சேவல் விருத்தத்தின் ஆறாம் பாடல், மயிலோடு தொடங்குகிறது. வெளியண்டங்கள் முழுவதும் பறந்து, பாம்புகளைக் கொத்தி உதறுகின்ற மயிலோடு சேவல் தூய அன்பு பூண்டதாக எழுகிறது. அடுத்து மலையரசியாகிய அம்பிகையும், பிரகலாதரும் நரசிம்மரும் தொடர்கிறார்கள். பிரகலாதன் சுட்டிக் காட்டிய தூண் தோன்றுகிறது; நரசிம்மம் இரணியன் உடலை நகத்தால் பிளக்கிறார். பாடலைப் பார்ப்போம்.
பங்கமா கியவிட புயங்கமா படமது
பறித்துச் சிவத்தருந்திப்
பகிரண்ட முழுதும் பறந்துநிர்த் தங்கள்புரி
பச்சைக் கலாப மயிலைத்
துங்கமா யன்புற்று வன்புற் றடர்ந்துவரு
துடரும் பிரேத பூதத்
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்
மங்கையா மளைகுமரி கங்கைமா லினிகவுரி
வஞ்சிநான் முகிவராகி
மலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னுநர
சிங்கமாய் இரணியனுடல்
சிந்தஉகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன்
சேவற் றிருத் துவசமே.
</p><p align="justify"><iframe src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/238331256&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" style="width: 365px; height: 258px" /></p><p align="justify"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

