சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 89

கரிய நிறத்துடனும், முரட்டுத் தனத்துடனும் பாசக் கயிற்றைக் கையில் வலைபோல் ஏந்திக் கொண்டு, பற்களைக் கடித்தபடியும் சினத்துடன் முறைத்தபடியும் எமன் என் எதிரில் வந்து என்னைத் தன் கையால் பற்றி அழைத்துச் செல்லும்

Updated On :15 டிசம்பர் 2015, 5:23 am

பதச் சேதம்

சொற் பொருள்

கரி முரட்டடி வலைக் கயிறு எடுத்து எயிறு பற்களை இறுக்கியும் முறைத்துக்கரி: கரிய; முரட்டடி: முரட்டுத்தனமாக; வலைக் கயிறு: (வீசப்படும்) வலையைப் போன்ற கயிறு; எயிறு: கோரைப் பல்;
கலகமிட்டு எமன் முன் கரம் உற துடரும் அக் காலத்தில் வேலும் மயிலும்கலகமிட்டு: கலக்கம் ஏற்படும்படிச் செய்து; எமன் முன் கரம் உற: எமன் (எனக்கு) முன்னே தோன்றி, கையால் பற்ற; அச்சமயத்தில் வேலோடும் மயிலோடும்
குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வரக் குரல் ஒலித்து அடியர் இடரைக்குருபரனாகிய குகன், கனிவோடு (என்) எதிரே தோன்ற, மயிலுக்கு முன்னால் உரத்த கூவலோடு அறிவிப்புச் செய்துகொண்டு
குலைத்து அலறு மூக்கில் சினப்பேய்களைக் கொத்தி வட்டத்தில் முட்ட வருமாம்அலறு மூக்கில்: உரத்த கூவலை எழுப்பும் அலகால்; கோபம் கொண் பேய்களைக் கொத்தி, வட்டமிட்டு அந்தப் பேய்களை முட்டுவதற்காக வரும்
அரிய கொற்கையன் உடற் கருகும் வெப் பகையை உற்பனம் உரைத்து அதம் மிகவும் ஏவும்கொற்கையன்: பாண்டியன்—இங்கே கூன் பாண்டியன்; வெப்பகையை: வெப்பு நோயை; உற்பனம்: உற்பவித்ததாகிய மூலகாரணம்; அதம்: கெடுதலான செயல்கள் மிகவும் ஏவும்: பலவற்றையும் செய்யுமாறு ஏவிய, தூண்டிய
அமணரைக் கழுவில் வைத்து அவரும் மெய்ப் பொடி தரித்து அவனி மெய்த்திட அருளதார்சமணர்களைக் கழுவில் ஏற்றியவரும்; அவரும்: உலகத்தில் மற்றயவரும்; மெய்ப்பொடி: மெய்யானதாகிய திருநீறு; தரித்து: அணிவித்து; அவனி மெய்த்திட அருளதார்: அருள் அது ஆர்—அருள் பாலித்தவர்;
சிரபுரத்து அவதரித்து அமுதத் தினமணிச் சிவிகை பெற்று இனிய தமிழைச்சிரபுரம்: சீர்காழி; அமுத: அமுதம் போலக் குளிர்ந்த; தினமணி: சூரியனைப் போல பிரகாசமான; சிவிகை: பல்லக்கு, முத்துப் பல்லக்கு;
சிவன் நயப்புற விரித்து உரைசெய் விற்பனன் இகல்சேவற் றிருத்து வசமே.நயப்புற: விரும்பிக் கேட்க; உரைசெய் விற்பனன்: ஞான சம்பந்த சுவாமிகளாக அவதரித்த; இகல்: வலிமை நிறைந்த.

கரி ... கருமையான (கரிய) நிறத்தையும்,

முரட்டடி ... முரட்டுத் தன்மையையும் (கொண்டு),

வலை கயிறு எடுத்து... (உயிர்களை) வலை (வீசிப் பிடிப்பதான) பாசக் கயிற்றைக் கையில் எடுத்துக் கொண்டு,

எயிறு பற்களை ... (பிறைச் சந்திரனைப் போல வளைந்த) கோரைப் பற்களையும் மற்ற பற்களையும்

இறுக்கியு(ம்) முறைத்துக் ... நெறுநெறனக் கடித்துக் கொண்டும், முறைத்துக் கொண்டும்,

கலகமிட்டு ... கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில்,

எமன் ... யமனானவன்,

முன் கரமுற தொடரும்.. என் முன்னே வந்து தோன்றி, என்னைக் கையால் பற்றி இழுத்துக் கொண்டு போகும்

அக் காலத்தில் ... அந்த இறுதிக் கணத்திலே,

வேலும் மயிலும் ... (ஞனாத்தின் வடிவாகிய) வேலைக் கையில் தாங்கியபடியும், (ஓங்காரத்தின் வடிவாகிய) மயிலில் அமர்ந்தபடி,

குருபரக் குகனும் ... குருபரனும், அடியார்களுடைய இதய குகையிலே வசிப்பவனுமான முருகன்,

அப்பொழுதில் நட்புடன் வர ... அந்தச் சமயத்திலே என் முன்னே கனிவோடு வரும்போது,

குரல் ஒலித்து ...(அப்படி அவன் வருவதை, அவனுடைய மயில்வாகனத்தின் முன்னே தோன்றி அவன் வருகையைத்) தன் பெருங்கூவலாலே அறிவித்து,

அடியர் இடரை ... அடியாருடைய துன்பங்கள் அனைத்தையும்,

குலைத்து ... கெடுத்து,

அலறு மூக்கில் ... பெருங்குரலாக ஒலிக்கும் தன் கூவல் வெளிப்படும் அலகினால்,

சினப் பேய்களை ... கோபம் கொண்ட பேய்களை,

கொத்தி ... கொத்தியும் குதறியும்,

வட்டத்தில் முட்ட வருமாம் ... வட்டமாகச் சுற்றிச் சுற்றி வந்து அவற்றை மோதித் தகர்ப்பதுபோல முட்டுவதற்காக வரும்

(அப்படி வருவது எது என்று கேட்டால்,)

அரிய கொற்கையன் ... அருமை வாய்ந்த கொற்கையை ஆண்டவன் (கொற்கை: மதுரை; கொற்கையன்: பாண்டியன்; இங்கே கூன்பாண்டியன்),

உடல் கருக ... உடலே வெந்து கருகும்படி,

வெப்பகையை ... வெப்பு நோயாக வந்த பகையை (ஜுரத்தை)

உற்பனம் உரைத்து ... (வெப்பு நோய் ஏற்பட்டதன்) மூலகாரணத்தை எடுத்துச் சொல்லி,

அதம் மிகவும் ஏவும் அமணரை ... பலவிதமான கொடிய செயல்களைச் செய்யும்படி ஏவிய, தூண்டிய சமணர்களை,

கழுவில் வைத்து ... வாதத்தில் வென்று, கழுவிலே ஏற்றி,

மெய்ப் பொடி தரித்தவர் ... மெய்மையேயான திருநீற்றைப் பிறர் அணியுமாறு செய்தவரும்;

அவனி மெய்த்திட ... உலகம் உண்மையைக் காணும்படிச் செய்தவரும்,

அருளதார் (அருள் அது ஆர்)... அருள் ஆர்த்த, அருளைச் செய்தவரும்,

சிரபுரத்து அவதரித்து ... சீர்காழியாகிய திருத்தலத்திலே அவதாரம் செய்தவரும்;

அமுதத் தினமணி ... அமுதத்தைப் போன்ற குளுமையையும், சூரியனைப் போன்ற ஒளியையும் கொண்ட,

சிவிகை பெற்று ... முத்துப் பல்லக்கை இறைவனிடமிருந்து பெற்றவரும்; பெற்று,

இனிய தமிழை ...இனிமையான தமிழைக் கொண்டு (தேவாரப் பாக்களை),

சிவன் நயப்பு உற விரித்து உரை செய் ... சிவ பெருமான்
விருப்பத்துடன் கேட்கும்படிப் விரிவாகப் பாடி அருளியவருமான

விற்பனன் ... திருஞான சம்பந்தராக (அவதரித்த முருகனுடைய),

இகல் சேவல் திருத் துவசமே ... கொடியிலே விளங்கும் வலியதாகிய சேவலே அதுவாகும்.

கரிய நிறத்துடனும், முரட்டுத் தனத்துடனும் பாசக் கயிற்றைக் கையில் வலைபோல் ஏந்திக் கொண்டு, பற்களைக் கடித்தபடியும் சினத்துடன் முறைத்தபடியும் எமன் என் எதிரில் வந்து என்னைத் தன் கையால் பற்றி அழைத்துச் செல்லும் அந்த இறுதிக் கட்டத்திலே, குருபரனாகிய குகப்பெருமான் ஞானமாகியே வேலை ஏந்தி, ஓங்கார வடிவமாகிய (தோகை விரித்தாடும் மயில் ‘ஓ’ம் என்னும் எழுத்தின் வடிவாக இருக்கிறது) மயில்மீது ஆரோகணித்து என்முன்னே கனிவோடு வர, அவன் அப்படி வருதைத் தன் பெருங்கூவலால் அறிவித்தபடி அவனுக்கு முன்னே நடைபோட்டு வரும்.  எது அப்படி வருமென்றால்,

அருமை நிறைந்த கூன்பாண்டியனுடைய உடலே கருகிப் போகும் அளவுக்கு ஜுரமாகிய வெப்புநோய் வருத்த, அவனுக்கு அப்படிப்பட்ட நோய் ஏற்படக் காரணம் என்ன என்பதை விளக்கிச் சொல்லி*, கெடுதலான பலசெயல்களுக்குக் காரணமாக அவற்றைத் தூண்டிவிட்ட சமணர்களோடு வாதம் செய்து அவர்களைக் கழுவில் ஏற்றியவரும்; மெய்மையே நிறைந்ததாகிய திருநீற்றைப் பலரும் அணியச் செய்தவரும்; உலகம் உண்மையை உணரும்படி அருள்பாலித்தவரும்; சீர்காழித் தலத்திலே அவதரித்தவரும்; அமுதத்தைப் போலக் குளிர்ச்சியையும், சூரியனைப் போல பிரகாசத்தையும் உடைய முத்துப் பல்லக்கை சிவபெருமான் கொடுக்க, பெற்றவரும்; இனிய தமிழால் தேவாரப் பதிகங்களைச் சிவன் விரும்பிக் கேட்குமாறு விரிவாகப் பாடியவருமான, திருஞான சம்பந்த மூர்த்தியாக அவதரித்தவனான, முருகனுடைய கொடியில் விளங்குகின்ற வலிமை நிறைந்த சேவலே அதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.