சேவல் விருத்தம் தொடங்குகிறது. இன்றுமுதல் பத்துப் பாடலும், பலச்ருதியான கடைசிப் பாடல் உட்பட ஒவ்வொன்றும் ‘சேவற்றிருத் துவசமே’ என்று முடிகின்றன. ஒவ்வொரு பாடலில் சொல்லப்படுவது சேவற்கொடியே என்று பேசப்பட்டாலும், பேசப்படுவது கொடியில் விளங்கும் சேவலே. ‘இப்படியெல்லாம் செய்வது சேவற்கொடியே’ என்று இப்பாடல்கள் முடிந்தாலும், ‘இப்படியெல்லாம் செய்வது கொடியாக விளங்கும் சேவலே’ என்ற பொருளை உடையவை. இவையெல்லாம் சந்த விருத்தங்கள்.
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்களும்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புறக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட…..
என்கிறது சஷ்டி கவசம். சேவல் விருத்தத்தைத் தொடர்ந்து பாராயணம் செய்பவர்களை பில்லி சூனியம் அணுகாது என்பது முருகன் அடியார்களுடைய நம்பிக்கை. இந்த விருத்தங்களைத் தொடர்ந்து படிப்போருக்கு ‘யாமிருக்க பயமேன்’ என்ற வாக்கு துணைநிற்கும். இன்று முதற் பாடலைப் பார்ப்போம்.
உலகிலநு தினமும்வரும் அடியவர்கள் இடரகல
உரியபர கதிதெ ரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்துசிற
கைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள்நெறு நெறுநெறென அலைகள்சுவ றிடஅசுரர்
மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுற
வரிசையின மகளவ ளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகுசினமொ டடியுதவும் அறுமுகவன்
சேவற் றிருத்துவசமே.
</p><p align="JUSTIFY"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/236898210&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

சிவகாசியில் கடும் சவாலை எதிா்கொள்ளும் ராஜேந்திர பாலாஜி!

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

