மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றுவன்வந் தாலென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே.
ஆகாயத்தை முட்டும்படியாக நெடிய உருவத்தைக் கொண்ட யமன் எனக்கெதிரே வருகின்ற (என்னுடைய இறுதிக் காலத்திலே) உன்னுடைய தோகைமயிலாகிய குதிரையில் அமர்ந்தபடி என்முன்னே காட்சியளிக்க வேண்டும் என்றார் கந்தர் அலங்காரத்திலே. இந்த அடிகளின் பின்னே தூய்மையானதும் அழியாததுமான முக்தியை அருளும் தியாக மலையான தியாகராஜப் பெருமானைத் தன் வலதுபாகத்தில் வைத்த பரமமங்களம் கொண்ட உமையம்மையின் மகனே என்று அம்மையைப் புகழ்கிறார்.
இறுதி மூச்சு பிரியும் நேரத்திலே கண்முன்னாலே வேலும் மயிலும் இரண்டு பிராட்டியருமாய் குமரன் காட்சியளிக்கின்ற அந்தத் திருக்கோலத்தை நினைக்கும்போதெல்லாம் மயிர்சிலிர்க்கிறது. சேவல் விருத்தத்தின் மூன்றாம் பாடலிலும் இந்தக் காட்சியைக் காட்டுகிறார். யமன் முன்னே வந்து நிற்கின்ற சமயத்தில் வேலும் மயிலுமாய் இறைவன் தோன்றுகிறான். இறைவனுடைய வரவை அறிவித்தபடி பெருங்குரலால் கூவிக்கொண்டு சேவல் முன்னே வருகிறது. அடுத்ததாக, பாண்டியனுக்கு வந்த வெப்பு நோயைப் போக்கி அமணரைக் கழுவேற்றியவரும், சீர்காழியில் உதித்தவருமான முருகனுடைய கொடியில் விளங்கும் சேவல் என்று முடிக்கிறார். திருஞானசம்பந்தர் முருகப்பெருமானுடைய திருவவதாரமே என்று பல பாடல்களில் சொல்வதைப் போலவே இந்தப் பாடலிலும் குருநாதர் சொல்கிறார். இன்று பாட்டைப் பார்ப்போம்; பதிவைக் கேட்போம். நாளை பொருளைப் பார்ப்போம்.
கரிமுரட் டடிவலைக் கயிறெடுத் தெயிறுபற்
களையிறுக் கியு முறைத்துக்
கலகமிட் டியமன்முற் கரமுறத் துடருமக்
காலத்தில் வேலு மயிலும்
குருபரக் குகனுமப் பொழுதில்நட் புடன்வரக்
குரலொலித் தடிய ரிடரைக்
குலைத்தலறு மூக்கிற் சினப்பேய்க ளைக்கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்
அரியகொற் கையனுடற் கருகும்வெப் பகையையுற்
பனமுறைத் ததமி கவுமே
வமணரைக் கழுவில்வைத் தவருமெய்ப் பொடிதரித்
தவனிமெய்த் திட அருளதார்
சிரபுரத் தவதரித் தவமுதத் தினமணிச்
சிவிகைபெற் றினிய தமிழைச்
சிவனயப் புறவிரித் துரைசெய்விற் பனனிகற்
சேவற் றிருத்து வசமே.
</p><p align="JUSTIFY"> </p><p><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/237058415&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

சிவகாசியில் கடும் சவாலை எதிா்கொள்ளும் ராஜேந்திர பாலாஜி!

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

