாகத்தில், அமரா நிழல்: நிழலில் அமர்ந்து; (முருகன் திருவிடைக்கழியில் குராமர நிழலில் எழுந்தருளியிருப்பதால் இது திருவிடைக்கழி முருகனைக் குறிக்கிறது) |
குராநிழல் பராவு | குராநிழல் பராவு: குரா மரத்தின் ஒளி மிகுந்துள்ள; தணிகை: திருத்தணிகை; குலாசலம்: குல அசலம், குலகிரி. சராசரம்: எல்லா இடங்களிலும்; கலாபம்: தோகை |
புராரி குமரா குருபரா எனும் வரோதய புராதன முராரி மருகன் | புராரி: புரத்தை அழித்த சிவன்; வரோதய: வர உதய, வரங்களுக்கு இருப்பிடமான, புராதன: தொன்மையான, முராரி: முரன் என்னும் அரக்கனை அழித்த திருமால் |
புலோமசை சலாமிடு பலாசன வலாரி புகலாகும் அயி லாயுதன் | புலோமசை: இந்திராணி; சலாமிடு: வணங்கும்; பலாசன: (பல அசனம்: பழங்களை உண்டு வாழும் கிளி(போன்ற); வலாரி: வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரன்; அயில்: கூர்மை, கூர்மையாயிருப்பதால் வேலுக்கு ஆகுபெயர். |
நெடும் தராதல கிராதர்கள் குல ஆதவ அபிராம வலசாதனன் விநோத சமரன் | நெடும்: நெடிய; தராதலம்: பூமி; கிராதர்: வேடர்; ஆதவன்: சூரியன்; அபிராம: பேரழகன்; வ(ல்)ல சாதனன்: வலிமையைச் சாதிப்பவன்; விநோத சமரன்: விளையாட்டாகப் போர்புரிபவன் |
தடாரி விகடாசுரன் குடாரி இதபடா திகழ் ஷடாநநன் நடாவு மயிலே. | தடாரி: கிரவுஞ்ச மலைக்குப் பகைவன்; விகடாசுரன்: தொந்தரவு கொடுத்த அசுரனான, மாமரமாக நின்ற சூரனுக்கு; குடாரி: கோடரி; இதபடா: இதம்பட்டு; ஷட ஆநந: ஆறுமுகன்; நடாவு: செலுத்துகின்ற. |

நிராசத ... நி ராஜத: (தமோ, சத்வ) ரஜோ (குணங்களில்) ரஜோ குணம் அற்றவன்;

விராசத ... 'வி' + 'ராஜத', ரஜோ குணத்துக்கு மாறான சத்வகுணம் உள்ளவன்.

வரோதய ... (அடியாருக்கு) வரங்களுக்கு இருப்பிடமாக விளங்குபவன்,

பராபர ... பரம்: மேலானது, பராபரம்: மேலான பரம்பொருளானவன்,

நிராகுலன் ... நிர் ஆகுலன்: ஆகுலங்கள் (வருத்தங்களைப்) போக்குபவன்,

நிராமயன் ... நிர் அமயன்: நோய்களை அழிப்பவன்;

பிரான் ... தலைவன்,

அறமிலான் நெறியிலான் நில்லாது எழுதலால் ... அறநெறியிலும், ஒழுக்க நெறியிலும் நிற்காதவர்கள் தன்னிடத்தில் நில்லாமல் எழுபவன்,

நெறி நிலாவிய உலாச இதயன் ... நல்ல நெறியில் நிற்பவர்களே தன்பால் நிற்கச் செய்பவன்; உல்லாச மனநிலையில் விளங்குபவன்,

குராமலி ... குரா மரங்களில் நிறைந்து,

விராவு உமிழ் ... கலந்து வெளிப்பட்டு விளங்கும்,

பராரை ... பருத்த அடிமரத்தின் கீழ்,

அமரா ... (திருவிடைக்கழியில்) வீற்றிருப்பவன்,

நிழல் ... ஒளி வீசும்,

குரா நிழல் ... குரா மரங்களின் நிழலில்,

பராவு ... படர்ந்திருக்கும்,

தணிகை குலாசல ... திருத்தணிகை முதலிய குலபர்வதங்களாக (விளங்குகிற) சிறந்த மலைத்தலங்களில்,

சராசரம் ... உலகம் முழுவதிலும்,

இனிது உலாவிய ... இனிதே திரிந்தும்,

குலாவிய கலாப மயிலாம் ... குலவுவதுமான தோகை மயில் இது.

புராரி குமரா ... திரிபுரங்களை அழித்த சிவபெருமானுடைய மகனே

குருபரா ... குருமூர்த்தியே,

எனும் ... என்று துதிக்கின்ற,

வரோதய ... அடியார்களுக்கு, வரங்களின் இருப்பிடமாய் விளங்குபவன்,

புராதன முராரி மருகன் ... தொன்மையான மூர்த்தியும், முரன் என்ற அசுரனைக் கொன்றவனுமான திருமாலின் மருகமகனும்;

பலாசன புலோமசை ... (பழங்களை உண்டு வாழ்கின்ற) கிளியைப் போன்ற இந்திராணி,

சலாமிடு ... தொழுது வணங்குபவன்;

வலாரி புகலாகும் அயிலாயுதன் ... வலன் என்ற அரக்கனைக் கொன்றவனான இந்திரனுக்குப் புகலிடமாக, சரணாகதியாக விளங்கும் வேலாயுதன்,

நெடும் தரா தல ... நெடிய பூமியிலுள்ள,

கிராதர்கள் குல ஆதவ ... வேடர்களின் குலத்துக்கு ஆதவனாக—சூரியனாக--விளங்கி,

அபிராம ... (வேடர்குல மாப்பிள்ளையாக விளங்கும்) பேரழகன்,

வல சாதனன் ... வலிமையை சாதித்தவன்,

விநோத சமரன் ... போர் புரிவதை விளையாட்டாகச் செய்பவன்,

தடாரி ... மலைத் தடமான கிரவுஞ்சத்தை அழித்தவன்,

விகடாசுரன் ... தொந்தரவுசெய்து வந்த சூரபத்மன் (மாமர வடிவம் எடுத்தபோது அவனை),

குடாரி ... கோடாரியைப் போல் மார்பை இரு கூறாகப் பிளந்தவன்,

(ப4வானீ பா4வனாக3ம்யா ப4வாரண்ய-குடா2ரிகா |

என்பது லலிதா ஸஹஸ்ரநாமம். பிறப்பாகிய காட்டுக்குக் கோடரியானவள். குடாரி: கோடரி)

இதபடா திகழ் ஷடாநநன் ... இதப்பட்டு (மகிழ்ச்சியுற்றுத்) திகழும் ஆறுமுகன்,

நடாவு மயிலே ... செலுத்துகின்ற மயிலே தான் அது.

இராசத குணமற்றவன்; அதற்கு மாறான சத்வ குணமுள்ளவன்; வரங்களுக்கு இருப்பிடமானவன்; மேலான பரம்பொருள்; கவலையை அழிப்பவன்; நோய்களைப் போக்குபவன்; தலைவன்; அறமற்றவர்களும் நெறியற்றவர்களும் சாராதவன்; நன்னெறியில் நிற்போர் சார்ந்த உல்லாசமான மனோநிலையில் விளங்குபவன்; பருத்த அடிமரத்தைக் கொண்ட குராமரத்தின்கீழ்—திருவிடைக்கழியில்—வீற்றிருப்பவன்; ஒளிமிக்க குராமரங்களின் நிழல் படிந்துள்ள திருத்தணிகை முதலான தலங்களில் எழுந்தருளியிருப்பவன் எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்வதான மயில்வாகனம்—இந்த வாகனம் யாருடையதோ என்றால்,

திரிபுரத்தை எரித்த சிவனுடைய குமாரனே, குருமூர்த்தியே என்று துதிக்கும் அடியார்களுக்கு வரங்களின் இருப்பிடமாக விளங்குபவனும்; தொன்மையானவனும், முரன் என்ற அரக்கனை அழித்தவனுமான திருமாலின் மருகனும்; கிளிபோன்றவளான இந்திராணி துதித்துப் போற்றுபவனும்; இந்திரனுக்குப் புகலிடமானவனும்; வேலை ஆயுதமாக உடையவனும்; நீண்ட பூமியில் வாழ்கின்ற வேடர்களின் குலத்துக்கு மாப்பிள்ளையாக வந்த சூரியனும்; பேரழகனும்; வலிமையைச் சாதிப்பவனும்; விளையாட்டாகப் போர்புரிபவனும்; கிரவுஞ்ச மலையை அழித்தவனும்; தொல்லை கொடுத்த சூரனாகிய மாமரத்துக்குக் கோடரியாக நின்று வெட்டிச் சாய்த்தவனும்; மகிழ்ச்சியுற்றுத் திகழ்பவனுமான ஆறுமுகன் செலுத்துகின்ற மயில்தான் அது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

சிவகாசியில் கடும் சவாலை எதிா்கொள்ளும் ராஜேந்திர பாலாஜி!

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை