வேல் விருத்தத்தின் ஆறாம் பாடலுக்கான பொருளைப் பார்ப்போம்.
பதச் சேதம் | சொற் பொருள் |
| பந்து ஆடலில் கழங்கு ஆடலில் சுடர் ஊசல் பாடலினொடு ஆடலில் எலாம் | பந்தாடும் போதும், கழங்கு ஆடும்போதும், ஒளிபொருந்திய ஊஞ்சலில் ஆடும்போதும், (ஆடும்போது பாடப்படும்) பாடல்களிலும், நிகழ்த்தும் ஆடல்களிலும் |
| பழம் தெவ்வர் கட்கம் துணித்து இந்திரற்கு அரசு பாலித்த திறல் புகழ்ந்தே | தெவ்வர்: பகைவர், கட்கம்: வாள், |
| சந்தம் ஆரு நாள் மலர்க் குழல் அரம்பையர்களும் சசிமங்கை அனையர்தாமும் | சந்தம்: அழகு, ஆரு, ஆர்: நிறைந்த, அரம்பையர்: தேவலோகப் பெண்கள், சசி மங்கை: சசி என்பது இந்திராணியின் பெயர். தேவலோகப் பெண்களையும், இந்திராணியையும் ஒத்த மங்கையர், |
| தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும் தலைமையும் பெற்ற வைவேல் | (இந்த ஆட்டங்களின் போது பாடும் பாடல்களிலும், நடனத்தின் போதும்) தன்னையே போற்றிப் பாடும் பெருமையையும், தலைமையையும் பெற்ற கூர்மையான வேல். ப்ரதாபம்: பெருமை. வை: கூரிய |
| மந்தாகிநித் தரங்கச் சடிலருக்கு அரிய மந்த்ர உபதேச நல்கும் | மந்தாகினி: கங்கை, தரங்க: அலை, சடிலர்: சடாமுடி தாங்கியவருக்கு (சிவனுக்கு), பிரணவத்தை உபதேசித்தது |
| வரதேசிகன் கிஞ்சுகச் சிகா அலங்கார வாரணக் கொடி உயர்த்தோன் கொந்து ஆர் மலர்க் கடம்பும் செச்சை மாலையும் குவளையும் செம் காந்தளும் | வர=சிறந்த, தேசிகன்=ஆசார்யன், குரு, கிஞ்சுகம்: சிவந்த நிறம், சிகா அலங்காரம்: முடியலங்காரம் (கொடியிலுள்ள சேவலுக்குள்ள சிவந்த கொண்டையைக் குறிக்கிறது) வாரணம்: சேவல் (யானை என்றும் பொருள், இங்கே சேவல்) கொந்து: கொத்து, கடம்பு: கடப்ப மலர், செச்சை: வெட்சிப் பூ (செச்சை என்றால் சிவப்பு, ஆடு, வெட்சி என்று பல பொருள் உண்டு) குவளை: நீலோத்பலம், செங்காந்தள்: (விரல்களைப் போன்று இதழ்களை உடைய) சிவந்த காந்தள் மலர் |
| கூதாள மலரும் தொடுத்து அணியும் மார்பினன் கோலத் திருக் கை வேலே. | சங்குப் பூவையும் மாலையாகத் தொடுத்து அணியும் மார்பை உடைய கோலத்தானுடைய திருக்கையில் உள்ளதான வேலே அது. |

பந்து ஆடலில் ... பந்தாடும் போதும்,

கழங்கு ஆடலில் ... கழற்சிக்காய் ஆடும்போதும்,

சுடர் ஊசல் பாடலினொடு ... ஒளிபொருந்திய ஊஞ்சலில் ஆடியபடி பாடும்போதும்,

ஆடலில் எலாம் ... மற்ற கும்மி, கோலாட்டம் போன்ற எல்லாவகையான ஆட்டங்களின் போதும், (பாடுவது எதையென்றால்)

பழம் தெவ்வர் கட்கம் துணித்து ... தொன்மையான பகைவர்களான அசுரர்களுடைய வாளை(யும் வீரத்தையும்) வெட்டி வீழ்த்தி,

இந்திரற்கு அரசு பாலித்த திறல் பகழ்ந்தே ... (தேவலோக ஆட்சியை மீண்டும்) இந்திரனுக்கே வழங்கிய ஆற்றலைப் புகழ்ந்து,

சந்தம் ஆரு நாள் மலர் குழல் அரம்பையர் ... அழகு நிறைந்த புதிய பூக்களைக் குழலின் அணிந்தவர்களான தேவலோகப் பெண்களையும்

சசி மங்கை ... இந்திராணியையும்

அனையர் ... ஒத்திருக்கும் பெண்கள்

தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ராதாபமும் ... தன்னை
அன்போடு புகழ்ந்து பாடி நடனம் புரிகின்ற கீர்த்தியையும்,

தலைமையும் ... ஆதிபத்யத்தையும்,

பெற்ற வை வேல் ... தன்னகத்தே பெற்ற கூரிய வேலாயுதம்

(தேவலோகப் பெண்களையும் இந்திராணியையும் ஒத்திருக்கும் பெண்கள் பந்தாடும் போதும், கழங்காடும் போதும், ஊஞ்சலாடும் போதும், மற்ற ஆட்டங்களின் போதும், அரக்கர்களை வீழ்த்தி, தேவலோக ஆட்சியை இந்திரனுக்கே திரும்ப வழங்கிய புகழைப் பாடுவதான கீர்த்தி நிறைந்ததான கூர்மையான வேல். இப்படிப்பட்ட வேல் யாருடையதோ என்றால்,)

மந்தாகினி தரங்க ... அலை வீசுவதாகிய கங்கையை

சடிலருக்கு ... ஜடா முடியில் தரித்திருக்கும் சிவ பெருமானுக்கு,

அரிய மந்த்ர உபதேசம் நல்கும் ... அரிதான பிரணவ மந்திரத்தை உபதேசித்த,

வர தேசிகன் ... சிறந்த ஆசார்யனானவனும் (தகப்பன் சாமியானவனும்),

கிஞ்சுக சிகா அலங்கார ... சிவந்த நிறமுள்ள கொண்டையை உடைய,

வாரண கொடி உயர்த்தோன் ... சேவற் கொடியை உயர்த்திப் பிடித்திருப்பவனும்,

கொந்து ஆர் மலர்க் கடம்பும் ... பூங்கொத்துக்கள் நிறைந்த கடப்ப மாலையையும்

செச்சை மாலை ... வெட்சி மாலையையும்,

குவளையும் செம் காந்தளும் ... நீலோத்பலத்தையும் சிவந்த காந்தள் பூவையும்,

கூதாள மலரும் ... நீலச் சங்கு புஷ்பத்தையும்,

தொடுத்தணியும் மார்பினன் ... மாலையாகத் தொடுத்து அணிந்திருக்கும் திருமார்பினை உடைய முருகப் பெருமானின்,

கோல திருக் கை வேலே ... அழகியத் திருக் கரத்தில் வீற்றிருக்கும் வேலாயுதமே.

பலவகையான ஆட்டங்களில் ஈடுபடும் பெண்கள் முருகனுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டே ஆடுகிறார்கள். அவனுடைய கையிலுள்ள வேல், இப்படிப்பட்ட பிரதாபங்களுக்கு உரியதாக இருக்கிறது. இந்த வேலே இந்திரனுக்கு அவன் இழந்த பதவியைப் பெற்றுத் தந்தது என்று சிறுமியர் தங்கள் ஆட்டத்தின்போது பாடும் பாடல்களில் போற்றிப் பாடுகிறார்கள்.

இழந்தனவற்றை மீட்டுத் தரும் வேல் என்பது சுருக்கம். சென்னையில் வல்லக்கோட்டையில் உறையும் முருகப் பெருமானுக்கு ‘இழந்த செல்வங்களை மீட்டுத் தரும் வல்லக்கோட்டையான்’ என்றே பெயர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
தினப்பலன்கள் - கும்பம்
வழிகாட்டி உதவுங்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை