சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 85

உலகத்தில் தினந்தோறும் நாடிவரும் அடியவர்களுடைய துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு உரிய முக்தியைக் காட்டியருளி;

Updated On :11 டிசம்பர் 2015, 8:48 am

பதச் சேதம்

சொற் பொருள்

உலகில் அநுதினமும் வரும் அடியவர்கள் இடர் அகல உரிய பரகதி தெரியவேபரகதி: சாலோக, சாரூப, சாமீப்ய, சாயுஜ்ய பதவிகளில் நான்காவதான முக்தி நிலை
உரகமணி என உழலும் இருவினையும் முறைபடவும் இருள்கள் மிடி கெட அருளியேஉரகமணி: மணிஉரகம்.  உரகம்: பாம்பு, மணி: நாக மாணிக்கம். இருவினையும்: நல்வினையும் தீவினையும், முறைபடவும்: முறையாக ஒன்றுபடவும்; மிடி: வறுமை
கலகமிடும் அலகை குறள் மிகு பணிகள் வலிமையொடு கடினம் உற வரில் அவைகளைக்அலகை: பேய்கள்; குறள்: குறளைப் பேய்—குட்டிச் சாத்தான்; பணிகள்: பாம்புகள்; கடினம் உற: கொடுமை செய்ய;
கண்ணைப் பிடுங்கி உடல் தன்னைப் பிளந்து சிறகைக்கொட்டி நின்று ஆடுமாம்
மலைகள் நெறு நெறு நெறு என அலைகள் சுவறிட அசுரர் மடிய அயில் கடவு முருகன்சுவறிட: வற்றிட; அயில்: வேல்; கடவு: செலுத்தும்
மகுடவட கிரி அலைய மலையும் முலை வநிதை குற வரிசை இன மகள் அவளுடன்மகுட வடகிரி: சிகரங்களை உடைய மேருமலை; மலையும்: போரிட்டு வெல்லும்; வரிசை: புகழ்;

சிலை குலிசன் மகள் மருவு புயன் இலகு சரவணச் சிறுவன்

சிலை: வில்; குலிச: வஜ்ராயுதம்; குலிசன்: இந்திரன்; இந்திரன் மகள்: தேவானை
அயன் வெருவ விரகில் சிரமிசையில் வெகுசினமொடு அடி உதவும் அறுமுகவன்  சேவல் திருத் துவசமே.அயன்: பிரமன்; வெருவ: அஞ்ச; விரகு: சமர்த்து; விரகன்: சமர்த்தன்; அடி உதவும்: குட்டு வைக்கும்

உலகில் ... இந்த உலகத்திலே,

அடியவர் ... முருகனுடைய அன்பர்களுக்கு,

அனுதினமும் வரும் ... ஒவ்வொரு நாளும் ஏற்படுவதான,

இடர் அகல ... துன்பங்கள் விலகும்படியும்;

உரிய ... அவர்களுக்கு உரியதான,

பரகதி ... முக்தி நிலையைக்,

தெரியவே ... காண்பித்தும்;

மணி உரகம் என ... (தங்களுடைய) படங்களில் மாணிக்கத்தைத் தாங்கியிருக்கும் நாகங்களைப் போல

உழலும் ... திரிந்து (அச்சத்தைத் தருவதான),

இருவினையும் முறைபடவும் ... நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினைகளும் ஒன்றேபோல் பயன்கெட்டு அழியவும்,

(தீவினையின் பயனை அழிப்பது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  நல்வினைப் பயனையும் ஏன் அழிக்க வேண்டும் என்று கேட்கத் தோன்றலாம்.  நல்வினையும் அந்த வினைக்கேற்ப பிறவியைத் தருவதால், பிறவியே வேண்டாம் என்ற நிலையில் இரண்டு வினைகளையும் களைவதே அருள்.  இதையே

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

என்றார் வள்ளுவர்).

இருள்கள் மிடி கெட ... (ஞானமற்ற நிலையான) இருட்டும், செல்வமற்ற நி8லயான) வறுமையும் (இரண்டும் ஒன்றுபோல்) அழிந்துபடும்படியாக,

அருளியே ... அருளை வழங்கியும்;

கலகமிடும் ... வேதனைகளை ஏற்படுத்தும் (கலகம்: சச்சரவு; சச்சரவால் விளையும் வேதனை.  ‘கலகத்தரக்கர் பலர் எங்கள் முத்து மாரியம்மா, கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் எங்கள் முத்து மாரியம்மா’ — பாரதி)

அலகை குறள் ... பேய்களும் குட்டிச்சாத்தான்களும்,

மிகு பணிகள் ... பல பாம்புகளும்,

வலிமையோடு ... மிகுந்த பலத்தோடு,

கடினம் உற வரில் ... பெரிய துன்பத்தைத் தருவதற்காக வந்தால்,

அவைகளை ... அவற்றையெல்லாம்,

கண்ணைப் பிடுங்கி உடல் தன்னைப் பிளந்து ... கண்களைப்
பிடுங்கியும் உடல்களைப் பிளந்தும்,

சிறகைக் கொட்டி நின்று ஆடும் ... தனது சிறகுகளை அடித்துக்
கொண்டு கூத்தாடும்

(அப்படிக் கூத்தாடுவது எது என்று கேட்டால்)

மலைகள் நெறு நெறு நெறு என ... எல்லா மலைகளும் நெறுநெறுவெனப் பொடிப்பொடியாகவும்,

அலைகள் சுவறிட ... கடல், அலைகளற்றதாக வறண்டு போகவும்,

அசுரர் மடிய ... அரக்கர்கள் இறக்கவும்,

அயில் கடவு முருகன் ... வேலாயுதத்தைப் செலுத்தியவனான முருகன்;

மகுட வட கிரி அலைய ... சிகரங்களை உடைய மேருமலை அலைவு படும்படி (தோற்கும்படி),

மலையும் ... எதிர்ப்பதான,

முலை வனிதை ... தன பாரங்களை உடையவள்;

குறவர் இசை இனமகள்... புகழ்மிக்க வேடர் இனத்தவவேடர் குலத்துப் பெண்ணான,

அவளுடன் ... வள்ளிப் பிராட்டியையும்,

சிலை குலிசன் மகள் ... வில்லையும் வஜ்ராயுதத்தையும் ஏந்தியவனான இந்திரனுடை திருமகளான தேவானையையும்,

மருவு புயன் ... அணைத்திருப்பதான (பன்னிரண்டு) தோள்களை உடையவன்,

இலகு சரவணச் சிறுவன் ... விளங்கும் சரவணப் பொய்கையில்
(உதித்த) குமரன்;

அயன் வெருவ ... பிரம தேவன் பயங்கொள்ளும்படி,

விரகில் ... மிக்க சமர்த்தனாக,

சிரமிசையில் ... தலையின் மேல்,

வெகு சினமொடு அடி உதவும் ... மிகுந்த கோபத்துடன் குட்டியவன்;

அறுமுகன் ... சண்முகப் பெருமானுடைய

சேவல் திருத்துவசமே ... கொடியிலே (விளங்குவதான) சேவலே அது.

உலகத்தில் தினந்தோறும் நாடிவரும் அடியவர்களுடைய துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு உரிய முக்தியைக் காட்டியருளி; ரத்தினங்களைக் கொண்ட, திரிபவையான பாம்புகளைப் போன்றவையான நல்வினை தீவினை இரண்டையும் ஒன்று போல சமனப்படுத்தி; அறியாமையான இருளும், பொருள் இல்லாததால் ஏற்படும் வறுமையையும் நீக்கி; வேதனையை உண்டாக்கும் பேய்களும் குட்டிச் சாத்தான்களும் நஞ்சு நிறைந்த பாம்புகளும் வலிமையோடு கொடுமை செய்ய வந்தால் அவற்றைக் கண்ணைப் பிடுங்கியும், உடலைப் பிளந்தும், சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டு ஆடல் புரிவது (அது எது என்று கேட்டால்)

மலைகள் பொடிப்பொடியாகப் போகவும்; கடல் வற்றிப் போகவும்; அசுரர்கள் மடிந்து ஒழியவும் வேலை விடுத்த முருகப் பெருமான்; (அவர்) மேருமலை தோற்கும்படியான தனபாரங்களை உடையவளும், குறவர்களுடைய புகழ்மிக்க கூட்டத்தில் வளர்ந்தவளுமான வள்ளிப்பிராட்டியையும்; வில்லையும் வஜ்ராயுதத்தையும் ஏந்திய இந்திரனின் திருமகளான தேவானையையும் தழுவுகின்ற பன்னிரண்டு புயங்களை உடையவர்; சரவணப் பொய்கையில் உதித்தவர்; பிரமதேவன் அஞ்சும்படியாக அவனுடைய தலையிற் குட்டியவர்—இப்படிப்பட்டவரான அறுமுகப் பெருமானுடைய கொடியில் விளங்குதான சேவலே அது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.