சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 81

பிரமனுக்குரிய நான்கு முகங்களையும் பெற்று அவனுடைய சொரூபத்தைப் பெறுவார்கள்,

Updated On :11 டிசம்பர் 2015, 8:55 am

மயில் விருத்த பலச்ருதிக்கான பொருளைப் பார்ப்போம்.

பதச் சேதம்

சொற் பொருள்

எந்நாளும் ஒரு சுனையில் இந்த்ர நீலப்போது இலங்கிய திருத்தணிகை வாழ்சுனை: நீர்நிலை; இந்த்ர நீலப் போது: இந்திர நீலம் எனப்படும் நீலோத்பல மலர்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும் ஒரு  நம்பிரான் ஆன மயிலைப்எம்பிரான்: எம் தலைவர்; இமையவர்கள்தம் பிரான்:  தேவர்களின் தலைவன்; ஒரு: ஒப்பற்ற; நம் பிரான்: நம் தலைவனான மயிலை
பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன் பகர்ந்த அதிமதுர சித்ரப்பன்னாளும்: பலநாட்களாக; அடிபரவும்: அடி போற்றும்; அதிமதுர: மிக இனிமையான; சித்ர: வேலைப்பாடு நிறைந்த
பாடல் தரும் ஆசறு விருத்தம் ஒரு பத்தும் படிப்பவர்கள்ஆசு அறு: குற்றமற்ற
ஆதி மறை நூல்மன் நான்முகம் பெறுவர் அன்னம் ஏறப் பெறுவர் வாணி தழுவப் பெறுவரால்தொன்மையான வேதங்கள் தன்னிடத்திலே நிலைபெற்றுள்ள; (மன்: நிலை பெற்ற); நான்முகம் பெறுவர்: நான்கு முகங்களைப் பெற்று பிரம பதத்தை அடைவர்;
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப் பெறுவர்  வாரிச மடந்தையுடன் வாழ்மகராலயம்: கடல், கடலுக்கு அதிபனான வருணனுடைய பதம்; உவணம்: கருடன்; வாரிசம்: வாரிஜம், தாமரை
அந்நாயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர் அமுதாசனம் பெறுவர் மேல்அந்நாயகம்: அந்த (விஷ்ணு) பதம்; ஐராவதம் பெறுவர்: இந்திர பதம் பெறுவர்; அமுத அசனம் பெறுவர்: அமுதத்தை உண்ணப் பெறுவர்; அதற்குமேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர் அழியா வரம் பெறுவரே.ஆயிரம் பிறைதொழுதல்: சதாபிஷேகம் என்னும் எண்பது வயது நிறையப் பெறுதல்;

எந்நாளும் ... நாள் தவறாமல், ஒவ்வொரு நாளும்,

ஒரு ... ஒப்பற்ற,

சுனையில் ... நீர் நிலையில்,

இந்திர நீலப்போது இலங்கிய ... இந்திரநீலம் எனப்படும் நீலோற்பல
மலர் பூத்து விளங்குவதாகிய,

திருத்தணிகை வாழ் ... தணிகை மலையில் வாழும், (செங்கழுநீர் மலர்வதால் திருத்தணிக்குக் கல்லார கிரி என்றும் பெயருண்டு)

எம் பிரான் ... எமது இறைவனாகிய முருகன்,

இமையவர்கள் தம்பிரான் ... தேவர்களுடைய தலைவன்,

ஏறும் ... வாகனமாக ஏறும்,

ஒரு நம்பிரான் ஆன மயிலை ... ஒப்புவமை இல்லாததும், நம்முடைய வழிபடு தெய்வதமுமான மயிலை,

பன்னாளும் அடி பரவும் ... பல நாட்களாக துதித்துப் போற்றும்,

அருணகிரி நாதன் ... அருணகிரிநாதனாகிய நான்,

பகர்ந்த ... சொன்ன,

அதிமதுர ... இனிமை நிறைந்ததும்,

சித்ர ... வேலைப்பாடுகளுடன் கூடிய அழகுகள் நிறைந்ததும்,

பாடல் தரும் ... பாடல்களாக விளங்குகின்ற,

ஆசு அறு ... குற்றமற்ற,

விருத்தம் ஒரு பத்தும் ... இந்தப் பத்து விருத்தங்களையும்,

படிப்பவர்கள் ... பாராயணம் செய்பவர்கள்,

ஆதி மறை நூல் ... மிகவும் பழமையான வேதங்கள்,

மன் ... நிலை பெற்று விளங்கும்,

நான்முகம் பெறுவர் ... பிரமனுக்குரிய நான்கு முகங்களையும் பெற்று அவனுடைய சொரூபத்தைப் பெறுவார்கள்,

அன்னம் ஏறப் பெறுவர் ... (பிரமனுடைய வாகனமான) அன்னத்தின் மேல் ஏறிச் செல்லும் பதத்தைப் பெறுவார்கள்,

வாணி தழுவப் பெறுவர் ... கலைமகளான சரஸ்வதியின் கடாட்சத்தைப் பெற்று அவரிடமிருந்து நீங்காதிருப்பார்கள்.  (நாவிற் சரஸ்வதி நற்றுணையாக என்று சஷ்டி கவசம் குறிப்பதைப்போல்),

மகராலயம் பெறுவர் ... (சுறா, திமிங்கிலங்கள் போன்ற) மகரமீன்கள் வாழ்கின்ற கடலுடைய தலைவனான வருண பதவியையும் பெறுவார்கள்;

உவணம் ஏறப் பெறுவர் ... கருட வாகனத்தில் ஏறுவார்கள்,

வாரிச மடந்தையுடன் வாழ் அந்நாயகம் பெறுவர் ... வாரிஜமாகிய தாமரையில் வீற்றிருப்பவளான திருமகளோடு வாழும் விஷ்ணுபதத்தைப் பெறுவார்கள்,

அயிராவதம் பெறுவர் ... தேவேந்திர பதம் பெற்று ஐராவதத்தில் உலா வருவார்கள்,

அமுதாசனம் பெறுவர் ... அமுத அசனம்=அமுதத்தை அருந்துதல்.  (தேவேந்திர பதத்தையே பெற்றதாலே) அமுதத்தையும் பருகுவார்கள்.

மேல் ஆயிரம் பிறை தொழுவர் ... ஆயிரம் பிறைகளைக் கண்டு, சதாபிஷேகம் செய்து கொள்வார்கள்.  (ஓராண்டில் பன்னிரண்டுக்குச் சற்று கூடுதலான மூன்றாம் பிறைகளைக் காணலாம்.  பத்தாண்டுகளுக்கு 125 பிறைகள் என்று கணக்கு.  ஆயிரம் பிறை காணும்போது எண்பது வயது பூர்த்தியாகியிருக்கும்.  ஆயிரம் பிறை தொழுதல் என்பது சதாபிஷேகத்தைக் குறிக்கும்.)

சீர் பெறுவர் பேர் பெறுவர் ... மிகச் சிறந்த பெருமையும் புகழும்
அடைவார்கள்,

அழியா வரம் பெறுவர் ... அழியாத முக்தி நிலையையும் அடைவார்கள்

மயில் விருத்தம் இத்துடன் முற்றுப் பெறுகிறது.

அடுத்ததாக, சேவல் விருத்தத்தைத் தொடங்குவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.