சேவல் விருத்தத்தின் நான்காம் பாடலுக்கான பொருளைக் காண்போம்.
பதச் சேதம் | சொற் பொருள் |
| அச்சப்படக் குரல் முழக்கிப் பகட்டி அலறிக் கொட்டமிட்டு அமரிடும் | குரல் முழக்கி: குரலெழுப்பி; பகட்டி: வெருட்டி, அச்சுறுத்தி; கொட்டம்: ஆர்பாட்டம்; |
| அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டு கடி அறுகுழைகளைக் கொத்தியே | அற்பக் குற: சிறுகுடியான குறவர்கள்; அறுகுழை: வெட்டுப்பட்டு அறுந்து விழுந்திருக்கும் இலை, தழை முதலானவை; |
| பிச்சுச் சினத்து உதறி எட்டுத் திசைப் பலிகள் இட்டுக் கொதித்து விறலே | பிச்சு: பிய்த்து; விறல்: வலிமை, வீரம்; |
| பெற்றுச் சுடர்ச் சிறகு தட்டிக் குதித்து இயல்பெறக் கொக்கரித்து வருமாம் | சுடர்ச் சிறகு: (சேவலுடைய) ஒளிமயமான சிறகு; தட்டிக் குதித்து: படபடவென அடித்துக் கொண்டு, குதித்து; இயல்பெற: அழகுபெற; |
| பொய்ச் சித்திரப் பலவும் உட்கத் திரைச்சலதி பொற்றைக் கறுத்து அயில் விடும் | பொய்ச் சித்திர: கற்பனையான பல தத்துவங்களை; உட்க: அஞ்ச; திரை: அலை; சலதி: கடல்; பொற்றை: மலை (அல்லது) காடு; கறுத்து: கோபித்து; அயில்: வேல் |
| புத்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல் புகழ்ச் செட்டி சுப்ரமணியன் | புத்தியையைம் பிரியத்தையும் பூண்டவன்; |
| செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி தித்திக்கும் முத்தமிழினைத் | செச்சை: வெட்சிப் பூ; புயத்தன்: தோளை உடையவன்; க்ரிடத்தன்: கிரீடத்தன்; மகுடத்தை அணிந்தவன்; |
| தெரிய வரு பொதிகை மலை முநிவர்க உரைத்தவன் சேவல் திருத் துவசமே. | பொதிகைமலை முநிவர்: அகத்தியர் |

அச்சப்பட ... எதிரிகள் நடுங்கும்படியாக,

குரல் முழக்கி ... பெருங்குரல் எழுப்பி,

பகட்டி ... அச்சுறுத்தி, விரட்டி,

அலறி ... கூக்குரலிட்டு,

கொட்டமிட்டு ... ஆர்பாட்டம் செய்து,

அமரிடும் அற்பக் குறப் பலிகள்... போர்புரிபவர்களான சிறுகுடிக் குறவர்கள் (வேடர்கள்) (தங்களுடைய சிறுதெய்வங்களுக்குப் படைத்திருக்கும் பலிப் பொருட்கள்,

வெட்டுக்கள் பட்டு ... வெட்டுப் பட்டுக் கிடக்க,

அஞ்சும்படி கூக்குரலிட்டும், அச்சுறுத்தியும், ஆரவாரித்தும் போர்புரியும் குறுவர்கள், சிறுதெய்வங்களுக்கு வெறிஅயர் களங்களில் பலியாக இட்டுள்ள, வெட்டுப்பட்ட ஆடு, கோழி போன்ற பலிப் பொருட்களையும்)

கடி அறு குழைகளை கொத்தியே... (பலியாக இட்ட ஆடு முதலானவை) கடித்துப் போட்ட இலை தழைகளைத் தன் அலகால் கொத்தியும்,

பிச்சு சினத்து உதறி ... பல துண்டங்களாகப் பிய்த்துப் போட்டும், (நாலுபுறங்களிலும் வீழும்படியாக) உதறி எறிந்தும்,

எட்டுத் திசைப் பலிகள் இட்டு... (பலிப் பொருளை) எட்டு திசைகளிலும் எட்டு திசைகளிலும் அடைத்து பலியை இட்டு வீசுவதைப் போல,

கொதித்து விறலே பெற்று ... கோபமுற்றும், வீரத்துடன் எழுந்தும்,

சுடர் சிறகு தட்டி ... ஒளிபடைத்த தன் சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டும்,

இயல் பெற கொக்கரித்து வருமாம் ... மிக அழகாகக் கொக்கரித்துக் கொண்டு வரும்.

(சேவலின், ‘கொக்கறுக்கோ’ என்ற கூவலுக்கு, ‘கொக்கு அறு அக்கோ’ என்று பிரித்து, மாமரமாக நின்ற சூரனை வகிர்ந்த அந்தத் தலைவன்’ என்று வாரியார் சுவாமிகள் பொருள் சொல்வார். கொக்கு என்றால் மாமரம் என்றும் பொருள். நயமான உரை)

அப்படி வருவது எது என்று கேட்பீர்களானால்,

பொய்ச் சித்திரப் பலவும் உட்க... பொய்யான கற்பனைகள் பலவும் அஞ்ச

(முருகன் வேல்விட்டதால் அசுரர்களைப் பற்றிய பொய்யான கற்பனைகள் அஞ்சிச் சிதறின)

திரைச் சலதி... அலை வீசும் கடல் மீதும்,

பொற்றை கிரெளஞ்ச கிரி மீதும் கறுத்து ... காடு நிறைந்ததான கிரெளஞ்ச மலையின் மீதும் கோபித்து,

அயில் விடும் ... வேலாயுதத்தை விடுத்தவனும்;

புத்தி பிரியத்தன் ... புத்தியையும் பிரியத்தையும் (அறிவையும் அன்பையும்) பூண்டவனும்;

வெகு வித்தைக் குணக் கடல் ... பலவிதமான வித்தைகளின், குணங்களின் கடலானவனும்;

புகழ் செட்டி சுப்ரமணியன் ... புகழ் மிக்க செட்டியாகிய சுப்ரமணியக் கடவுள்,

(செட்டி என்பதன் விளக்கத்தை நேற்றைய 90ம் பகுதியில் பார்க்கவும்)

(சுப்ரமண்யன்: சு: மேலான; பிரம: பெரிய பொருள்; -ணிய: (அதிலிருந்து தோன்றிய — மேலான பெரிய பொருளான சிவனாரிடத்திலிருந்து தோன்றியவன், சோதிப்பிழம்பானவன்)

செச்சைப் புயத்தன் ... வெட்சி மாலையை அணிந்த தோளை உடையவனும்,

நவ ரத்ன க்ரிடத்தன் ... நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட மகுடத்தை அணிந்தவனும்,

மொழி தித்திக்கும் முத்தமிழினை ... இனிமை நிறைந்த மொழியான முத்தமிழை,

தெரிய வரு பொதிகை மலை முனிவர்க்கு ... பயில்வதற்காகத் தன்னிடம் வந்த பொதிகை மலையில் வாழும் மாமுனியான அகத்தியருக்கு,

உரைத்தவன் ... (மொழியின் இலக்கணம் முதலானவற்றைச்) சொல்லியருளியவனுமான முருகனுடைய

சேவல் திருத் துவசமே ... கொடியில் உள்ள சேவல்தான் அது.

எதிரிகள் அஞ்சும்படியாகப் பெருங்கூச்சல் எழுப்பியும், ஆரவாரித்தும் போரிடும் சிறுகுடிகளான குறுவர்கள் இடும் பலிகளில் வெட்டுண்டு கிடக்கும் பலிப்பொருட்களையும், (அந்தப் பலிப் பொருள்களான ஆடு முதலியவை) கடித்துப் போட்டிருந்த இலை தழை முதலியவற்றையும் கொத்தியும், பிய்த்துக் கோபத்துடன் எட்டுத் திக்குகளிலும் விழும்படி உதறியெறிந்தும், கோபம் கொண்டும், வலிமை ஏறியும், ஒளிபடைத்த தன் சிறகுகளைப் புடைத்துக் கொண்டும், குதித்துக் கொண்டும் அழகிய நடையிட்டு, கொக்கரித்துக் கொண்டு வரும். அப்படி வருவது எதுவென்று கேட்டால்,

பொய்யான கற்பனைகள் பலவும் அஞ்சவும்; அலை வீசும் கடல்மேலும், கிரவுஞ்ச பர்வதத்தின் மீதும் சினந்து, வேலை விடுத்தவனும்; அறிவுக்கும் அன்புக்கும் குணங்களுக்கும் கடலாக விளங்குபவனும்; புகழ்மிக்க செட்டியான சுப்பிரமணியனும்; வெட்சிமாலை அணிந்த தோளை உடையவனும்; நவரத்தினம் பதித்த மகுடத்தைத அணிந்தவனும்; இனிய தன்மையை உடையதான இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் அறிந்து கொள்வதற்காக வந்த பொதிகைமலை முனியான அகத்தியருக்குத் தமிழை உணர்த்தியவனுமான முருகப்பெருமானுடைய கொடியில் விளங்குவதான சேவலே அதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை