பதச் சேதம் | சொற் பொருள் |
| தானாய் இடும்பு செயு மோகினி இடாகினி தரித்த வேதாள பூதம் | இடும்பு: இடும்பை—துன்பம்; இடாகினி: டாகினி (பிணந்தின்னும் பேய்); தரித்த: (இவற்றோடு) சேர்ந்து (இருப்பதான) |
| சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித் தடிந்து சந்தோடம் உறவே | சருவ: சர்வ; அங்கிரி: கால், பாதம்; தடிந்து: அழித்தல், குறைத்தல்; சந்தோடம்: சந்தோஷம், மகிழ்ச்சி |
| கோனாகி மகவானும் வானாள வானாடர் குலவு சிறை மீள | கோனாகி: கோன் ஆகி—மன்னனாகி; மகவான்: இந்திரன்; வானாடார்: வான நாட்டில் இருப்பவர்களான தேவர்கள்; குலவு: இருக்கும்; (முந்தைய அடியிலுள்ள சந்தோடமுறவே என்பதை, மகவானும் கோனாகி சந்தோடமுறவே என்று கொண்டுகூட்டிக் கொள்கிறோம்.) |
| அட்ட குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள் கொட்டி எட்டிக் கூவுமாம் | அட்ட: அஷ்ட; குலகிரி: சிறந்த மலைகள்; அசுரர்கிளை: அசுரர்களை உறவினரோடு கூட்டமாக; வெஞ்சிறை: (பகைவர்களுக்கு) வெம்மையான; சிறைகள்: சிறகுகளை |
| மானாகம் அக்கு அறுகு மான் உடையன் நிர்த்தம் இடு மாதேவன் நல் குருபரன் | மானாகம்: மான், நாகம்; அக்கு: எலும்பு; அறுகு: அறுகம்புல்; மான் உடையான்: மான் தோலை உடையாக அணிந்தவன்; நிர்த்தம்: நடனம்; |
| வான் நீரம் அவனி அழல் காலாய் நவக்கிரகம் வாழ்நாள் அனைத்தும் அவனாம் | வான்: ஆகாயம்; நீரம்: நீர்; அவனி: பூமி; அழல்: அக்கினி; கால்: காற்று; வாழ்நாள்: வாழும் நாள்; |
| சேனாபதித் தலைவன் வேதாவினைச் சிறைசெய் தேவாதி கட்கு அரசு; கள் | வேதா: பிரமன்; தேவாதிகட்கு அரசு: தேவர்களுக்கெல்லாம் தலைவன். இந்த அடியின் இறுதியில் ‘கட்’ என்று நிற்பதை, ‘கள்’ என்று பிரித்து அடுத்த அடியோடு கூட்டுகிறோம். |
| தேன் ஆன மைக் கடலின் மீனானவற்கு இனியன் சேவற் றிருத்து வசமே. | கள் தேனான: கள்ளையும் தேனையும் போன்ற; மீன் ஆனவற்கு: மச்சாவதாரம் எடுத்தவரான திருமாலுக்கு; இனியன்: இனிமையானவன். |

தானாய் இடும்பு செய்யும்... (ஒருவரால் ஏவிவிடப்படாமல்) தானாகவே துன்பங்களை ஏற்படுத்துபவையான,

மோகினி ... (நடுநிசியில் தனித்து நடக்கும் ஆடவர்களைப் பிடித்துக்கொள்வதான) மோகினி (என்ற பெண் பிசாசுகளும்),

இடாகினி ... பிணங்களைத் தின்னுபவையான டாகினி எனப்படும் பேய்களும்,

தரித்த வேதாள பூதம் ... இவற்றோடு சேர்ந்திருப்பதான வேதாளங்களும், பூதங்களும், இவைகளுடன் கூடி இருக்கும் வேதாளங்கள், பூதங்கள்,

சர்வ சூனியமும் ... சகலவிதமான சூனியங்கள், பில்லி ஏவல் போன்ற அனைத்தையும்,

அங்கிரியினால் உதறி ... தன்னுடைய காலால் பிடித்துத் தூக்கி உதறி எறிந்தும்;

(அங்ரி — अङ्घ्रि) என்ற வடசொல்லுக்குப் பாதம் என்று பொருள். சேவல் தன் காலையே ஆயுதமாகக் கொண்டது. எனவே இதற்குக் காலாயுதம் என்றும் பெயருண்டு. இதனாலேயே,

வேலாயுதன்சங்கு சக்ராயுதன் விரிஞ் சன்னறியாச்

சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்

காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்

பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே

என்று கந்தரலங்காரத்தில் பாடினார். காலாயுதக் கொடியோன் அருளாகிய கவசம் உண்டு; நான் யமனோடேயே பகைத்துக் கொண்டாலும், என்பால் ஆயுதம் வருவதுண்டோ என்று கேட்கிறார்)

தடிந்து ... (அந்தப் பேய்களையெல்லாம் துண்டுகளாக) வெட்டிக் (குதறியும்),

மகவானும் ... இந்திரனும்,

சந்தோடமுறவே ... மகிழ்ச்சியுற்று,

கோனாகி . வானாள.. (மறுபடியும் தேவலோகத்தின்) அரசனாகும் படியும்;

வானாடர் குலவு சிறை மீள ... வான் நாட்டவர்களான தேவர்கள் தாங்கள் சூரபதுமனிடம் அடைபட்டிருந்த சிறையிலிருந்து விடுபடும் படியும்;

அட்ட குல கிரிகள் அசுரர் கிளை பொடியாக... எண்திசைகளிலும் உள்ள பெரிய (குல) மலைகள் அனைத்தும், (அவற்றோடு) அசுரக் கூட்டங்கள் மொத்தமும் பொடியாகிப் போகும்படியும்;

வெஞ்சிறைகள் எட்டிக் கூவுமாம் ...(பகைவர்களுக்குக்) கொடியதாக (விளங்கும் தன்னுடைய) சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டும், எட்டியெட்டிக் குதித்துக்கொண்டும், பெருங்குரலெடுத்துக் கூவும்.

(அப்படிக் கூவுவது எது என்று கேட்டால்)

மானாகம் ... மான், நாகம், (கையிலே மானையும், கழுத்திலே வாசுகி என்ற பெருநாகத்தையும்)

அக்கு அறுகு மான் உடையன் ... எலும்பு மாலை, அறுகம்புல் ஆகியவற்றையும் தரித்தவரும்; மான்தோலை உடையாக உடுத்தவரும்;

(புலியதள் எனப்படும் புலித்தோலோடு மான்தோலும் சிவனுக்கு ஆடை என்பதைப் புள்ளி மான் உரி உடையீர் என்ற திருஞானசம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்)

நிர்த்தம் இடு மா தேவன் ...நடனமாடுபவருமான மஹாதேவனுக்கு,

நற்குருபரன் ...நல்ல குருமூர்த்தியானவன்—தகப்பன் சாமியானவன்;

வான் நீரம் அவனி அழல் காலாய்... ஆகாயம், நீர், பூமி, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்களாகவும்;

நவக்கிரகம் ... ஒன்பது கிரகங்களாகவும்

வாழ் நாள் அனைத்தும் அவனாம் ... (இவை அனைத்துக்கும் ஆயுட் காலமாகவும் அல்லது) காலம் எனப்படும் தத்துவமேயும் எல்லாமும் தானேயாகி விளங்குபவன்;

சேனாபதித் தலைவன் ... தேவ சேனாபதி;

வேதாவினை சிறை செய் ...பிரம்மனைச் சிறை செய்தவன்;

தேவாதிகட்கரசு ... தேவர் ஆதிகளுக்கு எல்லாம்: தேவர் முதனாலவர்களுக்கெல்லாம் தலைவன்;

கள் தேன் ஆன ... மதுவையும் தேனையும்போல,

மைக் கடலில் மீனானவற்கு இனியன் ... கரிய கடலில் மீனாக — மச்சாவதாரம் எடுத்த — திருமாலுக்கு இனியவன்;

சேவல் திரு துவசமே ... அப்படிப்பட்ட குருபரனுடைய கொடியில் விளங்குவதான சேவல்தான் அதுவாகும்.

பிறரால் ஏவப்படாமல் தானாகவே துன்பங்களை விளைவிக்கும் மோகினி, டாகினி, பேய், பூதம், சூனியம் என்ற இவற்றையெல்லாம் தன் காலாலே பற்றி உதறி எறிவதும்; இந்திரன் வானுலகுக்கு மீண்டும் தலைவனாகி மகிழ்ச்சியுறவும்; எட்டுக் குலமலைகளும், அசுரக் கூட்டங்களும் பொடியாகிப் போகவும், தனது கொடுமையான சிறகுகளை அடித்துக்கொண்டு எட்டிக் குதித்துப் பெருங்குரலால் கூவும். (எது அப்படிக் கூவுமெனில்)

மானையும், வாசுகி என்ற பாம்பையும், எலும்பு மாலையையும், அறுகம் புல்லையும் தரித்துத் திருநடனம் புரியும் மஹாதேவனுடைய குருவாக ஆனவனும்; ஆகாயம்; நீர், பூமி, நெருப்பு, காற்று என்ற பஞ்சபூதங்களும், நவக்கிரங்களும், காலம் என்ற கருத்தும் (தத்துவமும்) அத்தனையும் தானே ஆகி நிற்பவனும்; தேவர்களுடைய சேனைக்கு அதிபனும்; பிரமனைச் சிறையடைத்தவனும்; தேவர்களுக்கெல்லாம் தலைவனும்; கரிய கடலில் மச்சமாக அவதரித்த திருமாலுக்குத் தேன்போன்று இனிமையானவனும் — ஆன முருகப்பெருமானுடைய கையிலே விளங்கும் கொடியில் வீற்றிருப்பதான சேவலே அதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை