சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 87

மருகி அலறிட, மடமடென உகிர்தடத்துக் கொத்துமாம் என்று கூட்டவேண்டும்.  அவை அலற, சேவல் மடமடவெனத் தாக்கியும் கொத்தியும் செய்யும்

Updated On :11 டிசம்பர் 2015, 7:27 am

பதச் சேதம்

சொற் பொருள்

எரி அனைய வியன் நவிரம் உள கழுது பல பிரம ராட்சதர்கள் மிண்டுகள் செயும்எரி: தீ; வியன்: விரிந்த, பெரிய; நவிரம்: ரோமம்; கழுது: பேய்; மிண்டு: (வேதனையைத் தருவதான) குறும்பு
ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை ஈனப் பசாசுகளையும்ஏவல்: ஏவுதல், ஏவிவிடுதல்; பசாசு: பிசாசு; நனி: மிகுதியான; ஈன: ஹீன, குறைவுற்ற, இழிந்த
கரி முருடு பெரியமலை பணை எனவும் முனையின் உயர் ககனமுற நிமிரும் வெங்கண்கரி: கரிய, கருத்த; முருடு: (கரடு) முரடான; பணை: மூங்கில்; முனையின்: முனையுமானால், முயன்றால்; வெங்கண்: கொடிய கண்க(ளை உடைய)
கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர் கரத்து அடர்த்துக் கொத்துமாம்கடி: பூதம்; மறுகி: சுழல, திரிய; உகிர்: நகம்; கரத்து: கையால் (கோழி என்பதால் காலால் என்று பொருள் கொள்ள வேண்டும்); அடர்த்து: தாக்கி;
தரணிபல இடம் என வன மத கரிகள் தறிகள் பணி சமணர் கிடு கிடு என; நடனம்தரணி: மலை; வன மத கரிகள்: காட்டில் மதம் கொண்டு திரியும் யானைகள்; தறிகள்: அவற்றைக் கட்டும் தூண்கள்—இவைகூட பணியக்கூடிய சமணர்கள் நடுநடுங்க; நடனம்: நடனத்தை;
தண்டைகள் சிலம்புகள் கலின்கலின் எனச் சிறிய சரணம் அழகொடுபுரியும் வேள்தண்டையும் சிலம்பும் கலின் கலின் என ஒலிக்க; சிறிய சரணம்: சிறியதாகிய திருவடிகளால்; வேள்: செவ்வேள், முருகன்
திரிபுரம் அது எரிய நகை புரியும் இறையவன் மறைகள்  தெரியும் அரன் உதவு குமரன்நகைபுரியும்: சிரிக்கும்; இறையவன்: பரமேச்வரன்; மறைகள் தெரியும் அரன்: மறைகளாலே அறியப்படும் அரனார்;
திமிர தினகர முருக சரவணபவன் குகன் சேவல் திருத் துவசமே.திமிர(ம்): இருள் (அஞ்ஞானமாகிய இருள்); தினகரன்: சூரியன்

எரி அனைய ... தீயைப்போல,

வியன் ... விரிந்து (பரவிக்கிடக்கின்ற),

நவிரம் உள கழுது ... தலைமுடியைக் கொண்ட பேய்களையும்,

பல பிரம்ம ராட்சதர்கள் ... பல்வேறு பிரம்ம ராட்சசர்களையும்,

மிண்டுகள் செயும் ... (மக்களுக்கு வேதனை தரக்கூடிய) குறும்புகளைச் செய்கின்ற,

ஏவல் பிசாசுகள் ... (மற்றவரால்) ஏவிவிடப்பட்ட பிசாசுகளையும்,

நனி பேயில் பிசாசுகள் ... மிகவும் அதிகமான பேய்களும் பிசாசுகளையும்,

கொலை ஈனப் பிசாசுகளையும் ... கொலை செய்யக்கூடிய இழிவான பிசாசுகளையும்;

கரி ... கரிய, கருமையான நிறம் கொண்ட,

முரடு ... கரடு முரடான,

பெரிய மலை ... பெரிய மலையை(ப் போலவும்),

பணை எனவும் ... மூங்கிலைப் (போலவும்),

முனையின் ... முனைந்து, முயற்சி செய்து,

உயர் ககனமுற நிமிரும் ... ஆகாசம் வரையில் உயர்ந்து நிற்கின்ற
நிற்கும்,

வெங்கண் கடிகளையும் ... கொடுமையான பார்வையைக் கொண்ட பூதங்களையும்;

மட மடென மருகி அலறிட ... மடமடவென்று (விரைவாக) சுழன்றோடித் திரியும்படியும் அலறும்படியும்,

உகிர்தடர்ந்து கொத்துமாம் ... கால்களில் உள்ள நகங்களாலே தாக்கி, அலகாலே கொத்தும்.

(மருகி அலறிட, மடமடென உகிர்தடத்துக் கொத்துமாம் என்று கூட்டவேண்டும்.  அவை அலற, சேவல் மடமடவெனத் தாக்கியும் கொத்தியும் செய்யும்)

(இப்படிச் செய்வது எது என்று கேட்டால்)

தரணி பல இடம் என ... பல மலைகளிலே வசிப்பதான,

வன மத கரிகள் ...மதங்கொண்ட காட்டுயானைகள்,

தறிகள் ... தூண்கள் (எல்லாமும்),

பணி ... (இவர்களுக்கு முன்னால் நாம் எம்மட்டு என்று) பணிகின்ற

சமணர் கிடு கிடு என ... அமணர்களின் கூட்டம் கிடு கிடுத்து நடுங்க,

(மதயானைகள் போல மலைகளில் திரிந்த; நிர்வாணர்களானபடியால் தூண்களை ஒத்த; அவற்றின் தன்மையை விஞ்சிய சமணர்கள் அஞ்சும்படியாக)

தண்டைகள் சிலம்புகள் கலின் கலினென ... (பாதங்களில்) தண்டையும் சிலம்பும் கனிகாலில் அணிந்துள்ள தண்டைகளும் கலீர் கலீர் என்று ஒலிக்க,

சிறிய சரண அழகொடு நடனம் புரியும் வேள் ... தன்னுடைய இளந்திருவடிகளால் மிக அழகாக நடனம் புரிகின்ற செவ்வேளான முருகனும்;

திரிபுரம் அது எரிய ... முப்புரங்கள் பற்றி எரியும்படியாக,

நகை புரியும் இறையவன் ... (சிரித்துப் புரமெரித்த) புன்முறுவல் பூத்த இறையவனும்,

மறைகள் தெரியும் அரன் ... வேதங்கள் தெரிந்துகொண்டு அறிவிப்பவனானவனுமான அரன், பரமேச்வரன்,

உதவு குமரன் ... (தன்னுடைய மூன்றாவது கண்ணிலிருந்து வெளிப்படுத்தி) உதவிய குமாரக் கடவுள்;

திமிர தினகர முருக ... அறியாமை இருளை நீக்குகின்ற ஞான சூரியனான முருகள்;

சரவணபவன் குகன் ... சரவணமாகிய நாணல் பொய்கையில் உதித்தவன்; மனம் என்னும் குகையில் வீற்றிருக்கும் குகன்; இப்படிப்பட்ட அறுமுகனுடைய

செவல் திருத்துவசமே ... கொடியில் விளங்கும் சேவலே தான் அது.

தீயைப் போல விரிந்து பரந்த மயிரை உடைய பேய்களையும்; பலவகையான பிரம ராட்சதர்களையும்; பிறரால் ஏவப்பட்டு, வேதனை தருவதான குறும்புகளைச் செய்யும் பிசாசுகளையும்; கொலைசெய்யும் இழிவான பிசாசுகளையும்; கரடுமுரடான மலைகள், மூங்கில்கள் என்றெல்லாம் நினைத்த வடிவத்தை எடுக்கும் கரிய நிறத்தை உடைய, ஆகாயத்தை அளாவி உருவெடுத்து நிற்கும் கொடிய கண்களையுடைய பிசாசுகளையும்;

கலக்கம் எய்தி, சுழன்றோடும்படி, தன் கால் நகங்களால் தாக்கி, அலகாலே கொத்தும்.  எது அப்படிக் கொத்துமோ என்று கேட்பீர்களனால்,

பலமலைகளை இருப்பிடமாகக் கொண்டவர்கள்; மதங்கொண்ட யானைகளைப் போலவும் (நிர்வாணர்களாக இருப்பதால்) தூண்களைப் போலவும், (யானைகளும் தூண்களும் இவர்களுக்கு முன்னால் நாம் எம்மாத்திரம் என்று பணியக்கூடியவர்களான) சமணர்கள் கிடுகிடென்று நடுங்கும்படியாக,

தனது இளந்திருவடிகளில் அணிந்துள்ள தண்டையும் சிலம்பும் கலீர் கலீரென்று ஒலிக்கும்படி நடனமாடுகின்ற செவ்வேள்; சிரித்தே புரம் எரித்த, மறைகளால் அறியப்பட்டு அறிவிக்கப்படும் பரமேச்வரர் அருளியவன்; சரவணம் என்ற நாணற் காட்டில் தோன்றியவன்; அடியார்களுடைய இதயமாகிய குகையில் வீற்றிருப்பவன்; சுப்பிரமணிய மூர்த்தியுடைய கொடியிலே இருப்பதான சேவலே அது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.